நிலைமை இன்னும் மோசமாகும்; ஏர்செல் ஊழியர்களுக்கு எச்சரிக்கை.!

ஏர்செல் நிறுவனத்தின் இந்த மோசமான நிலைப்பாடு ஆனது இன்னும் கீழ் இறங்கும் என்பதை வெளிப்படுத்தும் ஒரு விஷயம் நடந்துள்ளது.

|

ஏர்செல் நிறுவனமானது மிக மோசமான நிலைமையில் இருக்கிறது என்பதை நாம் அனைவருமே அறிவோம்.

இந்த வரலாறு காணாத பின்னடைவை ஏர்செல் நிறுவனமானது, பொதுவெளியில் ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும் கூட, நாடு முழுவதும் உள்ள ஏர்செல் வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளலும் கால் ட்ராப் (Call Drop) சிக்கல் மற்றும் சிக்னல் பிரச்சினைகள் போன்றவைகளை ,மறைக்கவோ அல்லது மறுக்கவோ முடியாது என்பது வெளிப்படை.!

ஏர்செல் நிறுவனத்தின் இந்த மோசமான நிலைப்பாடு ஆனது இன்னும் கீழ் இறங்கும் என்பதை வெளிப்படுத்தும் ஒரு விஷயம் நடந்துள்ளது.

ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்.!

ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்.!

இந்த வாரம் முன்னதாக, ஏர்செல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கைஸத் ஹீர்ஜி, தனது 5000-க்கும் அதிகமான ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் "விஷயங்கள் இன்னும் மோசமாக முன்னோக்கி செல்கின்றன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ போன்ற.!

ரிலையன்ஸ் ஜியோ போன்ற.!

கடந்த ஆறு மாதங்களில், ஏர்செல் நிறுவனம் எந்தவொரு நிதியுதவியையும் பெறவில்லை. இது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ போன்ற போட்டியிடும் இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களை சமாளிக்க முடியாத ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

கிடைக்கும் பணத்தை வைத்தே.!

கிடைக்கும் பணத்தை வைத்தே.!

அதை உணர்த்தும் வண்ணம் "நமக்கு எந்தவிதமான நிதியுதவியும் கிடைக்கவில்லை, சிலசமயம் நாம் நமது வியாபாரத்தின் வழியாக கிடைக்கும் பணத்தை வைத்தே செயல்பட வேண்டியதாய் இருக்கிறது" என்கிற வரிகள், தலைமை நிர்வாக அதிகாரி கைஸத் ஹீர்ஜி அனுப்பிய மின்னஞ்சலில் இருக்கிறது.

சந்தையில் நிதி அழுத்தம்.!

சந்தையில் நிதி அழுத்தம்.!

மேலும் அந்த மின்னஞ்சலில், "சந்தையில் நிதி அழுத்தமும், போட்டியும் திவீரகமாகி கொண்டே போவதால், நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். ஏர்செல் நிறுவனம் வரவிருக்கும் நாட்களானது இன்னும் கடினமானதாக மற்றும் மோசமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள்.!

மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள்.!

நிதி சூழ்நிலைகள் தான் ஏர்செல் நிறுவனத்தின் நடவடிக்கைகளை பாதித்திருப்பதாகவும், அதனாலேயே தான் நாடு முழுவதுமான நெட்வொர்க் செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும். அதன் விளைவாக மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றும் கைஸத் ஹீர்ஜி தெரிவித்துளார்.

மொபைல் நம்பர் போர்டிங் செய்யும்  திறன்.?

மொபைல் நம்பர் போர்டிங் செய்யும் திறன்.?

சமீப காலமாக, ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் உள்ள பல ஏர்செல் வாடிக்கையாளர்கள் நெட்வொர்க் பிரச்சினையை எதிர்கொண்டு வருவதும், உடன் ஏர்செல் பயந்தர்களுக்கு கைமுறையாக மொபைல் நம்பர் போர்டிங் செய்யும் திறன் கூட வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை.!

வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை.!

கடந்த டிசம்பர் 31, 2017 வரையிலாக, ஏர்செல் நிறுவனத்திடம் மொத்தம் 84 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளன. இந்த எண்ணிக்கையானது வரும் நாட்களில் நிச்சயம் குறைக்கப்படும். இதில் சோகமான பகுதி என்னவென்றால், ஏர்செல் தனது மோசமான நிலைமையை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை என்பது தான். ஏர்செல் நிறுவனத்தின் ட்விட்டர் தளமானது, நெட்வொர்க் தொடர்பான கேள்விகளால் நிறைந்துள்ளது. ஆனால் நிறுவனமோ இதை 'தொழில்நுட்ப சிக்கல்' என்று கூறியுள்ளது.

யூனிக் போர்ட்டிங் கோட்.!

யூனிக் போர்ட்டிங் கோட்.!

ஏர்செல் விரைவாக செயல்பட வேண்டும் அல்லது குறைந்தபட்சம் வாடிக்கையாளர்களுக்கான யூனிக் போர்ட்டிங் கோட் (Unique Porting Code) ஒன்றை உருவாக்க அனுமதிக்க வேண்டும். அப்படி செய்தாலாவது, பயனர்கள் இதர நிறுவனங்களை அணுகி, தங்களுக்கான சேவைகளை அனுபவிப்பார்கள். ஆனால், ஏர்செல் நிறுவனமோ, இந்த இரண்டில் எதையுமே செயல்படுத்தும் நிலையில் இல்லை.

Best Mobiles in India

English summary
Aircel Warns Employees of Difficult Times Ahead, Expecting Things to Get Even More Worse. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X