ஏர்செல் மகா, மெகா ரீசார்ஜ் : இது தமிழ் நாட்டிற்கு மட்டும் தான்.!

Written By:

வாய்ஸ் மற்றும் டேட்டா என இரண்டையும் சம அளவு பயன்படுத்தும் பயனாளிகளைக் குறிவைத்து ஏர்செல் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஏர்செல் புதிய சலுகைகள் தமிழ் நாட்டுப் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏர்செல் அறிவித்திருக்கும் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை இங்குப் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
குறைப்பு

குறைப்பு

ஏர்செல் புதிய திட்டம் 'லிமிட் சி ஸ்யாதா' என்ற வடமொழி பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காம்போ சலுகைகளான இவற்றின் மூலம் இரண்டு ரீசார்ஜ் திட்டங்கள் இருக்கின்றன. அவை MAHA ரீசார்ஜ் மற்றும் MEGA ரீசார்ஜ் என அழைக்கப்படுகின்றன.

மகா ரீசார்ஜ்

மகா ரீசார்ஜ்

லிமிட் சி ஸ்யாதா MAHA ரீசார்ஜ் கட்டணம் ரூ.777/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு ரூ.700 டாக்டைம் மற்றும் 7ஜிபி அளவு 3ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மெகா ரீசார்ஜ்

மெகா ரீசார்ஜ்

லிமிட் சி ஸ்யாதா MEGA ரீசார்ஜ் கட்டணம் ரூ.285/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு ரூ.100 டாக்டைம் மற்றும் 1 ஜிபி அளவு 3ஜி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

சலுகை

சலுகை

ரூ.777/- எனும் விலையில் 7 ஜிபி அளவு டேட்டா வழங்கும் ஏர்செல் 1ஜிபி 3ஜி டேட்டாவினை ரூ.111/- வழங்குகிறது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு திட்டங்களும் பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

பயன்

பயன்

'பெரும்பாலான இந்தியர்கள் வாய்ஸ் காலிங் மற்றும் டேட்டா சர்ஃபிங் சேவைகளை அதிகளவு பயன்படுத்த துவங்கி இருக்கின்றனர். இதனால் பயனர்களுக்குப் பயனளிக்கும் விதமாக ஏர்செல் புதிய திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறது.' என ஏர்செல் நிறுவனத்தின் அனுபம் வாசுதேவ் தெரிவித்தார்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Aircel is effectively offering 1GB 3G data at Rs.11
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot