அறிமுகம் : ஏர்செல் கேஷ்பேக் சலுகைகள் மற்றும் புதிய ரூ.146/ ரீசார்ஜ்.!

அமேசான் பே பேலன்ஸ் பயன்படுத்தி நிகழ்த்தப்படும் முதல் ரீசார்ஜ் மீது மட்டுமே இந்த கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது.

|

டெலிகாம் நிறுவனமான ஏர்செல், அமேசான் பே உடன் இணைந்து, அதன் குறிப்பிட்ட அன்லிமிடெட் திட்டங்களுக்கான ரூ.75/- கேஷ்பேக் சலுகையையும், உடன் ரூ.146/- மதிப்புள்ள புதிய ரீசார்ஜ் பேக் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது.

அறிமுகம் : ஏர்செல் கேஷ்பேக் சலுகைகள் மற்றும் புதிய ரூ.146/ ரீசார்ஜ்.!

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு இடையேயான கட்டண யுத்தம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ள நிலைப்பாட்டில் ஏர்செல் தன் இருப்பை காட்டிக்கொள்ளும் முயற்சியாகவும், வாடிக்கையாளர்களை தன்வசமே வைத்திருக்க விரும்பும் ஒரு நோக்கத்துடனும் இந்த இரண்டு சலுகைகளையும் அறிவித்துள்ளதென்பது வெளிப்படை.!

ரூ.75/- என்ற கேஷ்பேக்

ரூ.75/- என்ற கேஷ்பேக்

ரூ.75/- என்ற கேஷ்பேக் சலுகையை பொறுத்தமட்டில், ஏர்செல் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில அன்லிமிடெட் திட்டங்களை முதல் முறை ரீசார்ஜ் செய்யும் ரூ.75/- என்ற கேஷ்பேக் வாய்ப்பை பெறுவார்கள்.

நவம்பர் 16 வரை மட்டுமே

நவம்பர் 16 வரை மட்டுமே

இது நவம்பர் 16 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அமேசான் பே ஆனது ஏர்செல் நிறுவனத்தின் ஏராளமான வட்டாரங்களுக்கு ரூ.75/- கேஷ்பேக் செல்லுபடியாகும் திட்டங்களின் பட்டியலை பதிவு செய்துள்ளது. மற்ற ஏர்செல் திட்டங்களுக்கு, ரூ.50 கேஷ்பேக் கிடைக்கும்.

குறைந்தபட்சம் ரூ.100/-

குறைந்தபட்சம் ரூ.100/-

ஆனால், இந்த வாய்ப்பைப் பெறுவதற்கு பயனர்கள் குறைந்தபட்சம் ரூ.100/- ரீசார்ஜ் திட்டத்தையாவது தேர்ந்தெடுக்க வேண்டும். அமேசான் பே பேலன்ஸ் பயன்படுத்தி நிகழ்த்தப்படும் முதல் ரீசார்ஜ் மீது மட்டுமே இந்த கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

5ஜிபி

5ஜிபி

மறுகையில் ஏர்செல் அறிவித்துள்ள புதிய ரூ.146/- திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் சேர்த்து டேட்டா நன்மைகளையும் வழங்குகிறது. ரூ.146/- ஆனது 5ஜிபி அளவிலான 3ஜி / 2ஜி தரவை வழங்கும். இந்த ரீசார்ஜ் திட்டமானது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்

மொத்தம் 3000 நிமிடங்கள்

மொத்தம் 3000 நிமிடங்கள்

ஏர்செல் மொபைல் பயன்பாட்டில் பிரத்தியேகமாக கிடைக்கும். எவ்வாறாயினும், இதன் வரம்பற்ற குரல் அழைப்புகள் ஒரு நாளைக்கு 200 நிமிடங்கள், வாரத்திற்கு 1000 நிமிடங்கள் மற்றும் மொத்தம் 3000 நிமிடங்கள் என்ற வரம்பை கொண்டுள்ளதென்பது முக்கியம்.

Best Mobiles in India

English summary
The company has also announced a new plan for Rs 146 that offers unlimited calls along with data benefits.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X