பெருசா ஒன்னு நடக்க போகுது.. கையை விரித்த AI ஆராய்ச்சியாளர்கள்.. சொல்றத கேட்கும் போதே பீதியா இருக்கே!
இதற்கு முன் வெளியான எச்சரிக்கைகள் எல்லாம் ஒரு விஷயமே இல்லை என்கிற அளவிற்கு.. ஏஐ (AI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் (Artificial Intelligence Technology) தொடர்பாக.. பீதியை கிளப்பும் ஒரு புதிய எச்சரிக்கை (New Warning) வெளியாகி உள்ளது.
இந்த எச்சரிக்கையானது, ஏஐ ஆராய்ச்சியாளர்கள் (AI Researchers), ஏஐ பொறியியலாளர்கள் (AI Engineers) மற்றும் ஏஐ தொடர்பான நிறுவனங்களின் சிஇஓ-க்களிடம் (AI Companies CEOs) இருந்து வெளியாகியுள்ள ஒரு கூட்டு அறிக்கையாகும் என்பதால்.. இதை சர்வ சாதாரணமாக கடந்து போவது அவ்வளவு புத்திசாலித்தனம் அல்ல!

சான் பிரான்சிஸ்கோவை தளமாக கொண்ட இலாப நோக்கற்ற நிறுவனமான சென்டர் ஆஃப் ஏஐ சேஃப்டி (Center for AI Safety), ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனர் சாம் ஆல்ட்மேன் (Sam Altman), கூகுள் டீப்மைண்ட்டின் (Google DeepMind) சிஇஓ-வான டெமிஸ் ஹசாபிஸ் (Demis Hassabis), மைக்ரோசாப்ட் (Microsoft) சிடிஓ-வான கெவின் ஸ்காட் (Kevin Scott) உட்பட பல தொழில்நுட்ப வல்லுநர்கள் சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் "செயற்கை நுண்ணறிவானது மனித குலத்தை அழித்துவிடும். தொற்றுநோய்கள் மற்றும் அணுசக்தி போர்களை போலவே செயற்கை நுண்ணறிவும் கூட மனிதகுலத்திற்கு ஆபத்தானது" என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கை ஏஐ தொடர்பான ஒழுங்குமுறை (AI Regulation) எவ்வளவு முக்கியம் என்கிற அவசியத்தை வலியுறுத்துகிறது.
கற்றல் (Learning) தொடங்கி 'கோடிங்' (Coding) வரையிலாக கிட்டத்தட்ட எல்லா விஷயங்களையும் எளிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் கூட, உலகெங்கிலும் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் ஏஐ-யின் மோசமான விளைவுகளை பற்றி தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.
இந்த அறிக்கையில் கையொப்பமிட்டவர்களில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இயந்திர கற்றல் (Machine Learning) பேராசிரியரும் மைண்ட் ஃபவுண்டரியின் (Mind Foundry) இணை நிறுவனருமான மைக்கேல் ஆஸ்போர்னும் (Michael Osborne) ஒருவராவார். அவர் "ஏஐ-யின் வளர்ச்சியில் இருத்தலியல் அபாயங்கள் (Existential risks) உள்ளன" என்று பீதியை கிளப்புகிறார்.
அறியாதோர்களுக்கு இருத்தலியல் அபாயங்கள் என்பதை உலகளாவிய பேரழிவு அபாயங்கள் (Global Catastrophic Risks) என்றும் கூறலாம். அதாவது மனித நாகரிகத்தின் சரிவை (Collapse of human civilization) அல்லது மனித இனங்களின் அழிவை (Extinction of the human species) ஏற்படுத்தக்கூடிய அபாயங்கள் எல்லாமே இருத்தலியல் அபாயங்கள் என்று வரையறுக்கப்படுகின்றன.
மேலும் ஏஐ-யின் அபாயங்கள் பற்றி பேசுகையில் "ஏஐ-ஐ நாம் சரியாக புரிந்து கொள்ளாததால், அது நமது கிரகத்திலேயே நமக்கு எதிரான ஒரு புதிய போட்டி உயிரினமாக (New competing organism) உருவாக வாய்ப்பு உள்ளது" என்றும் மைக்கேல் ஆஸ்போர்ன் கூறி உள்ளார்.
நினைவூட்டும் ஏஐ-யின் காட்ஃபாதர் (Godfather of AI) தந்தை என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன் (Geoffrey Hinton), சமீபத்தில் கூகுள் நிறுவனத்தை விட்டு வெளியேறினார். ஏனெனில் ஏஐ ஆனது மனிதகுலத்திற்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று அவர் நம்புகிறார். அவைகளை பற்றி வெளிப்படையாக பேசவே தனது பணியை துறந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications








