ஐபோனுக்காக, ஏர்செல் ஸ்டோர்களில் குவியும் கூட்டம்!

Posted By: Staff
ஐபோனுக்காக, ஏர்செல் ஸ்டோர்களில் குவியும் கூட்டம்!

ஆப்பிளின் ஐபோன் 3-ஜி-எஸ் என்ற ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் ஏர்செல் நிறுவனம் வழங்குவதாக ஒரு செய்தி பார்த்தோம். இது அனைவராலும் நம்பவே முடியாத ஒரு விஷயம்.

நேற்று வெளியான இந்த செய்தி ஒரு பெறும் பரபரப்பையே உருவாக்கிவிட்டது. ஏனெனில் ஆப்பிள் நிறுவனத்தின் தறமான படைப்பு, உலகம் அறிந்த விஷயம்.

கடந்த 2011-ஆம் ஆண்டு கூட இந்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை பெரிதும் ஈர்த்த ஒரு ஸ்மார்ட்போன்.

இன்னும் கூட இந்த ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனுக்கு ஏக வரவேற்பு குவிந்த கொண்டே இருக்கிறது. இத்தகைய இந்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 3-ஜி-எஸ் என்ற ஸ்மார்ட்போனை ரூ, 9,999 விலையில் கொடுக்கிறது ஏர்செல் நிறுவனம். இந்த செய்தி நேற்று வெளியானதொன்று தான் தாமதம்.

ஏர்செல் ஸ்டோர்களில் இந்த ஐபோன் 3-ஜி-எஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதற்கு அளவே இல்லை.

அப்படி முந்தியடித்து கொண்டாலும் நிறைய பேருக்கு இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கவில்லை. இன்னும் சில ஸ்டோர்களில் ஸடாக் இல்லை என்றும் கூட சில வாடிக்கையாளர்கள் திரும்பியிருக்கிறார்கள்.

இது பற்றி தகல்களை முழுதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் 121 என்ற ஏர்செல் எண்ணிற்கு அழைத்து விவரம் அறியலாம். அல்லது 5800 000 என்ற (டோல் ஃப்ரீ) எண்ணிற்கு மெசேஜ் செய்தும் விவரம் அறியலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot