தமிழ் நாட்டில் 4ஜி சேவைகளை துவங்கியது ஏர்செல் நிறுவனம்

Written By:

பிரபல தொலைதொடர்பு நிறுவனமான ஏர்செல் இன்று தமிழ்நாட்டில் 4ஜி் சேவைகளை துவக்கியது, ஒரே நிறுவனம் 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி சேவைகளை வழங்குவது ஏர்செல் மட்டும் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. 4ஜி சேவைகளை ஆந்திர பிரதேசம், பீகார், அஸ்ஸாம் மற்றும் ஒடிஸ்ஸா மாநிலங்களை தொடர்ந்து ஒரே மாதத்தில் தமிழ்நாட்டிலும் ஏர்செல் நிறுவனம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் நாட்டில் 4ஜி சேவைகளை துவங்கியது ஏர்செல்

பிராட்பேண்ட் வயர்லெஸ் அக்சஸில் ஏர்செல் நிறுவனம் 20 எம்எஹ்இசட் ஸ்பெக்ட்ரம்களை ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிஸ்ஸா, அஸ்ஸாம், வட கிழக்கு மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய எட்டு இடங்களில் வைத்துள்ளது.

தமிழ் நாட்டில் 4ஜி சேவைகளை துவங்கியது ஏர்செல்

இந்த ஸ்பெக்ட்ரம்கள் 4ஜி சேவைகளுக்கு பயன்படுத்த முடியும். ஏர்டெல் நிறுவனத்தை அடுத்து எர்செல் நிறுவனம் தான் எல்.டி.இ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றது. பிடபள்யுஏ ஸ்பெக்ட்ரம் தொழில்நுட்பத்தை மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் மட்டும் ஏர்செல் நிறுவனம் பயன்படுத்தாமல் உள்ளது. இதே ஸ்பெக்ட்ரத்தை ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம், டிக்கோனா டிஜிட்டல் மற்றும் ஆகுரி நிறுவனங்கள் சேவைகளை துவங்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Aircel today launched 4g Services in Tamil Naadu
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot