இனி விமானங்களில் பயணிக்க "டிக்கெட்" தேவையில்லை!!

Posted By: Staff
இனி விமானங்களில் பயணிக்க

 

விமானப்பயணிகள் இனிமேல் டிக்கெட்களை பிரதி எடுத்துச்செல்லவேண்டியது இல்லையென விமானப்படைக்கான பாதுகாப்பு பிரிவான BACS தெரிவித்துள்ளது.

 

BACS-ன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இனிமேல் விமானங்களில் பயணம் செய்பவர்கள் ரசீதுகளை "பிரிண்ட்" எடுத்துச்செல்ல தேவையில்லை. ஆனால் டிக்கெட் பதிவுசெய்ததற்கான புகைப்படத்தை மட்டும் மொபைல் போனில் சேகரிக்க வேண்டுமாம்.

 

அதிகாரிகள் கேட்க்கும்பொழுது அந்த குறிப்பிட்ட புகைப்படத்தை மட்டும் தெளிவாக காண்பித்தால் போதுமானதாகுமாம். மேலும் இந்த ரசீதின் புகைப்படமும் மிகத்தெளிவாக இருப்பது அவசியம்.

 மின் உற்பத்தியை அதிகரிக்கப்போகும் “பேருந்து நிறுத்தங்கள்”

இந்த முறையை சென்னை விமானநிலையம் பின்பற்றிவருவது குறிப்பிடத்தக்கது. சென்னை விமானநிலையத்தில் ரசீதின் புகைப்படத்தை மொபைல் போன் மூலமோ அல்லது டேப்லெட், லேப்டாப் மூலமோ காண்பித்தால் மட்டும் போதுமானதென்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க: ஃபேஸ்புக் அலுவலகங்கள்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot