ஏர்செல் அறிமுகப்படுத்திய குறைந்தவிலை இன்டர்நெட் பிளான்...

Posted By:

இன்டர்நெட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் வகையிலும், அவர்கள் தொடர்ந்து பயன்படுத்தும் வகையிலும் ஏர்செல் நிறுவனம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியது. இதன்படி குறைக்கப்பட்ட விலையில் இன்டர்நெட் வசதிக்கான 2 ஜி தரவுகளை பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்செல் அறிமுகப்படுத்திய குறைந்தவிலை இன்டர்நெட் பிளான்...

குறைந்த கட்டணம் என்றால் எவ்வளவு என்கிறீர்களா? ரூ.24க்கு ரீசார்ஜ் செய்தால் 100எம்பி இன்டர்நெட் டேட்டாவை 30 நாட்கள் பயன்படுத்தும் வகையில் பெறலாம்..

100எம்பி அளவானது தீர்ந்துவிட்டால், மற்றுமொரு ரூ.24 பேக்கைப் போட்டு பயனாளர்கள் பயன்பெறலாம் என்கிறது. தற்பொழுது இந்த சலுகைவிலையானது 2ஜி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்வகையில் வெளியிட்டுள்ளது. விரைவில் 3ஜியிலும் கிடைக்குமாம்.

அற்புதமான போட்டோகிராஃபி... சுவாரஸ்யமான படங்கள்...

தமிழ்நாடு உள்பட வேறுசில மாநிலங்களிலும் இந்த ரூ.24 கார்டு வரும் ஏப்ரல் 24 முதல் கடைகளில் கிடைக்கும் எனவும் ஏர்செல் தரப்பு தெரிவித்துள்ளது.

'ஹி ஹி ஹி' வகை கண்டுபிடிப்புகளில் சில...

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்