ஏர்செல் : புதிய 3 மாத கால அன்லிமிடெட் வாய்ஸ் கால் திட்டம், எவ்வளவு தெரியுமா.?

Written By:

ஏர்டெல், ஏர்செல், டோகோமோ, ஐடியா, பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் என நீங்கள் இந்தியாவின் எந்தவொரு தொலைத்தொடர்பு சேவையை பயன்படுத்தினாலும் சரி நீங்கள் கண்டிப்பாக புதிய வரவான ரிலையன்ஸ் ஜியோ சேவைக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

ஏனெனில் நீங்கள் தற்போது இருக்கும் நெட்வர்க்குகள் உங்களுக்கான சிறப்பு திட்டங்களையும் சலுகைகளையும் அள்ளி அள்ளி வழங்க ஆதிமூல காரணமாய் திகழ்வது - ரிலையன்ஸ் ஜியோவின் மலிவான சேவை தான்.!

வாடிக்கையாளர்கள் ஆகிய நீங்கள் ஜியோவின் கவர்ச்சிகரமான சேவைக்குள் ஈர்க்கப்பட்டுவிடக்கூடாது என்ற முக்கியமான காரணத்தினாலேயே தான் புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் அனுதினமும் முளைத்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு ஏர்டெல் உட்பட எந்த விதமான நெட்வர்க்குமே விதிவிலக்கல்ல.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
அன்லிமிடெட் வாய்ஸ் கால்

அன்லிமிடெட் வாய்ஸ் கால்

சமீபத்தில் ஏர்டெல், அதனை தொடர்ந்து ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்களின் இந்தியா முழுவதிலுமான எந்த நெட்வர்க் உடனான வரம்பற்ற குரல் அழைப்பு (டேட்டா உடன்) திட்டங்களை அறிமுகம் செய்திருந்தது. இப்போது ஏர்செல் அதன் புதிய 3 மாத கால அன்லிமிடெட் வாய்ஸ் கால் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

விலை ரூ.148/-

விலை ரூ.148/-

கடந்த திங்களன்று ஏர்செல் அதன் தில்லி என்.சி.ஆர் வட்டங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் எப்ஆர்சி48 என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது, இந்த புதிய ஏர்செல் திட்டத்தின் விலை ரூ.148/- ஆகும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

நன்மைகள்

நன்மைகள்

இந்த திட்டத்தின் நன்மைகள் மூன்று மாதங்களுக்கு அல்லது 90 நாட்கள் வரை செல்லுபடியாகும். அது தவிர இந்த திட்டம் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் ஆன்-நெட் அழைப்புகளை வழங்குகிறது (அதாவது, ஏர்செல் டூ ஏர்செல் அல்லாத ஆப்-நெட் மற்றும் தரவு நன்மைகளை தவிர்த்து)

15,000 வினாடிகள்

15,000 வினாடிகள்

ஆப்-நெட் (அதாவது ஏர்செல்-டூ-இதர நெட்வர்க்) சலுகைகளை பொருத்தவரை இந்த ஏர்செல்-ன் புதிய திட்டம் மாதத்திற்கு 250 நிமிடங்கள் (அதாவது மாதத்திற்கு 15,000 வினாடிகள்) இலவச அழைப்புகளை வழங்குகிறது. இலவச பயன்பாடு காலம் முடிவடைந்ததன் பின்னர், ஆப்-நெட் அழைப்பு கட்டணம் ஆனது 0.30பைசா /நிமிடம் என்று மாற்றியமைக்கப்படும்.

வரம்பற்ற 2ஜி

வரம்பற்ற 2ஜி

தரவு நன்மைகளை பொருத்தவரை ஏர்செல் நிறுவனம் எப்ஆர்சி148 திட்டம் மூலம் ஒரு மாத கால வரம்பற்ற 2ஜி தரவு கொடுக்கிறது, ஆனால் அந்த தரவு 500எம்பி என்ற நல்ல பயன்பாட்டுக் கொள்கையின் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜியோ இலவச சலுகைகளை தவிடு பொடியாக்கியது ஏர்டெல்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Aircel’s New FRC148 Prepaid Plan Offers Unlimited Free Voice Calling for 3 Months. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot