தமிழக வட்டத்தில் இரண்டு புதிய கட்டணத் திட்டங்களைத் தொடங்குவதன் மூலம், ஏர்செல் நிறுவனமும் இந்தியாவில் நிகழும் கட்டண யுத்தத்தில் பங்கெடுக்க தொடங்கியுள்ளது.

மூலம் : டெலிகாம்டால்க்.இன்ஃபோ
பெரிய அளவிலா புதிய திட்டங்களை அறிமுகம் செய்யாது அமைதியாக செயல்பட்டு வந்த டெலிகாம் ஆபரேட்டர்களில் ஒன்றான ஏர்செல் அதன் அனைத்து புதிய ரூ.154/- மற்றும் ரூ.2018/- ஆகிய இரண்டு ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த இரண்டு திட்டங்களின் நன்மைகள் என்ன.? செல்லுபடி காலம் என்ன.? இது ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் போன்ற நிறுவனங்களின் தொடர்ச்சியான திட்டங்களுடன் போட்டியிடுமா.?
இரண்டு திட்டங்களும் வரம்பற்ற குரல் அழைப்புகள்
அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் செல்லுபடியை பொறுத்தமட்டில், ரூ.154/ ஆனது ஒரு மாதாந்திர தொகுப்பு ஆகும் மறுகையில் உள்ள ரூ.2018/- ஆனது ஒரு ஆண்டு தொகுப்பாகும். இரண்டு திட்டங்களும் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.
2ஜிபி அளவிலான 2ஜி / 3ஜி தரவு
தரவு வழங்கலை பொறுத்தமட்டில், ரூ.154/- என்கிற மாதாந்திர கட்டணத் திட்டமானது, அதன் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் தவிர்த்து 2ஜிபி அளவிலான 2ஜி / 3ஜி தரவுகளை மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது.
ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலான டேட்டா
ரூ.2018/- என்கிற வருடாந்திர திட்டமானது சந்தையில் நிச்சயம் வெற்றி பெறும் என்றே தோன்றுகிறது. அதை ஏர்செல் நிறுவனமும் நம்புகிறது. 2018 ஆம் ஆண்டிற்கான திட்டமான வெளியாகியுள்ள ரூ.2018/- ரீசார்ஜ் ஆனது வரம்பற்ற குரல் அழைப்புகள் உட்பட ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலான டேட்டாவை மொத்தம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது.
மிகப்பெரிய ஏமாற்றம்
கவனிக்கத்தக்க வண்ணம், இந்த ஏர்செல் திட்டங்களில் வெளிச்செல்லும் ரோமிங் குரல் அழைப்பு நன்மையில் ஏர்செல் நெட்வொர்க்குக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டவை, மற்ற நிறுவனங்களுக்கு இடையே கிடையாது. இது வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையின் கீழ் நமக்கு கிடைக்கும் மிகப்பெரிய ஏமாற்றமாகும்.
மற்ற வட்டாரங்களில் எப்போது.?
இருப்பினும் ஏர்செல் வீட்டு வட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகளை அனுபவிக்க முடியும். கடந்த காலத்தில் வெளியான ஏர்செல் ஆண்டு திட்டங்களை விட இந்த ரூ.2018/- என்கிற கட்டண திட்டம் சிறந்தது என்பதில் ஐயமில்லை. இந்த புதிய ஏர்செல் திட்டங்கள் மற்ற வட்டாரங்களில் எப்போது துவக்கும் என்பயஜில் தெளிவில்லை
போட்டி
கடந்த 2017-ஆம் ஆண்டின் மார்ச் மாதம், ஏர்செல் அதன் ரூ.999/- என்கிற கட்டணத் திட்டத்தை வெளியிட்டது. அது 365 நாட்களுக்கு மொத்தம் 36ஜிபி அளவிலான 3ஜி தரவுகளை வழங்கியது. இதற்கு போட்டியாக ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஐடியா செல்லுலார் போன்ற மற்ற ஆபரேட்டர்கள் ரூ.3,999, ரூ 4,999 மற்றும் ரூ.3,999/- ஆகிய வருடாந்திர திட்டங்களை அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
Gizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.