இனி சாப்ட்வேர் இன்ஜினியர் வேலை இருக்குமா? AI வருகையால் தவிக்கும் கனவு வேலை!
செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) வருகை கோடிக்கணக்கான மனித வேலைவாய்ப்புகளை பறிக்குமென்று கணிக்கப்பட்டிருக்கும் வேளையில், பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும் சாப்ட்வேர் இன்ஜினியர் (Software Engineer) வேலை, இனி இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏஐ சாட்பாட்கள் (AI Chatbot) கம்ப்யூட்டர் கோடிங் எழுதத் தொடங்கிவிட்ட காரணத்தால் நிலைமை மோசமாகிவிட்டது.
இதுகுறித்து விளக்குகிறது, இந்த செய்தி தொகுப்பு. 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சியாக செயற்கை நுண்ணறிவு பார்க்கப்படுகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துறையில் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டுவர காத்திருக்கிறது என்பதை சாட்ஜிபிடியின் (ChatGPT) வருகையின்போதே உலகம் அறிந்துகொண்டது.

இந்த சாட்ஜிபிடியின் சாட்பாடில் கவிதை முதல் கம்ப்யூட்டர் கோடிங் வரையில் எழுதிக்கொள்ள முடிகிறது. இது கேட்பதற்கு நன்றாக இருக்கலாம், ஆனால், மிகவும் அதிகமாக சம்பளம் கிடைக்கும் வேலைகளில் டாப் 5 இடத்தில் இருக்கும், சாப்ட்வேர் இன்ஜினியர்கள் செய்யக்கூடிய கோடிங் எழுதுதலை, இலவசமாக ஏஐ சாட்பாட் எழுதிகொடுத்தால் என்னவாகும் என்று சிந்தித்து பாருங்கள்.
ஏஐ காரணமாக அடுத்த 5 ஆண்டுகளில் கோடிக்கணக்கான மனித வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்றும், ஏற்கனவே இருக்கும் வேலைகள் பல காணாமல் போகும் என்றும் மிகப்பெரும் மனிதவள ஆய்வு நிறுவனங்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றன. அப்படி கஸ்டமர் கேர் (Customer Care) வேலை முதல் டேட்டா என்ட்ரி கிளர்க் (Data Entry) வேலை வரையில் அழிந்துபோகும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த சூழலில் சாப்ட்வேர் இன்ஜினியர் வேலையும் கேள்விக் குறியாகிவிட்டது. முன்பு சாட்ஜிபிடி மட்டுமே இருந்த நிலையில், இப்போது கூகுளின் பார்ட் (Google Bard), மைக்ரோசாப்ட்டின் பிங் ஏஐ (Microsoft Bing AI) என மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் சாட்பாட்கள் அடுத்தடுத்து களமிறக்கப்பட்டுள்ளன. இந்ந நிறுவனங்களின் சந்தை மோதல், அவற்றிக்கு நிச்சயம் லாபத்தை பெற்றுத்தரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், வேலைவாய்ப்பு பறிபோனால், பாதிக்கப்படுவது மக்களாகவே இருக்கும்.
இப்போது வரையில், ஏஐ சாட்பாட்கள் சில எளிய கோடிங்களை மட்டுமே எழுதி வருகிறது. வருங்காலத்தில் அது மேம்படுத்தப்படலாம். அப்படி நடந்தால், சாப்ட்வேர் இன்ஜினியர் வேலைக்கு நிச்சயம் ஆபத்துதான். இதனால், தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டி காரணமாக கூட அதை செய்யாமல் இருக்க வேண்டும். இதுகுறித்த கேள்வி, கூகுள் நிறுவனத்திடம் எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த கூகுள், "சாப்ட்வேர் இன்ஜினியர் வேலையை கூகுளின் பார்ட் செய்ய வாய்ப்பில்லை. மாறாக அது அவர்களுக்கு கோடிங் எழுதுவதில் உதவியாக இருக்கும். சில எளிய பணிகளை அவர்கள் இதன் மூலம் முடித்துக் கொள்ளலாம். இந்த சாட்பாட் கோடிங்கில் பிழைத்திருத்தம் செய்யவும், சோதனைகளை செய்துபார்க்கும் வரையில் மட்டுமே உருவாக்கப்பட்டது.
சாப்ட்வேர் இன்ஜினியருக்கு மட்டுமே தெரியும் நுணுக்கங்கள் கூகுள் பார்ட்டுக்கு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டது. இதைபோலவே தான் சாட்ஜிபிடி மற்றும் பிங் ஏஐ செயல்படும் என்றும் அதனால் சாப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லையென்றும் அந்தந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








