சென்னையில் ஏர்செல்லின் 3ஜி ஸ்பீடு டெஸ்ட் இன்று முதல்!!!

Written By:

இந்தியாவில் உள்ள முன்னனி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக ஏர்செல் விளங்கி வருகிறது. மக்களின் மொபைல் நெட்வொர்க் பயன்பாட்டிற்க்காக இந்நிறுவனம் பல புதிய அறிமுகப்படுத்தியுள்ளது . ஏர்செல்லின் டெலிகாம் சேவைகளில் அதன் 3ஜி சேவைகளும் ஒன்றாகும்.

மற்றி மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது தமிழ்நாட்டில் ஏர்செல் மிகவும் பிரபலமாகதான் உள்ளது. தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் ஏர்செல் டெலிகாம் நிறுவனம் தனது 3ஜி நெட்வொர்க்கின் ஸ்பீடு டெஸ்டை இன்று தொடங்கியுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் இந்த 3ஜி ஸ்பீடு டெஸ்ட் தொடங்கப்பட்டுள்ளது. ஏர்செல் பிராண்டுடன் ராலி பார்மெட்டில் உருவாக்கப்பட்ட கார் ஒன்று சென்னை நகரத்தை ஒரு மாதம் வலம் வர இருக்கிறது. இந்த காரில் ஏர்செல் மக்களிடத்தில் கொண்டு செல்ல டேப்லெட் மற்றும் மொபைலுடன் 3 நபர்கள் இருப்பார்கள்.

சென்னையில் ஏர்செல்லின் 3ஜி ஸ்பீடு டெஸ்ட் இன்று முதல்!!!

இந்த கார் நகரத்தில் உள்ள முக்கியமான இடங்கள் , ஏர்செல்லின் ஸ்டோர்கள் இருக்கும் இடங்கள் மற்றும் ஏர்செல் டீலர்களின் ஸ்டோர்கள் இருக்கும் இடங்கள் ஆகிய இடங்களுக்கு இந்த கார் செல்ல உள்ளது. ஏர்செல் 3ஜி நெட்வொர்க் சேவை எந்த அளவிற்க்கு வேகமாக உள்ளது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே இந்த ஸ்பீடு டெஸ்டின் முக்கிய நோக்கமாகும்.

ஏர்செல் சென்னை பிரிவின் தலைமை அதிகாரியான திரு. சங்கர நாராயணன் அவர்கள் கூறுகையில், ஏர்செல் டெலிகாம் நிறுவனம் இன்டர்நெட் சேவைகளில் பல புதுமைகளை கொண்டுவந்துள்ளது. இப்பொழுது ஸ்மார்ட்போன்களின் புழக்கம் அதிகரித்துள்ளது அதுவும் குறிப்பாக இளைஞர்கள் அதிகம் மொபைல்களில் இன்டர்நெட்டை பயன்படுத்துகிறார்கள்.

ஏர்செல் நிறுவனம் இன்டர்நெட்டை சேவையை பயன்படுத்துபவர்களுக்கு சிறப்பான 3ஜி சேவையை வழங்குகிறது, ஏர்செல்லின் இந்த சேவையை பற்றி மக்கள் அறிய இந்த ஸ்பீடு டெஸ்ட் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot