செல்பிக்கு போஸ் மறுத்த விமானப்பணி பெண் மீது தாக்குதல்.!
இந்நிலையில், ஒரு சிலர் நமக்கு முன் பின் அறிமுகம் இல்லாமல் இருந்தாலும், அவர்கள் நாம் கேட்டவுமன் செல்பிக்கு போஸ் கொடுப்பார்கள். ஆனால் ஒரு சிலர் வேலை இருந்தால் தெரிந்தவர்களாக இருந்தாலும் இல்லை தெரியாதவர
நம் அத்தியாவசிய வாழ்கையில் செல்பி என்பது முக்கிய தேவையாகி விட்டது. இந்நிலையில் திரை பிரபங்களுடனும், கலை பொருட்கள், நம்முடன் தெரிந்தவர்கள், தெரியவாதவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்கின்றோம்.

இந்நிலையில், ஒரு சிலர் நமக்கு முன் பின் அறிமுகம் இல்லாமல் இருந்தாலும், அவர்கள் நாம் கேட்டவுமன் செல்பிக்கு போஸ் கொடுப்பார்கள். ஆனால் ஒரு சிலர் வேலை இருந்தால் தெரிந்தவர்களாக இருந்தாலும் இல்லை தெரியாதவர்களாக இருந்தாலும் செல்பிக்கு போஸ் கொடுக்க மறுத்து விடுவார்கள்.
இந்நிலையில் செல்பிக்கு போஸ் தரமறுத்த இளம் பெண் மீது கொலை வெறியுடன் தாக்குதல் நடத்தியுள்ளார்கள் இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமான நிலையம்:
விமான நிலையம் எந்த நாட்டில் இருந்தாலும் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். இந்நிலையில் அங்கு விமானிகளும் விமான பணி பெண்களும் பிஸியாகத்தான் இருப்பார்கள். அவர்கள் விமான நிலையத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்தாலும் வேலை நியமித்தமாகத்தான் இருப்பார்கள்.

செல்பியால் பயணிகள் தொந்தரவு:
விமான நிலையத்திற்கு சென்றாலும், பயணிகள் செல் போனுடன் செல்பி எடுப்பது என்பது தொடர்ந்து வருகின்றது. இதில் அவர்கள் பிரபங்களுடன் எடுத்தாலும், அவர்கள் வேலை இருந்தாலே இல்லை கோபத்துடன் இருந்தாலோ தட்டி விட்டு சென்றுவிடுவார்கள்.
இந்நிலையில், விமானகளையும், விமானப்பணி பெண்களையும் அவர்கள் செல்பிக்கு போஸ் தறுமாறு கொந்தாரவு செய்கின்றார்கள். இதில் ஒரு சிலர் செல்பிக்கு போஸ் கொடுகின்றனர். ஒரு சிலர் தர மறுக்கின்றனர்.

விமானப் பணிப்பெண் மீது தாக்குதல்:
விமானப் பணிப்பெண் செல்பிக்கு போஸ் தர மறுத்தால் குடிபோதையில் அப்பெண்ணை உதைத்து கீழே தள்ளி தாக்கியவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

செல்பியால் வந்த வினை:
வியட்னாமின் தன் ஹோவா ((Tahn hoa))-வில் உள்ள தோ சுவான் ((Tho Xuan)) விமான நிலையத்தில் வியட்ஜெட் ஏர் நிறுவனப் பணிப்பெண்ணாக உள்ளவர் லெ தி ஜியாங் ((Le Thi Giang)). இவரை அணுகிய மூன்று பயணிகள் தன்னுடன் செல்பி எடுக்க வேண்டும் எனக் கோரினர். சரி என சம்மதித்து படம் எடுத்த சிறிது நேரத்தில் மீண்டும் வந்து மற்றொரு செல்பி எடுக்க வேண்டும் என கோரினர்.

கொலை வெறி தாக்குதல்:
தான் தற்போது பணியில் இருப்பதாக அப்பெண் மரியாதையுடன் பதிலளித்து மறுத்த நிலையிலும், அவரை உதைத்து கீழே தள்ளி வசைபாடியதோடு கடுமையாகத் தாக்கினர்.
இச்சம்பவத்தை அடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு முறையே மூன்று ஆண்டுகள், 2 ஆண்டுகள் 10 மாதம், 1 ஆண்டு 10 மாதம் என சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications