ஜியோ எதிரோலி: ரூ. 76 க்கு ஏர்செல்லின் புதிய பேக்.!
ஜியோ எதிரோலி:ஏர்செல் அறிவித்த புதிய ஆபர்.!
ஜியோவுக்கு எதிரான போட்டியில் ஏர்செல் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் களம் இறங்கியுள்ளன. இந்தியாவில் அதிகப்படியான சலுகையை வழங்கியது ஜியோ தான். ஆனால் தற்போது ஏர்செல் மற்றும் ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் டேட்டா கட்டணத்தை குறைத்துள்ளது.
தற்போது ஏர்செல் அதிரடியாக ஒரு ஆபரை அறிவித்துள்ளது. ரூபாய் 76க்கு ரீசார்ஜ் செய்தால் 1ஜிபி வரை 3ஜி டேட்டா பெறமுடியும். இவை சந்தாதாரர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

ஏர்செல் ஆபர்:
தற்போது ஏர்செல் அறிவத்துள்ள ஆபர் என்னவென்றால் ரூபாய் 76க்கு ரீசார்ஜ் செய்தால் 1ஜிபி வரை 3ஜி டேட்டா வழங்குகிறது. இதன் பயன்பாடுகள் பொருத்தவரை 10 நாட்கள் மட்டுமே உபயோகம் செய்ய முடியும்.

ஏர்செல் ஆப்:
ஏர்செல் ஆப் பொருத்தமாட்டில் அனைத்து சந்தாதாரர் ஏர்செல் ஆப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். மேலும் அவற்றின் மூலம் அற்புதமான சலுகைகள் வாடிக்கையாளர்களின் முன்னோடி தேவைகளை ஏர்செல் நிறுவனம் வழங்கும்.

ஆப் பதிவிறக்கம்:
ஏர்செல் ஆப் பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகள் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 100எம்பி டேட்டாவை வழங்குவதன் மூலம் அதன் பயன்பாட்டின் பதிவிறக்கத்தை ஊக்குவிக்கிறது.

பிளே ஸ்டோர்:
தந்போது பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் பயன்படுத்தி ஏர்செல் ஆப் பெறமுடியும். இவற்றில் பல்வேறு ரீசார்ஜ்கள் செய்ய வசதியகா உள்ளது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏர்செல் திட்டங்கள்:
ஏர்செல் எப்போதும் தனது வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி ஆபர்களை வழங்கும், அவற்றின் திட்டங்கள்இ பயன்பாடு மற்றும் ஆர்வமுள்ள சேவைகள் ஆகியவை மக்களை மகிழ்விக்கும் வண்ணம் உள்ளது. என ஏர்செல் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி, வாசுதேவ் கூறினார்.

ஜியோ:
ஏர்செல் தீவிரமாக ஜியோவுக்கு எதிரான போரை உருவாக்கியுள்ளது. மேலும் ஏர்செல் நிறுவனம் ஆரம்பத்தில் ஜியோவிற்கு எதிராக மிகவும் தீவிரமாக போட்டியிடவில்லை . ஆனால் தற்போது பல ஆபர்களை அறிவித்து, அவை வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் உள்ளது.

ரோமிங்:
கடந்த மாதம் ரோமிங்கில் இலவச உள்வரும் அழைப்புகளை ஏர்செல் நிறுவனம் அறிவித்தது. ஏர்செல் நெட்வொர்க்குகள் மீது ரோமிங் செய்யும் போது இலவச உள்வரும் அழைப்புகள் செயல்படுத்த * 121 * 909 # டயல் செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications








