கோபைலட் மோட் Vs கூகுள் ஏஐ மோட்.. ஏஐ பவர்டு சர்ச்-இல் போட்டாப் போட்டி.. இதுல என்னென்ன பண்ண முடியும்?
கூகுள் நிறுவனமானது, அதனுடைய குரோம் பிரவுசரில் (Chrome Browser) ஏஐ மோட் (AI Mode) என்னும் ஏஐ பவர்டு சர்ச் பீச்சரை சேர்த்தது. அமெரிக்கா மற்றும் இந்தியாவில் கிடைக்கும் இந்த பீச்சர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனமானது அதன் எட்ஜ் பிரவுசரில் (Edge Browser) கோபைலட் மோட் (Copilot Mode) என்னும் சர்ச் பீச்சரை களமிறக்கி இருக்கிறது. இந்த பீச்சர்களால் என்ன முடியும்? இவற்றில் இருக்கும் வேறுபாடுகள் என்ன? உள்ளிட்ட விவரங்கள் இதோ.
கோபைலட் மோட் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் (Copilot Mode Microsoft Edge):
மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசரில் டேப் நேவிகேட்டிங் செய்வதை குறைத்து, அந்த டேப்களில் இருக்கும் டேட்டாக்களை ஒருங்கிணைத்து அது தொடர்பான கேள்விகள், பதில்களுடன் இந்த கோபைலட் மோட் செயல்படுகிறது. ஆகவே, மல்டிபிள் டேப்களில் இருக்கும் டேட்டாக்களை சிங்கிள் இன்புட் பாக்ஸ் மூலம் பிரைவசி மற்றும் செக்யூரிட்டியுடன் அணுக முடியும்.

* பிரவுஸ் அசிஸ்டன்ட் (Browse Assistant)
* மல்டி-டேப் கன்டெக்ஸ்ட் (Multi-Tab Context)
* ப்ரோஆக்டிவ் அசிஸ்டன்ஸ் (Proactive Assistance)
* நேச்சுரல் லேங்குவேஜ் இன்டிகிரேஷன் (Natural Language Interaction)
* ஏஐ பவர்டு கன்டென்ட் (AI-Powered Content)
பிரவுஸ் அசிஸ்டன்ட்: கோபைலட் மோடானது, சைடு-பார், புது டேப் பேஜ் மற்றும் அட்ரஸ் பார் போன்றவற்றின் அணுகலை கொடுத்து, பிரசருக்குள் ஏஐ இன்டராக்சன்களை கொடுக்கிறது. முற்றிலும் சாட் அசிஸ்டன்ட் போலலல்லாமல், அதுவே சில டேப்களின் அடிப்படையில் பிரவுஸ் டேட்டாக்களை ஒருங்கிணைத்து உங்களுக்கு அசிஸ்ட் செய்கிறது.

மல்டி-டேப் கன்டெக்ஸ்ட்: இந்த கோபைலட் மோட் மூலம் நீங்கள் ஓப்பன் செய்து வைத்திருக்கும் டேப்களின் டேட்டாக்களை பார்த்து புரிந்து கொள்ள முடியும். நீங்கள் ஒவ்வொரு டேப்பிலும் ஒரு ஸ்மார்ட்போனை சர்ச் செய்துள்ளீர்கள் என்றால், அந்த ஸ்மார்ட்களின் விலை, பீச்சர்களை ஒப்பிடுவது, அது குறித்த விளக்கம் அளிப்பது போன்வற்றை செய்ய முடியும்.
ப்ரோஆக்டிவ் அசிஸ்டன்ஸ்: இதில் நீங்கள் சாட் செய்து பதில்களை பெற வேண்டியது கிடையாது. உங்களது டேப்களின் அடிப்படையில், கோபைலட் மோட் தானாகவே சில கேள்விகள் மற்றும் பதில்களை தயார் செய்து வைத்திருக்கும். இந்த கோபைலட் மோடை அணுகும்போதே உங்களுக்கு அதுவே பல்வேறு பரிந்துரைகளை கொடுக்கும்.
நேச்சுரல் லேங்குவேஜ் இன்டிகிரேஷன்: இதுவொரு ப்ரோஆக்டிவ் அசிஸ்டன்ட் போல செயல்பட்டாலும், உங்களுக்கு டெக்ஸ்ட், வாய்ஸ் மற்றும கமெண்ட் போன்ற நேச்சுரல் லேங்குவேஜ் இன்டிகிரேஷனை கொடுக்கிறது. ஆனால், இது உங்களது டேப்களுக்குள் மட்டுமே கொடுக்கும். தானாக எதையும் சர்ச் செய்து அதை உங்களுக்கு கொடுக்காது.

ஏஐ பவர்டு கன்டென்ட்: வெப் பேஜ்கள் மட்டுமல்லாமல், பிடிஎப்கள், வீடியோக்கள், போட்டோக்கள் போன்ற அனைத்து பார்மெட்களில் இருந்தும் கன்டென்ட்களை எடுத்து, அதை சம்மரைஸ், ரீபைன்மெண்ட், புல்லட்டின் பாய்ன்ட்கள் போன்றவற்றை செய்து கொள்ளலாம். ஈமெயில் ரைட்டிங், சோஷியல் மீடியா போஸ்ட் அல்லது ரிப்போர்ட்களை உருவாக்கலாம்.
கூகுள் ஏஐ மோட் குரோம் (Google AI Mode Chrome):
குரோம் பிரவுசரில் வழக்கமாக பயன்படுத்தும் ப்ளூ லிங்க் பேஜ்களை போலல்லாமல், ஒரு சாட் அசிஸ்டன்ட் போல உங்களது குறிப்பிட்ட கேள்வியின் அடிப்படையிலான டேட்டாக்களை ஏஐ மோட் கொடுக்கிறது. இந்த ஏஐ மோட் பீச்சரானது ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது. அமெரிக்கா & இந்தியாவில் இருக்கும் குரோம் யூசர்களுக்கு மட்டும் இப்போதைக்கு கிடைக்கிறது.
* சாட் அசிஸ்டன்ட் (Chat Assistant)
* பேஜ் கன்டெக்ஸ்ட் (Page Context)
* ஏஐ பவர்டு சர்ச் (AI-Powered Search)
* ஜெமினி இன்டிகிரேஷன் (Gemini Interaction)
* டீப் சர்ச் (Deep Search)

சாட் அசிஸ்டன்ட்: இதுவொரு பிரவுசிங் அசிஸ்டன்ட் போல செயல்படாது. நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு சாட்பாடில் கிடைப்பதை போல பதில்களை கொடுக்கும். ஆகவே, உங்களது கேள்விகளின் அடிப்படையில், அதுவே வெப்-பேஜ்களை சர்ச் செய்து, அந்த கன்டென்ட்களை ஒருங்கிணைத்து உங்களுக்கு கொடுக்கும். இதனால், நீங்கள்தான் கேள்விகளை கேட்க வேண்டும்.
பேஜ் கன்டெக்ஸ்ட்: கூகுள் ஏஐ மோடை பயன்படுத்த டேப்களை ஓப்பன் செய்ய வேண்டியது கிடையாது. உங்களது கேள்விக்கான பேஜ்களை அதுவே ஓப்பன் செய்யும். இது கிட்டத்தட்ட கூகுளில் நீங்கள் சர்ச் செய்வதை போலத்தான். ஆனால், ஒவ்வொரு பேஜ்-க்கும் நீங்கள் செல்ல வேண்டியது கிடையாது. உங்களுக்காக கூகுள் ஏஐ மோட் சென்று அதை செய்து முடிக்கும்.
ஏஐ பவர்டு சர்ச்: இது டேப்களின் அடிப்படையில் இருக்கும் டேட்டாக்களை ஒருங்கிணைப்பு செய்யாது. ஏஐ மூலம் அதுவே டெக்ஸ்ட், வீடியோ, ஆடியோ போன்றவற்றில் இருந்து டேட்டாக்களை எடுத்து கொள்ளும். அதன்பிறகே அதை உங்களின் கேள்விகளுக்கு ஏற்ப பதில்களாக கொடுக்கும். ஆகவே, இது டேப்களுக்கு அப்பாற்பட்டு செயல்படுகிறது.

ஜெமினி இன்டிகிரேஷன்: இது ஜெமினி இன்டிகிரேஷன் செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே, ஜெமினி அசிஸ்டன்ட் மூலம் செய்யப்படும் அனைத்தையும் (போட்டோ, வீடியோ ஜெனரேட் தவிர) இந்த கூகுள் ஏஐ மோடிலும் செய்து கொள்ளலாம். பிரவுசர்கள் ஏஐ அசிஸ்டன்ட்களுக்கு ஏற்ப மாறிவருவதால் குரோம் பிரவுசரில் இந்த ஏஐ மோடை கூகுள் நிறுவனம் கொண்டுவந்து இருக்கிறது.
டீப் சர்ச்: இந்த கூகுள் ஏஐ மோடில் சந்தாவும் இருக்கிறது. அதாவது, கூகுள் ஏஐ ப்ரோ (Google AI Pro), கூகுள் ஏஐ அல்ட்ரா (Google AI Ultra) சந்தாதார்களுக்கு ஜெமினி 2.5 ப்ரோ (Gemini 2.5 Pro) இன்டிகிரேஷன் மற்றும் டீப் சர்ச் அணுகல் கிடைக்கும். இதன் மூலம் டீப் ரிப்போர்ட், ரிசர்ச் பேப்பர் ரிப்போர்ட் போன்வற்றை செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








