மிரட்டும் ஏர்செல்: 2 அன்லிமிடெட் காம்போ; 1 ஆண்டு செல்லுபடியாகும் 1 ரேட் கட்டர்.!
ஏர்செல் நிறுவனம் முக்கிய வாடிக்கையாளர்களின் பயன்பாடு நடத்தையை அறிந்துகொள்வதற்காக இந்த திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்பது வெளிப்படை.
பார்தி ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து ஏர்செல் நிறுவனமும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை எதிரிக்கும் வலுவான திட்டங்களை தொகுத்து வழங்கியுள்ளது. ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் மூன்று திட்டங்கள்.
தற்போது வரையிலாக டெல்லியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த மூன்று புதிய கட்டணத் திட்டங்களும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த புதிய திட்டங்களின் விலை நிர்ணயம் மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பதை நாம் முன்கூட்டியே அறிந்து வைத்துக்கொள்வதும் நல்லதே.!

ரூ.104/- வாய்ஸ் ரேட் கட்டர்.!
ரூ.104, ரூ. 88/- மற்றும் ரூ.199/- என்கிற விலை நிர்ணயத்தில் அறிமுகமாகியுள்ள இந்த மூன்று புதிய திட்டங்களில் ரூ.104/- கட்டணத் திட்டமானது ஒரு குரல் விகிதக் குறைப்பு (வாய்ஸ் ரேட் கட்டர்) திட்டமாகும்.

ரூ.88/- மற்றும் ரூ.199.!
மீதமுள்ள ரூ.88/- மற்றும் ரூ.199/- ஆனது குரல் அழைப்பு மற்றும் தரவு நன்மைகளை வழங்கும் திட்டமாகும். ஏர்செல் நிறுவனம் முக்கிய வாடிக்கையாளர்களின் பயன்பாடு நடத்தையை அறிந்துகொள்வதற்காக இந்த திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்பது வெளிப்படை.

ஒரு வருடம் செல்லுபடியாகும்
ரூ.104/- கட்டண திட்டத்தை பொறுத்தமட்டில், ஏர்செல்-டூ-ஏர்செல் குரல் அழைப்பிற்கு நிமிடத்திற்கு 20 பைசா என்ற கட்டண விகிதத்தை வழங்குகிறது. மற்றும் திட்டம் ஒரு வருடம் செல்லுபடியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறைந்த மாதாந்திர ரீசார்ஜ்; நிறைய பேச்சு நேரம்
இந்த திட்டத்துடன் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் அடுத்த ஒரு வருடத்திற்கு தள்ளுபடி விலையில் குரல் அழைப்புகளை அனுபவிக்கலாம் மற்றும் பேலன்ஸ் பற்றிய கவலைகள் இன்றி, குறைந்த விலையிலான மாதாந்திர ரீசார்ஜ்களை கொண்டே பேச்சு நேரங்களை நீடிக்கலாம் என்பதில் சந்தேகமில்லை.

ஏர்செல் டூ ஏர்செல் அழைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.!
துரதிர்ஷ்டவசமாக, இந்த திட்டம் ஏர்செல்-டூ-ஏர்செல் அழைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். இதர நெட்வர்க்குகள் உடனான அழைப்புகளுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இதர நெட்வொர்க்குகளுடனான குரல் அழைப்புகள் சாதாரண விகிதத்திலேயே கட்டணம் வசூலிக்கப்படும் என்று அர்த்தம்.

இரண்டு வரம்பற்ற காம்போ திட்டங்கள்.!
அடுத்ததாக, ஏர்செல் அறிவித்துள்ள இரண்டு வரம்பற்ற காம்போ திட்டங்களான ரூ.88 மற்றும் ரூ.199/-ன் நன்மைகளைபாப்போம். ரூ.88/- திட்டமானது நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குவதோடு வரம்பற்ற குரல் அழைப்புகள் (உள்ளூர் மற்றும் எஸ்டிடி) ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது. இந்த திட்டம் 1 வாரம் (7 நாட்கள்) செல்லுபடியாகும்.

மற்ற வட்டாரங்களில் எப்போது கிடைக்கும்.?
மறுகையில் உள்ள ரூ.199/- திட்டமானது நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. உடன் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி குரல் அழைப்புகளையும் வழங்குகிறது. இந்த திட்டம் மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். மற்ற வட்டாரங்களில் இந்த மூன்று புதிய திட்டங்களும் எப்போது கிடைக்கும் என்பது பற்றிய வார்த்தைகள் எதையும் ஏர்செல் வெளிப்படுத்தவில்லை.


Click it and Unblock the Notifications