இந்த ஆண்டு இறுதியில் 4ஜி சேவையை துவங்கும் ஏர்செல்!

Posted By: Karthikeyan
இந்த ஆண்டு இறுதியில் 4ஜி சேவையை துவங்கும் ஏர்செல்!

தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் மொபைல் சேவையை வழங்கிவரும் ஏர்செல் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் 4ஜி சேவையை துவங்க இருக்கிறது.

அதற்காக ஏறக்குறைய 500 மில்லியன் அமெரிக்கா டாலர்களை அதாவது இந்திய மதிப்பில் ரூ.2,757 கோடியை முதலீடு செய்ய இருக்கிறது. இதன் மூலம் வரும் அக்டோபரிலிருந்து டிசம்பருக்குள் இந்தியா முழுவதும் இந்த 4ஜி சேவையை ஏர்செல் தொடங்கும். குறிப்பாக சென்னை உட்பட தமிழகத்தின் மற்ற மாநகரங்களிலும் இந்த சேவையை தொடங்கிவிடும்.

ஏர்செல் இந்தியவில் 8 பகுதிகளுக்கான ஸ்பெக்ட்ரம் உரிமையை வைத்திருக்கிறது. மலேசியன் டெல்கோ மேக்சஸ் பெர்ஹெட் நிறுவனம்தான் ஏர்செல்லின் பெரும்பாலான பங்குகளை வைத்திருக்கிறது. இந்நிறுவனத்தின் தலைவர் சந்தீப் தாஸ் கூறுகையில் மிகப் பெரிய அளவில் டேட்டா வர்த்தகத்தை நடத்துவதே தமது நிறுவனத்தின் நோக்கமாக இருக்கிறது என்று கூறுகிறார்.

மேலும் இன்டர்நெட், ப்ராட்காஸ்டிங், வீடியோ, கல்வி மற்றும் சுகாதாரம் போன்றவற்றிற்கான சேவைகளை வழங்க தமது நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.

சமீபத்தில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு போன்ற இடங்களில் இந்த 4ஜி சேவையை ஏர்டெல் நிறுவனம் ஆரம்பித்திருக்கிறது. அதன் மூலம் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பல நல்ல வசதிகளைப் பெற்று வருகின்றனர்.

ஏர்செல்லின் இந்த புதிய 4ஜி சேவை மூலம் அதன் வாடிக்கையாளர்கள் ஏராளமான சேவைகளைப் பெற முடியும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot