அறிமுகம்: ஏர்செல் + அவாஸ்ட் கூட்டணியில் வெறும் ரூ.30/-க்கு ஆன்டி-வைரஸ் சந்தா.!

|

இன்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (IAMAI) நடத்திய சமீபத்திய ஆய்வின் படி, 77% நகர்ப்புற பயனர்கள் மற்றும் 92% கிராமப்புற பயனர்கள் இணைய அணுகலுக்கான முதன்மை சாதனமாக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றன (கம்ப்யூட்டர்கள் எல்லாம் மலையேறி விட்டது போலும்).!

ஏர்செல் + அவாஸ்ட் கூட்டணியில் வெறும் ரூ.30/-க்கு ஆன்டி-வைரஸ் சந்தா.!

இதுவொருபக்கம் நல்ல செய்தியாக இருப்பினும், மறுபக்கம் மொபைல் சாதனங்களுக்கு இடையே பகிர்ந்து கொள்ளப்படும் அதிகப்படியான டேட்டாவானது மொபைல் டிராஃபிக் ஆபத்துகளை அதிகரிக்கும். அதன் விளைவாய் ஆன்டி-வைரஸ் தொடங்கி செயல்திறன் குறைவு ஆகியபல சிக்கல்களை பயனர்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது.

ஏர்செல் உறுதி.!

ஏர்செல் உறுதி.!

இதனை மனதிற்கொண்டு ஏர்செல் நிறுவனம் அவாஸ்ட் நிறுவனத்துடன் கூட்டணி வைத்து புதிய சலுகையொன்றை அறிவித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் டேட்டா செயல்திறன் உறுதி செய்யப்படுவதோடு, அவர்களின் சாதனங்களில் உள்ள தகவலைப் பாதுகாக்கவும், சிறந்த தகவல் பரிமாற்றத்தையும் ஏர்செல் உறுதி செய்துள்ளது.

டிஜிட்டல் செக்யூரிட்டி தயாரிப்பு.!

டிஜிட்டல் செக்யூரிட்டி தயாரிப்பு.!

இந்தியாவின் முன்னணி மொபைல் சேவை வழங்குனர்களில் ஒருவரான ஏர்செல் நிறுவனம், உலகம் முழுவதும் 400 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள, டிஜிட்டல் செக்யூரிட்டி தயாரிப்புகளின் உலகளாவிய நிறுவனமான அவாஸ்ட் உடன் இணைந்து அதன் 80 மில்லியன் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு புதிய மொபைல் செக்யூரிட்டி சலுகையை அறிவித்துள்ளது.

செக்யூரிட்டி மற்றும் அவாஸ்ட் கிளீனிங்.!

செக்யூரிட்டி மற்றும் அவாஸ்ட் கிளீனிங்.!

அதாவது ஏர்செல் நிறுவனம் அவாஸ்ட் மொபைல் செக்யூரிட்டி மற்றும் அவாஸ்ட் கிளீனிங் (Avast Mobile Security and Avast Cleanup) பயன்பாட்டை அறிவித்துள்ளது. இதுவொரு செயல்திறன் தேர்வுமுறை பயன்பாடு (Performance optimization application) என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்செல் கிளீனர்.!

ஏர்செல் கிளீனர்.!

தற்போது ஏர்செல் வாடிக்கையாளர், ஏர்செல் ஆண்டி-வைரஸை மாதத்திற்கு வெறும் ரூ.30/-க்கு அணுக முடியும். அனைத்து புதிய ஏர்செல் பயன்பாட்டிலிருந்து வருடாந்திர கட்டணமாக வெறும் ரூ.205/-க்கும் வாங்க முடியும். உடன் ஸ்மார்ட்போன் செயல்திறனை மேம்படுத்துவதற்கான ஏர்செல் கிளீனர் பயன்பாடும் மாதத்திற்கு வெறும் ரூ.30/-க்கு கிடைக்கும்.

மொபைல் சாதனமும், தரவு பாதுகாப்பும்.!

மொபைல் சாதனமும், தரவு பாதுகாப்பும்.!

"சமீப காலமாக, தரவு மீறல் மற்றும் அதன் சட்டவிரோதப் பயன்பாடு ஆகியவை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பாதிக்கின்றன. ஒரு பொறுப்பான டிஜிட்டல் டெலிகாம் நிறுவனமாக, நாங்கள் பயனர்களின் பிரச்சனைகளை அறிந்திருக்கிறோம், மொபைல் சாதனமும், தரவு பாதுகாப்பும் ஒரு முக்கிய வணிக முன்னுரிமையாக கொண்டுள்ளோம்"

ஏர்செல் ஆன்டி-வைரஸ்.!

ஏர்செல் ஆன்டி-வைரஸ்.!

"எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கும், பங்குதாரர் நெட்வொர்க்குக்கும் தரவு பாதுகாப்பு தீர்வின் மிக உயர்ந்த தரத்தை வழங்குவதை உறுதி செய்கிறோம். ஏர்செல் ஆன்டி-வைரஸ் பயன்பாட்டின் மூலம் தங்கள் சாதனத்தை மட்டுமல்லாமல் மிக முக்கியமான தரவுகளையும் வாடிக்கையாளர்களால் பாதுகாக்க முடியும்" என்று அவாஸ்ட் நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரியான அனுப்பம் வாசுதேவ், இந்த கூட்டணி பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Aircel Teams Up With Avast and Offering Aircel Anti Virus Subscription at Just Rs 30 Per Month. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X