உலகம் அழியும் போது மனிதர்களின் கடைசி செல்பி இப்படி தான் இருக்குமா? Ai வெளியிட்ட பயங்கரமான படங்கள்!

|

உலகத்தில் ஒவ்வொரு நிமிடமும், ஏதோவொரு மூலையில், எங்கோவொரு இடத்தில், எதோ ஒரு விஷயம் நாம் நம்ப முடியாத வகையில் மிகவும் விசித்திரமாக நடந்துகொண்டிருக்கும். இது தான் இயல்பு மற்றும் இது தான் மறுக்க முடியாத உண்மையும் கூட. இதுபோன்ற விசித்திரமான விஷயங்கள் இணையத்தில் வெளியாகி, உலகளவில் வைரல் ஆகிவிடுகிறது. அப்படியான ஒரு நம்ப முடியாத விஷயம் தான் இன்றைய வைரல் மேட்டர். AI பற்றி உங்களுக்குத் தெரியுமா?

AI - ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியும் தானே?

AI - ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியும் தானே?

AI - ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் (Artificial Intelligence) என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியும் தானே? நிச்சயமாகப் பெரும்பாலானோர் Ai பற்றிய விபரங்களை அறிந்திருப்பீர்கள். தெரியாதவர்களுக்கு, Ai என்பது செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படுகிறது. இது பொதுவாக அறிவார்ந்த உயிரினங்களுடன் தொடர்புடைய பணிகளைச் செய்ய டிஜிட்டல் கம்ப்யூட்டர் அல்லது கம்ப்யூட்டர் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட ரோபோவின் திறன்களை மேம்படுத்த உதவும் ஒரு எதிர்கால டிஜிட்டல் அமைப்பாகும்.

மனித இனம் குறித்து Ai சொன்ன திடுக்கிடும் விஷயம்

மனித இனம் குறித்து Ai சொன்ன திடுக்கிடும் விஷயம்

பகுத்தறிவு, பொருளைக் கண்டறிதல், பொதுமைப்படுத்துதல், கடந்த கால அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்வது போன்ற மனிதர்களின் அறிவார்ந்த செயல்முறைகளைக் கொண்ட அமைப்புகளை உருவாக்கும் திட்டத்திற்கு இந்த வார்த்தை மனித இனம் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. Ai அனுபவத்துடன் இயங்கும் ரோபோட்களை தான் எதிர்காலத்தில் நாம் சந்திக்கவிருக்கிறோம். இப்போதே, சில நாடுகளில் Ai ரோபோட்களுக்கான ஆதிக்கம் அதிகரிக்கத் துவங்கிவிட்டது.

DALL-E 2 என்ற Ai இடம் கேட்கப்பட்ட கேள்விகள் என்ன தெரியுமா?

DALL-E 2 என்ற Ai இடம் கேட்கப்பட்ட கேள்விகள் என்ன தெரியுமா?

சரி, இப்போது விஷயத்திற்கு வருவோம், சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு கொண்ட DALL-E 2 என்ற Ai இடம் பூமியின் இறுதி நாளின் போது மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இத்துடன், பூமியின் கடைசி நாளில் மனிதர்கள் எடுக்கும் செல்பி (Selfie) புகைப்படங்கள் எப்படி இருக்கும் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. இதற்கு DALL-E 2 வெளியிட்ட முடிவுகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.40000 டெபாசிட்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? Online பேலன்ஸ் செக் செய்வது எப்படி?EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.40000 டெபாசிட்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? Online பேலன்ஸ் செக் செய்வது எப்படி?

பூமியின் கடைசி நாள் எப்படி இருக்கும்?

பூமியின் கடைசி நாள் எப்படி இருக்கும்?

இதற்கு முன், பூமியின் முடிவு எப்படியிருக்கும் என்பதை நாம் பல திரைப்படங்கள் வழியாகப் பார்த்திருக்கிறோம். இன்னும் சிலர், அறிவியல் விஞ்ஞானிகள் வெளியிட்ட பதிவுகளின் மூலம் பூமியின் கடைசி நாள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி படித்துத் தெரிந்திருப்போம். இப்போது, முதல் முறையாக ஒரு செயற்கை நுண்ணறிவு கொண்ட இமேஜ் ஜெனெரேட்டிங் ரோபோட் சொன்ன முடிவுகளை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இந்த DALL-E 2 வெளியிட்ட முடிவுகள் அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது.

உலகம் அழியும் போது மனிதன் எடுக்கும் செல்பி எப்படி இருக்கும்?

உலகம் அழியும் போது மனிதன் எடுக்கும் செல்பி எப்படி இருக்கும்?

பூமியின் கடைசி நேரத்தில் மனிதன் எடுக்கும் செல்பி எப்படி இருக்கும் என்பதற்கான Ai- முடிவுகள் அச்சுறுத்தும் வகையில் இருப்பதனால், உங்கள் மனதைத் திடப்படுத்திக்கொண்டு, அடுத்து வரக்கூடிய விஷயங்களை தொடர்ந்து படியுங்கள். Ai வெளியிட்ட முடிவுகள் புகைப்படங்களாகவும் மற்றும் வீடியோவாகவும் வெளியிடப்பட்டுள்ளது. உண்மையைச் சொல்லப் போனால், இந்த AI இமேஜ் ஜெனெரேட்டர் உருவாக்கியுள்ள புகைப்படங்களைப் பார்த்தால் எதோவொரு ஹாரர் திரைப்படத்தை பார்த்தது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

Ai தனது படங்களை பயங்கரமாக சித்தரித்துள்ளது

Ai தனது படங்களை பயங்கரமாக சித்தரித்துள்ளது

Ai வெளியிட்ட முடிவுகளில் உள்ள படங்களில் இருக்கும் மனிதர்கள் தலைமுடி இல்லாமல், மோசமான சருமத்துடன் க்ரேய் நிறத்தில், ஏதோ ஒரு எலியனைப் போல் காட்சியளிக்கின்றனர். மனிதர்களுக்குப் பின்னால் தெரியும் பூமியின் இடம் புகை மூட்டமாகக் காட்சியளிக்கிறது. சில படங்களில் மனிதர்களின் பின்னால் இருக்கும் இடம் எதோ போர்க்களம் போலக் காட்சியளிக்கிறது. சில புகைப்படங்களில் இருக்கும் மனிதர்களின் கண்கள் பிதுங்கி எலும்பாக அடையாளம் தெரியாத வகையில் ஏஐ தனது படங்களை பயங்கரமாக சித்தரித்துள்ளது.

Jio அறிவித்த ரூ.1,500 கேஷ்பேக் சலுகை.. JioFi வாங்கினால் 50% மேல் லாபம்! நல்ல சான்ஸ நழுவவிடாதீங்க!Jio அறிவித்த ரூ.1,500 கேஷ்பேக் சலுகை.. JioFi வாங்கினால் 50% மேல் லாபம்! நல்ல சான்ஸ நழுவவிடாதீங்க!

Ai கணித்த விஷயங்கள் இப்போது இணையத்தில் வைரல்

Ai கணித்த விஷயங்கள் இப்போது இணையத்தில் வைரல்

Ai வெளியிட்ட பூமியின் கடைசி நேரப் புகைப்படங்கள் அனைத்தும் மிகவும் கொடூரமாக இருந்ததைத் தொடர்ந்து, அந்த புகைப்படங்களைச் சிலர் இணையத்தில் வெளியிட்டனர். இது இப்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. இன்னும் சொல்லப் போனால், Ai கணித்த விஷயங்களைக் கண்டு பலர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இன்னும் சில புகைப்படங்களில், மனிதர்கள் எடுக்கும் செல்பி புகைப்படத்தில் பூமி கிரகம் அவர்களுக்குப் பின்னால் தெரிவது போலவும் காட்சியளிக்கிறது.

ஒரு Ai எப்படி இப்படிப்பட்ட புகைப்படங்களை உருவாக்க முடியும்?

ஒரு Ai எப்படி இப்படிப்பட்ட புகைப்படங்களை உருவாக்க முடியும்?

இது புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. Ai-க்கள் எப்போதும் நடப்பில் நடக்கும் விஷயங்களைக் கருத்தில் கொண்டு, எதிர்கால விளைவுகள் எப்படி இருக்கும் என்பதற்கான முடிவுகளை உருவாக்குகின்றன. இந்த புகைப்படங்களின் முடிவுகளும் அப்படி தான் உருவாக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் இப்போது செய்யும் நிகழ்வுகளையும், தவறுகளையும் வைத்துத் தான், பூமியின் இறுதி நாள் எப்படி அமையும் என்பதை இந்த Ai சித்தரித்துக் காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Ai காட்டிய புகைப்படத்தின் பின்னால் பூமி இருப்பதற்கு இது தான் காரணமா?

Ai வெளியிட்ட மற்றொரு புகைப்படத்தில் பூமி போன்ற கிரகம் தோன்றி இருந்தது, இது மனிதர்கள் வேற்றுக்கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்டது போன்ற காட்சியை பிரதிபலிக்கிறது. செவ்வாய் மற்றும் நிலவில் மனித காலனியை உருவாக்கத் துடிக்கும் மனித இனத்தின் முயற்சிகளையும் Ai தனது கணிப்பில் சேர்த்துக்கொண்டது விசித்திரமானது. இந்த புகைப்படங்கள் பற்றிப் பல கருத்துக்கள் பதிவாகியுள்ளது. இன்னும் சிலர், Ai காண்பித்த முடிவுகள் ஒப்புக்கொள்ளும் விதத்தில் அமைந்துள்ளது என்றும் கூறியுள்ளனர்.

பூமியின் அழிவு எதனால் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது?

பூமியின் அழிவு எதனால் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது?

பூமியின் இறுதி நாளின் போது எடுக்கப்படும் செல்பி புகைப்படங்கள் நிச்சயம் இப்படி இருக்க வாய்ப்புள்ளது என்றும் சிலர் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். பூமிக்கு அழிவு என்று ஒன்று நேர்ந்தால், அது ஒரு எரிகல் மோதல் மூலமாகவோ அல்லது வேற்று கிரக வாசிகளின் தாக்குதல் மூலமாகவோ அல்லது இயற்கை சீற்றங்கள் மூலமாகவோ நிகழும் வாய்ப்புகள் குறைவு தான்என்கின்றனர் விஞ்ஞானிகள். ஆனால், பூமிக்கு ஆபத்து மனிதர்களால் தான் உருவாகும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

ரூ.499 முதல் புது பவர் பேங்க் டிவைஸ் வாங்கலாமா? உங்களுக்கான பெஸ்ட் Power Bank இதோ!ரூ.499 முதல் புது பவர் பேங்க் டிவைஸ் வாங்கலாமா? உங்களுக்கான பெஸ்ட் Power Bank இதோ!

பூமியின் அழிவை தடுக்க மனித இனம் என்ன செய்ய வேண்டும்?

பூமியின் அழிவை தடுக்க மனித இனம் என்ன செய்ய வேண்டும்?

குறிப்பாக, மனித அலட்சியத்தால் தான் பூமி கிரகம் கொஞ்சம் கொஞ்சமாக அழியத் துவங்கியுள்ளது என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். பசுமையான பூமி கிரகத்தில், பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டி, கடலில் குப்பைகளை சேர்த்து, காடுகளை அழித்து, காற்றைக் கூட நஞ்சாக மாற்றிய மனிதர்களால் தான் பூமிக்கு அதிக ஆபத்து என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த தவறுகளை எல்லாம் நாம் திருத்திக்கொண்டாள், பூமியின் கடைசி நாளை நாம் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படாது என்கின்றனர் விஞ்ஞானிகள். பூமியை ஆரோக்கியமாகப் பார்த்துக்கொள்ளும் பெரும் பொறுப்பு மனிதர்களுக்குத் தான் இருக்கிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
AI Predicts How Last Human Selfies Look Like Before End Of The world See The Photos And Video

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X