Home
News

நியூஸ் ஆங்கர் லிசா தெரியுமா? இவங்க பிறக்கல, உருவாக்குனாங்க! செயற்கை நுண்ணறிவு அதிசயம்!

செயற்கை நுண்ணறிவின் அதீத வளர்ச்சிக்கு மத்தியில், ஒடிசாவில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர் லிசா (AI Anchor Lisa) அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த ஏஐ செய்தி வாசிப்பாளரை பார்த்தால், யாருக்கும் உண்மையான பெண் போலவே தோன்றிவிடும்.

இந்த ஏஐ செய்தி வாசிப்பாளரால் என்னவெல்லாம் செய்ய முடியும்? இந்த தொழில்நுட்பம் வருங்காலத்தில் எத்தகைய மாற்றத்தை கொண்டு வரப் போகிறது? நாம் நாள்தோறும் விரும்பி பார்க்கும், செய்தி தொலைக்காட்சிகளில் இனிமேல் வரப்போவது, மனிதர்களாக இருப்பார்களா? உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

நியூஸ் ஆங்கர் லிசா தெரியுமா? இவங்க பிறக்கல, உருவாக்குனாங்க!

இந்த 21ஆம் நூற்றாண்டில் எந்தவொரு தொழில்நுட்பமும் அடைந்திராத வளர்ச்சியை செயற்கை நுண்ணறிவு அடைந்து வருகிறது. நம்முடைய வாழ்க்கையில் தொழில்நுட்பம் பின்னிப் பிணைந்துவிட்டதால், அதன் மாற்றத்துக்கு ஏற்ப நாமும் மாறியாக வேண்டியிருக்கிறது. சமீபத்தில், அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், செயற்கை நுண்ணறிவு மூலம் தனது உருவத்தை விர்ச்சுவலாக உருவாக்கி அதை வைத்து ஆன்லைனில் டேட்டிங் தளம் ஒன்றை தொடங்கி இருந்தார்.

இந்த விர்ச்சுவல் உருவத்தை வாடிக்கையாளர்களிடம் பேசிப் பழகவிட்டு அதன் மூலம் பணமும் சம்பாதித்து வருகிறார். அதேபோல, நியூயார்க்கை சேர்ந்த மற்றொரு பெண் ஒருவர் தனக்கான கணவரையே செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கி, அதனுடன் பேசிப் பழகி வருகிறார். இப்படி நாளுக்கு நாள், செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் வளர்ச்சியை நாம் பார்த்து வருகிறோம்.

இப்போது, நமது நாட்டிலும் செயற்கை நுண்ணறிவு மனிதர்களை காண வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆம், ஒடிசா மாநிலத்தில் செயல்பட்டு வரும பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர் லிசாவை அறிமுகம் செய்துள்ளது. இந்த செய்தி வாசிப்பளாரிடம் செய்திகளை எழுதி கொடுத்தால் மட்டும் போதும், அச்சு அசலாக வாசித்து விடுவார்.

சொல்லப்போனால், மனிதர்கள் கூட கடினமான சில வார்த்தைகளை படிக்கும்போது, எங்காவது திணறுவார்கள். ஆனால், இந்த லிசா வாசிப்பாளரிடம் அந்த கதையே கிடையாது. அதுமட்டுமல்லாமல், எந்த மொழிகளில் வேண்டுமானாலும் லிசாவால் செய்திகளை படிக்க முடியும். அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்க முடியும். இருப்பினும், இப்போது ஆங்கிலம் மற்றும் ஒடியா மொழிகளில் செய்திகளை வாசித்து வருகிறார்.

இந்த லிசாவின் உருவம் அதே தொலைக்காட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து வரும் மற்றொரு பெண்ணை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஏனென்றால், அச்சு அசலாக பெண் போலவே லிசா தோன்றுகிறார். செயற்கை நுண்ணறிவு பற்றி தெரியாத யாரேனும், லிசா செய்தி வாசிப்பை பார்த்தால், அவர் மீது துளியும் சந்தேகம் ஏற்படாது.

இதேபோல வருங்காலத்தில் மற்ற செய்து நிறுவனங்களும் ஏஐ செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. ஏனென்றால், செயற்கை நுண்ணறிவு வாசிப்பாளர்களுக்கு சம்பளம் கொடுக்கத் தேவையில்லை, விடுப்பு கொடுக்கத் தேவையில்லை, எவ்வளவு நேரம் வேண்டுமாலும் பணியை தொடர முடியும், இப்படி பல காரணங்கள் இருக்கின்றன.

இருப்பினும், மனிதர்களின் வரவேற்பை பொறுத்தே அவற்றின் ஆதிக்கம் நம்மிடையே இருக்கப்போகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
AI News Anchor Lisa Introduced By Odisha Based Private Channel
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X