குற்றம் நடைபெறும் முன் கண்டுபிடிக்க உதவும் சிசிடிவி ஃபேஸ் ரீடிங் ஏஐ டெக்னாலஜி.!

முக அடையாளத்தை கண்டுகொள்ளூம் இந்த டெக்னாலஜி, ஒருநாள் சிசிடிவி கேமிராவில் பதிவாகும் பொதுமக்களின் முகங்களில் இருந்து குற்றவாளிகளை தனியாக பிரித்தெடுக்க பயன்படும்

|

முக அடையாளம் காணும் ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் என்ற தன்மை தற்போது காவல்துறையினர்களுக்கு 'அபாயகரமான' குற்றவாளிகளை கண்டறிவதற்கு மிகவும் உதவுகிறது என்பது நிபுணர்களின் கூற்றாக உள்ளது. இதுகுறித்து டாக்டர் மைக்கேல் கொசின்ஸ்கி என்பவர் கூறியபோது, முக அடையாளத்தை கண்டுகொள்ளூம் இந்த டெக்னாலஜி, ஒருநாள் சிசிடிவி கேமிராவில் பதிவாகும் பொதுமக்களின் முகங்களில் இருந்து குற்றவாளிகளை தனியாக பிரித்தெடுக்க பயன்படும் என்று கூறியுள்ளார்.

குற்றம் நடைபெறும் முன் கண்டுபிடிக்க உதவும் சிசிடிவி ஃபேஸ் ரீடிங் ஏஐ.!

இவர் கடந்த ஆண்டு பாலினத்தை கண்டுபிடிக்கும் ஏஐ கண்டுபிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழக அதிகாரிகள் இதுகுறித்து கூறியபோது, தனிப்பட்ட உயிர்களை காப்பாற்ற இந்த டெக்னாலஜி நிச்சயம் பயன்படும் என்று கூறியுள்ளார். ஒரே ஒரு சிங்கிள் புகைப்படத்தை வைத்து இந்த டெக்னாலஜி உங்களுடைய அனைத்து குணங்களையும் கம்ப்யூட்டர் புரோக்ராம் மூலம் கண்டுபிடிக்கும் முடியும் என்பது குறித்த ஆய்வை தற்போது செய்து வருகிறார் டாக்டர் மைக்கேல் கொசின்ஸ்கி.

கார்டியன்

கார்டியன்

கார்டியன் என்ற ஊடகத்திடம் இதுகுறித்து பேசிய மைக்கேல், பல்வேறு டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் காரணமாக ஏற்படும் முகபாவங்களை மாற்றுவதன் மூலம் இந்த தொழில்நுட்பம் வேலை செய்யும் என்று கூறினார். குற்றம் செய்யும் முனைப்புடன் உள்ளவர்கள் யார் யார் என்பது எங்களுக்கு இந்த டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் மூலம் தெரிய வரும் என்றும், இதன்மூலம் குற்றம் நடப்பதற்கு முன்பே தடுப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், முக அம்சங்களில் குற்ற உணர்வை தெரிந்து கொள்ளும் இந்த டெக்னாலஜி தொடர்பு கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆயிரக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான முகங்களை கம்ப்யூட்டர் பார்த்தாலும் அந்த ஒரு குறிப்பிட்ட குற்றம் செய்யக்கூடிய நபரை இதன் மூலம் எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 சிசிடிவி

சிசிடிவி

எதிர்காலத்தில் சிசிடிவி கேமிராவுக்கு பதிலாக இந்த ஏஐ ஃபேஸ் ரீடிங் டெக்னாலஜியை வைத்து யாருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது, யார் இழப்பை ஏற்படுத்தியது, யார் பயங்கரமானவர்கள் என்பதை கண்டுபிடிக்கலாம். சமூகத்திற்கு ஆபத்தானவர் யார்? பயமுறுத்துபவர் யார் என்பதை அறிந்து சமூக அமைதிக்கு இந்த டெக்னாலஜி பெரிதும் பயன்படும். 'உங்களை அல்லது மற்றவர்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடிய நபர்களை பொது இடங்களை கண்காணிப்பதற்கான இந்த கண்டறிதல் கருவிகளை நீங்கள் தாராளமாக கற்பனை செய்து பார்க்கலாம் என்று டாக்டர் கோசின்ஸ்கி கூறினார்.

விதமான பிரச்சனைகள்

விதமான பிரச்சனைகள்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருந்தாலும் அவை அத்தனையும் இந்த டெக்னாலஜி மூலம் எளிதில் கண்டறியலாம். ஏற்கனவே இந்த டெக்னாலஜியை ஒருசிலர் பயன்படுத்த தொடங்கிவிட்டதாகவே நான் கருதுகிறேன். அரசுகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் ஏற்கனவே பயன்படுத்த தொடங்கிவிட்டதால் இதை ஒரு ரிஸ்க் டெக்னாலஜி என்று கூற முடியாது என்று அவர் மேலும் கூறினார்.

தனியாக பிரித்தெடுக்க கூடிய முகங்கள்

தனியாக பிரித்தெடுக்க கூடிய முகங்கள்

இந்த ஏஐ டெக்னாலஜி மூலம் ஒருவர் சாதாரணமானவரா? அல்லது ஓரினச்சேர்க்கை உள்ளவரா? என்பதை கூட கண்டுபிடிக்க முடியும் என்று ஒரு உளவியல் நிபுணர் கூறியது கடந்த ஆண்டு தலைப்பு செய்திகளில் இடம்பெற்றது. இந்த ஏஐ டெக்னாலஜிக்கு எத்தனை வகையான முகங்களை பார்த்தாலும் தனியாக பிரித்தெடுக்க கூடிய முகங்கள் குறித்து போதுமான அளவு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் டேட்டிங் மற்றும் ஒருசில புகைப்படங்கள் மூலம் இந்த பிரிவினர்களை கண்டுபிடிக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த டெக்னாலஜியை வைத்து ஆண்களின் பாலின விருப்பங்களை 91% சரியாயகவும், பெண்களின் பாலியல் விருப்பங்களை 83%ட் சரியாகவும் கண்டுபிடிக்க முடியும் என்றும் டாக்டர் கொசின்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
AI that ‘detects sexuality and IQ’ could be used to spot criminals : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X