Home
News

பேங்க் அக்கவுண்ட் வைத்து இருப்பவர்கள் அலெர்ட்.. AI வாய்ஸ் குளோனிங்.. SBI வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்..

AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஆன்லைன் மோசடிகள் புதுப்புது வழிகளில் நடைபெற்று வருகின்றன. AI-ஐ நல்ல விஷயங்களுக்குப் பலர் பயன்படுத்தி வரும் நிலையில், சில சைபர் குற்றவாளிகள் இதன் மூலம் மக்களின் பணத்தைப் பறிக்க முயற்சி செய்கின்றனர்.

அந்த வகையில் தற்போது உருவாகியுள்ள புதிய மோசடிதான் AI வாய்ஸ் குளோனிங் ( AI Voice Cloning). சமூக வலைத்தளங்களில் இருந்து ஒருவரின் சில விநாடி குரல் பதிவுகளைச் சேகரித்து, AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் அவரைப் போலவே பேசக்கூடிய போலியான குரலை உருவாக்குகின்றனர்.

 AI வாய்ஸ் குளோனிங்.. SBI வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்..

இதையடுத்து, உங்கள் பெற்றோர், துணை அல்லது நெருங்கிய நண்பர்களைத் தொடர்புகொண்டு, நீங்கள் ஏதோ ஒரு பிரச்சினையில் சிக்கியிருப்பதாகக் கூறி அவசரமாகப் பணம் கேட்கின்றனர். பேசுவது நீங்கள்தான் என நம்பும் அவர்கள், பணத்தை அனுப்பிவிடுகின்றனர். இவ்வாறு AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குரலைப் போலியாக உருவாக்கி பணம் பறிக்கும் மோசடிக்கு AI வாய்ஸ் குளோனிங் மோசடி என்று பெயர்.

இந்த மோசடி குறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொலைபேசியில் தெரிந்தவரின் குரலைக் கேட்டு மட்டும் நம்பி பணம் அனுப்ப வேண்டாம் என்றும், அழைப்பின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திய பிறகே பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இந்த மோசடியில் இருந்து தப்பிக்க எஸ்பிஐ கூறியுள்ள பாதுகாப்பு வழிமுறைகளைப் பார்க்கலாம்.

வெரிஃபிகேஷன் கோட்
AI வாய்ஸ் குளோனிங் மோசடியில் இருந்து தப்பிக்க, குடும்பத்தினருக்குள் ஒரு ரகசியக் குறியீட்டை உருவாக்கி வைத்திருக்க SBI அறிவுறுத்துகிறது. அதாவது, குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து யாருக்கும் தெரியாத ஒரு ரகசிய வார்த்தை அல்லது கேள்வி-பதிலைத் தேர்வு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தெரிந்தவர்களின் குரலில் சந்தேகத்திற்குரிய அழைப்புகள் வந்தால், அவர்களிடம் அந்த ரகசியக் குறியீட்டைக் கேட்டு உறுதிப்படுத்தலாம். இதன் மூலம் போலியான குரலைப் பயன்படுத்தி ஏமாற்றும் முயற்சிகளைக் கண்டறிந்து, பண இழப்பைத் தவிர்க்க முடியும்.

AI தொழில்நுட்பத்தால் உங்கள் குரலைப் போலவே போலியான குரலை உருவாக்க முடியும். ஆனால், குடும்பத்தினர் ரகசியமாக வைத்திருக்கும் குறியீட்டு வார்த்தை அல்லது கேள்வி-பதில் மோசடிக்காரர்களுக்குத் தெரியாது. எனவே, அழைப்பில் பேசுபவரிடம் அந்த ரகசியக் குறியீட்டைக் கேட்டு உறுதிப்படுத்தலாம். அவர்களால் சரியான பதிலைச் சொல்ல முடியவில்லை என்றால், அந்த அழைப்பு குறித்து சந்தேகப்பட வேண்டும். இருப்பினும், ரகசியக் குறியீடு வேறு யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பாக வைத்திருப்பதும் அவசியம்.

AI வாய்ஸ் குளோனிங் மோசடியிலிருந்து தப்பிக்க 5 வழிகள்

1.உங்கள் உறவினர் குரலில் அவசரமாகப் பணம் கேட்டு அழைப்பு வந்தால், உடனே பணம் அனுப்ப வேண்டாம். அழைப்பைத் துண்டித்துவிட்டு, சம்பந்தப்பட்ட நபரின் உண்மையான தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொண்டு விசாரிக்கவும். இதன் மூலம் அழைப்பு உண்மையானதா அல்லது போலியானதா என்பதை உறுதிப்படுத்தலாம்.

2.அவசர தேவை என்று கூறி உங்கள் உறவினர் குரலில் போன் வந்தால், உடனே நம்பிப் பணம் அனுப்ப வேண்டாம். முதலில் அந்த அழைப்பு உண்மையானதா என்பதைச் சரிபார்க்கவும். அவசரமாகப் பணம் கேட்டு அழுத்தம் கொடுத்தால், அது மோசடியாக இருக்கலாம். எனவே, பணம் அனுப்புவதற்கு முன்பு கவனமாகச் செயல்படுங்கள்.

 AI வாய்ஸ் குளோனிங்.. SBI வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்..

3.உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்கள், PIN நம்பர், OTP போன்ற ரகசியத் தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம். தெரிந்தவர்களின் குரலில் யாராவது கேட்டாலும், இந்த விவரங்களைச் சொல்லாதீர்கள்.

4.அழைப்பின் மீது சந்தேகம் ஏற்பட்டால், குடும்பத்தினர் ஏற்கெனவே முடிவு செய்த ரகசியக் குறியீட்டைக் ( பேமிலி வெரிஃபிகேஷன் கோட்) கேட்டு சரிபார்க்கலாம். இதன் மூலம் அழைப்பு உண்மையானதா அல்லது போலியானதா என்பதை அறிய உதவும்.

5.தவறுதலாக நீங்கள் நம்பி பணம் அனுப்பிவிட்டால், உடனடியாக 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
AI Voice Cloning Scams on the Rise: SBI Shares 5 Ways to Protect Your Money
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X