ரூ.178/-க்கு மிக மலிவான 3ஜி திட்டத்தை அறிமுகம் செய்த ஏர்செல்..!
ஏர்செல் தனது பயனர்களுக்கு 2ஜிபி அளவிலான 3ஜி டேட்டாவை வெறும் ரூ.178/-க்கு வழங்கும் புதிய மலிவான 3ஜி திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
ஏர்செல், இந்தியாவின் புதுமையான தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் தற்போது தனது 3ஜி தரவு சலுகையில் புதியதொரு மற்றும் மிக மலிவான சலுகையொன்றை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
அதாவது வெறும் ரூ.178/-க்கு 2ஜிபி அளவிலான 3ஜி டேட்டவை அறிமுகம் செய்துள்ளது இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக பொழுதுபோக்கு
ஏர்செல் தனது வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் அதிகம் தங்குவதற்கு, வீடியோக்கள் ஷேர் செய்வதற்கு மற்றும் முன்பை விட அதிக பொழுதுபோக்கு அனுபவிப்பதற்கு உதவும் வண்ணம் இ-ரீசார்ஜ் மூலமும் இந்த சலுகையை கிடைக்கப்பெறும் வண்ணம் வசதி ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது.

பல தேவை
"தனது வாடிக்கையாளர்கள் ஒரு மலிவு விலையில் ஆன்லைனில் 24X7 பொழுதும் இருக்கவும், வரம்பற்ற உள்ளடக்கம் மற்றும் பொழுதுபோக்கு பெறவும் என பல தேவைகளை கொண்டுள்ளன அதை ஏர்செல் புரிந்துகொண்டு இச்சலுகையை வழங்குகிறது" என்று கர்நாடக ஏர்செல் சர்க்கிள் பிஸ்னஸ் தலைவர் கன்வர்பர் சிங் கூறியுள்ளார்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மொபைல் இணைய நுகர்வு முறை
"எனவே, நாம் மொபைல் இணைய நுகர்வு முறையை தூண்டிவிடும் நோக்கத்தில் இந்த சலுகை தயாரிப்பு வடிவம் பெற்றுள்ளது" என்றும் கன்வர்பர் சிங் கூறியுள்ளார்.

முயற்சி
கர்நாடகாவில் மொபைல் தரவு நுகர்வு ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பை கண்டுள்ளதாழ் ஏர்செல் நிறுவனம் புதுமையான தயாரிப்புகள் மற்றும் இணைய தத்தெடுப்பு ஆகிய வழிவகுக்கும் சேவைகளில் அதன் முயற்சியை இரட்டிப்பாக்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
ஏர்டெல் டிடிஎச், பிராட்பேண்ட், போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு இலவச 5ஜிபி தரவு.!


Click it and Unblock the Notifications