ஆசியாவின் சிறந்த வெப்சைட் விமானச்சேவை!!!

Written By:

இன்று உலகில் பல விமான சேவை நிறுவனங்கள் வந்துள்ளன அவற்றுள் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது சிலவே.

அந்தவகையில் ஏர் ஏஷியா விமான சேவை நிறுவனம் ஐந்தாவது முறையாக உலகின் சிறந்த விருதை வென்றுள்ளது.

ஸ்கைராட்ஸ் அமைப்பால் மிகச்சிறந்த குறைந்த கட்டண விமானச்சேவை நிறுவனமாக தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளதை கொண்டாடும் விதமாக ஹைபைவ் எனும் விளம்பர மேம்பாட்டு திட்டத்தை ஏர் ஏஷியா வழங்குகிறது.

சிறப்பு சலுகை கட்டணத்தில் மொத்தம் 20 லட்சம் இருக்கைகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏஷியாவின் வழித்தட வலையமைப்பில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் ரூ.522 (கட்டணங்கள் மற்றும் வரிகள் உள்பட) என்ற தொடக்க கட்டணத்திலிருந்து 20 லட்சம் இருக்கைகளுக்கான முன்பதிவுகளை மேற்கொள்ளும் ஆபர் வழங்கப்பட்டது.

Click Here For New Concept Smartphones Gallery

ஆசியாவின் சிறந்த வெப்சைட் விமானச்சேவை!!!

இத்திட்டத்தின் கீழ் முன்பதிவு செய்த பயணிகள் 2014 பிப்ரவரி 10-ந்தேதியிலிருந்து ஆகஸ்டு 5-ந்தேதி வரை ஏர் ஏஷியா விமானங்களில் பயணிக்கலாம்.

கொல்கத்தா, சென்னையிலிருந்து பாங்காக் வரையிலான ஒரு வழி பயணத்திற்கு ரூ.3,300 என்ற மிகக் குறைந்த தொடக்க கட்டணத்தில் தொடங்குகிறது.

பெங்களூர், சென்னை, கொச்சி, கொல்கத்தா மற்றும் திருச்சியிலிருந்து கோலாலம்பூருக்கு அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு வழி பயணக்கட்டணம் ரூ.4,000 என்ற தொடக்க கட்டணத்தில் தொடங்குகிறது.

ஆசியாவின் முன்னணி குறைந்த கட்டண விமான சேவை நிறுவனங்களுள் ஒன்றான ஏர் ஏஷியா இணையதளங்களிலும் மிக அருமையாக சேவையளித்து வருகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot