Jio-வுக்கு ரிவீட் வைத்த Airtel: டிசம்பர் முழுக்க அன்லிமிடெட் இலவச 5ஜி.. 1 மாத வேலிடிட்டி.. 15+ OTT..
இந்த 2023ம் ஆண்டு எப்படி இவ்வளவு வேகமாக பயணித்தது என்றே நமக்கு தெரியவில்லை. அதற்குள் இந்த ஆண்டின் கடைசி மாதத்திற்குள் நுழைந்துவிட்டோம். ஏர்டெல் (Airtel) நிறுவனம் இந்த இறுதி மாதத்தை டென்ஷன் இல்லாமல் கடந்து செல்ல 1 மாத வேலிடிட்டி திட்டத்தை வெளியிட்டுள்ளது.
நாளை முதல் டிசம்பர் (December) மாதத்திற்குள் கால்பதிக்கிறோம். இந்த வருடத்தின் இறுதி மாதத்தை எந்த டென்ஷானும் உள்ளம் கடந்து செல்ல, ஏர்டெல் நிறுவனம் அதன் பயனர்களுக்கு இப்போது முழுமையான 1 மாத வேலிடிட்டி (1 month validity plan) உடன் செல்லுபடியாகும் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஏர்டெல்லின் 1-மாத செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டங்களில் நீங்கள் ரீசார்ஜ் செய்து, 30 நாள் முழுக்க நீங்கள் தொடர்ந்து இணைந்திருக்க முடியும்.

நீங்கள் புதிய ஆண்டின் தொடக்கத்தில் இருந்து புதிதாக ஒரு வருடாந்திர திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்யக் காத்திருக்கும் ஒருவராக இருந்தால், இப்போது 1 மாத ரீசார்ஜைத் தேர்வு செய்து சாமர்த்தியமாக இந்த ஆண்டின் இறுதியை கடந்து செல்லலாம். இன்று முதல் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஏர்டெல்லின் 1 மாதாந்திர செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்:
1. ஏர்டெல் ரூ. 319 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 319 Prepaid Plan):
ஏர்டெல்லின் ரூ.319 திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையுடன் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையுடன் தினமும் 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மையோடு வருகிறது. இந்த திட்டத்துடன் கிடைக்கும் 2ஜிபி க்கு பிறகு 64 கேபிஎஸ் வரையிலான டேட்டா வேகம் வழங்கப்படும். இவை அனைத்தும் 1 மாதம் வேலிடிட்டி உடன் வருகிறது.
ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளாக, இத்துடன் ஏர்டெல் 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் பகுதிகளில் அன்லிமிடெட் 5G டேட்டாவையும் பயனர்கள் எந்த வரம்புமின்றி அனுபவிக்க முடியும். இத்துடன் Apollo 24 / 7 சர்க்கிள் உறுப்பினர் 3 மாத சந்தா, இலவச ஹெலோட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் நன்மையுடன் வருகிறது.
2. ஏர்டெல் 359 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 359 Prepaid Plan):
ஏர்டெல் 359 ப்ரீபெய்ட் திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 2.5 ஜிபி டேட்டா, தினசரி டேட்டா முடிந்த பிறகு டேட்டாவின் வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும். இந்த திட்டம் தினமும் 100 எஸ்எம்எஸ் (SMS) மற்றும் ரூ. 5 டாக்டைம் ஆகியவற்றுடன் வருகிறது. ஏர்டெல் தேங்க்ஸ் நமையாக இத்துடன் பயனர்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டா இலவச நன்மையும் கிடைக்கிறது.
ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) 15+ OTT பயன்பாடுகளுடன் 28 நாட்கள் செல்லுபடியாகும் ott நமையுடன் வருகிறது. இந்த திட்டத்துடன் Apollo 24 by 7 Circle மெம்பர்ஷிப், விங்க் மியூசிக் (Wynk Music), மற்றும் இலவச ஹெலோடியூன்ஸ் (Hellotunes) நன்மை போன்றவை கிடைக்கிறது.
3. ஏர்டெல் ரூ. 509 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 509 Prepaid Plan):
ஏர்டெல் ரூ. 509 திட்டம் 1 மாத வேலிடிட்டியை வழங்கும் மொத்தத் திட்டப் பிரிவின் கீழ் வருகிறது. இது பயனர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்ஸ் நன்மை, 60 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் போன்ற நன்மையுடன் வருகிறது. ஏர்டெல் தேங்க்ஸ் (Airtel Thanks) ரிவார்டுகளின் கீழ், ஏர்டெல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா இலவசமாக கிடைக்கிறது. மற்ற திட்டங்களில் கிடைக்கும் அணைத்து இலவச நன்மைகளும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications