ஜியோவை விட மலிவான விலையில் 2ஜிபி/நாள் திட்டத்தை அறிவித்த ஏர்செல், ஆனால்.!
இருப்பினும் இந்த திட்டத்தில் சில பின்னடைவுகள் உள்ளன.
"ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்" என்பது போல ஜியோவினால் இந்திய தொலைத்தொடர்பு சந்தைக்குள் ஏற்பட்ட புரட்சியினால் நிறுவனங்க லாபம் அடைகின்றனவோ இல்லையோ - வாடிக்கையாளர்களையே நாம் மலிவு விலை திட்டங்களுக்குள் மூழ்கி திளைக்கிறோம்.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவிற்கு எதிராக ஒவ்வொரு நாளும் வெளியாகும் திட்டங்கள் இந்த சந்தைப்போட்டியின் சுவாரசியத்தை அதிகரித்துகொன்டே போகிறது. இந்நிலைப்பாட்டில், ஏர்செல் நிறுவனம் தன் பங்கிற்கு ஒரு அதிரடியான சலுகையை அறிவித்துள்ளது.

மலிவான விலையில்.!
ஏர்டெல், பிஎஸ்என்எல், ஐடியா மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்களின் பாதையை பின்பற்றி ஜியோவிற்கு எதிரான தனது 2ஜிபி டேட்டா திட்டத்தை ஏர்செல் அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே ஜியோ இதேபோன்ற நாள் ஒன்றிற்கான 2ஜிபி டேட்டாவை ரூ.509/- என்ற விலைக்கு வழங்குகிறதென்பது குறிப்பிடத்தக்கது.

அதிக வேலிடிட்டி.!
தற்போது ஏர்செல், அதே அளவிலான டேட்டா திட்டத்தை ஜியோவை விட மலிவான விலையில், அதாவது ரூ.419/-க்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் ஜியோவின் ரூ.509/ பேக்கை விட அதிக வேலிடிட்யும் கொண்டுள்ளது (ஜியோவின் ரூ.509/- திட்டமானது 56 நாட்களுக்கு செல்லுபடியாகும்).

ஒட்டுமொத்தமாக 168 ஜிபி டேட்டா.!
இந்த திட்டத்தின் கீழ், பயனர்கள் நாள் ஒன்றுக்கு 2ஜிபி தரவு கிடைக்கும். ஆக, இந்த ரூ.419/- பேக்கின் கீழ் பயனர்கள் ஒட்டுமொத்தமாக 168 ஜிபி டேட்டாவை பெறலாம்; உடன் எந்தவொரு பிணையத்திற்குமான குரல் அழைப்புகளையும் இலவசமாக அனுபவிக்கலாம். இருப்பினும் இந்த திட்டத்தில் சில பின்னடைவுகள் உள்ளன.

மூன்று பின்னடைவுகள்.!
ஏர்செல் நிறுவனத்தின் இந்த புதிய திட்டம் 2ஜி மற்றும் 3ஜி டேட்டாவை வழங்கும், ஜியோவை போல 4ஜி டேட்டாவை வழங்காதென்பதும், இந்த புதிய திட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கும் மட்டுமே தற்போது வரை கிடைக்குமென்பதும் இதன் பிரதான பின்னடைவுகளாகும். ஜியோவை போல் ஏர்செல் அதன் வாடிக்கையாளர்களுக்கு இலவச எஸ்எம்எஸ்-களை இந்த திட்டத்தின் கீழ் வழங்கவில்லை.

ஜியோவின் ரூ.509/-
மறுகையில் உள்ள ஜியோவின் ரூ.509/- திட்டத்தின் கீழ் பயனர்கள் நாள் ஒன்றுக்கு 2ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை பெறலாம். 56 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டம் மொத்தமாக 112 ஜிபியை பயனர்களுக்கு வழங்கும் உடன் எந்த நெட்வொர்க் உடனான இலவச குரல் அழைப்பு மற்றும் இலவச எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளையும் வழங்கும்.


Click it and Unblock the Notifications