காலண்டர்ல கரெக்ட்டா குறிச்சு வச்சுக்கோங்க: 5G சேவை அறிமுகம் குறித்து மத்திய அமைச்சர் தகவல்.!

|

இந்தியாவில் 5ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களில் எந்த நிறுவனம் முதலில் 5ஜி சேவை அறிமுகம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

5ஜி சேவை

5ஜி சேவை

குறிப்பாக 5ஜி சேவை இந்தியாவில் பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 5ஜி சேவை அறிமுகம் குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷணவ் முக்கியத் தகவலை தெரிவித்துள்ளார்.

WiFi பாஸ்வோர்ட் மறந்து போச்சா? Android மற்றும் iOS டிவைஸில் எப்படி பாஸ்வோர்டை கண்டுபிடிப்பது?WiFi பாஸ்வோர்ட் மறந்து போச்சா? Android மற்றும் iOS டிவைஸில் எப்படி பாஸ்வோர்டை கண்டுபிடிப்பது?

அக்டோபர் 12

அக்டோபர் 12

அதாவது வரும் அக்டோபர் 12-ம் தேதிக்குள் ஐந்தாம் தலைமுறை (5ஜி) சேவை அறிமுகப்படுத்தப்படும் எனவும், இதன் சேவை 2 அல்லது 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் எனவும் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷணவ் தகவல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு கம்மி விலையில் சூப்பரான Security Camera வாங்கலாமா? 60% தள்ளுபடியில் உடனே வாங்கலாம்.!இவ்வளவு கம்மி விலையில் சூப்பரான Security Camera வாங்கலாமா? 60% தள்ளுபடியில் உடனே வாங்கலாம்.!

 5ஜி அலைக்கற்றை ஏலம்

5ஜி அலைக்கற்றை ஏலம்

குறிப்பாக 5ஜி அலைக்கற்றை ஏலம் ஜூலை 26-ம் தேதி வரை நடைபெற்றது. ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, அதானி நிறுவனம் ஆகியவை இந்த ஏலத்தில் பங்கேற்றன.

அடேங்கப்பா வியாழன் கோள் இவ்வளவு அழகா? பிரம்மிப்பை ஏற்படுத்திய James Webb தொலைநோக்கி.!அடேங்கப்பா வியாழன் கோள் இவ்வளவு அழகா? பிரம்மிப்பை ஏற்படுத்திய James Webb தொலைநோக்கி.!

ரூ.1.50 லட்சம் கோடி

ரூ.1.50 லட்சம் கோடி

மேலும் இணையதளம் வாயிலாக தொடங்கி 7 நாளாக 40 சுற்றுகளாக ஏலம் நடந்தது. மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் போனது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஏலம் எடுத்த தொலைத் தொடர்பு நெட்வொர்க்குகளுக்கு ஸ்பெக்ட்ரம் ஒப்புதல் மற்றும்ஒதுக்கீடு பணி நடந்து வருகிறது.

அடடே இந்த போன்லாம் இப்போ இவ்வளவு கம்மி விலையா? Amazon-ல் நல்ல வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க.!அடடே இந்த போன்லாம் இப்போ இவ்வளவு கம்மி விலையா? Amazon-ல் நல்ல வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க.!

டெல்லி, குருகிராம்

ஆரம்பக்கட்டமாக டெல்லி, குருகிராம், பெங்களூரு, கொல்கத்தா, சண்டிகர், ஜாம்நகர், அகமதாபாத், சென்னை, ஹைதராபாத், லக்னோ, புனே மற்றும் காந்திநகர் போன்ற நகரங்களில் இந்த 5ஜி சேவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறுக்க இந்த கௌசிக் வந்தா?- முதலில் அறிமுகம் செய்யும் Jio, Airtel., சைலண்டா இருக்கும் ஒரு நிறுவனம்!குறுக்க இந்த கௌசிக் வந்தா?- முதலில் அறிமுகம் செய்யும் Jio, Airtel., சைலண்டா இருக்கும் ஒரு நிறுவனம்!

ஜியோ, ஏர்டெல்

ஜியோ, ஏர்டெல்

அதேசமயம் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களின் 5ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்த இரண்டு நிறுவனங்கள் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளன. மேலும் இந்நிறுவனங்களின் 5ஜி சேவையின் வேகமானது 4ஜி வேகத்தை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

அசத்தலான சவுண்ட் குவாலிட்டி கொண்ட இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?அசத்தலான சவுண்ட் குவாலிட்டி கொண்ட இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?

அதானி நிறுவனம்

அதானி நிறுவனம்

மேலும் இந்த 5ஜி சேவையில் அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் நிறுவனம் ரூ.212 கோடி முதலீடு செய்து ஸ்பெக்ட்ரமை விலைக்கு வாங்கியது. அதாவது டெலிகாம் துறையில் நுழைந்துள்ள அதானி நிறுவனம் 26 Ghz அளவிலான 5ஜி ஸ்பெக்டர்த்தை வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த போட்டியில் அதானி குழுமம் கூட உள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஆனாலும் ஜியோ, ஏர்டெல் திட்டமாவது
கணித்துவிட முடிகிறது. அதானி குழுமத்தின் முழுமையான திட்டம் என்ன என்பதே முழுமையாக தெரியவில்லை.

Vi இன் முதல் 5G சேவை Vi இன் முதல் 5G சேவை "இந்த" நகரத்திற்குத் தான் வருகிறதா? 5ஜி யூஸ் பண்ண புது சிம் கார்டு தேவையா?

யார் முதலில் 5ஜி சேவையை தொடங்குவார்கள்

யார் முதலில் 5ஜி சேவையை தொடங்குவார்கள்

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களில் எது முதலில் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்யும் என்பது தெளிவாக தெரியவில்லை. இருந்தபோதிலும் இந்த மூன்று நிறுவனங்களும் ஒரே நேரத்தில் சேவைகளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது இந்த மூன்று நிறுவனங்களும் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 5ஜி சோதனை நடத்தி வருகின்றன. எனவே ஒரே நேரத்தில் இந்நிறுவனங்கள் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Aim to launch 5G service in India by October 12: IT Minister informs.!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X