Home
News

அசால்ட்டாக 1 நிமிடத்தில் பாஸ்வோர்டை திறக்கிறதா AI? எந்த மாதிரியான Password பாதுகாப்பானது?

AI பயன்பாடு அதிகரித்துவிட்டது. மக்கள் இப்போது பல வேலைகளில் AI-யை பயன்படுத்துகிறார்கள். ஹேக்கர்கள் இந்த AI-ஐ பாஸ்வோர்ட் திறக்கவும் பயன்படுத்த முடியும் என்று புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த AI-கள் வெறும் 1 நிமிடத்தில் உங்கள் பாஸ்வோர்டை திறந்துவிடுமாம்.

ஆனால், உங்கள் பாஸ்வோர்டை சில காம்பினேஷனில் நீங்கள் அமைத்திருந்தால், AI ரோபோட்களால் அதை கணித்து திறக்க முடியாதாம். உறுதியான பாஸ்வோர்டை வைத்திருந்தால் AI ரோபோட்களால் அந்த பாஸ்வோர்டை கண்டுபிடிக்க சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் கூட ஆகுமாம். உங்கள் வங்கி கணக்கு, பிரைவேட் மற்றும் அலுவலகம் தொடர்ப்பன அக்கௌன்ட்களில் என்ன மாதிரியான பாஸ்வோர்ட்களை நீங்கள் பயன்படுத்தினால் பாதுகாப்பானது என்று பார்க்கலாமா?

அசால்ட்டாக 1 நிமிடத்தில் பாஸ்வோர்டை திறக்கிறதா AI? எந்த Password சேஃப்

கடந்த இரண்டு மாதங்களில் AI இன் பயன்பாடு அதிகமாகிவிட்டது. ChatGPT-க்கு பிறகு இன்னும் பல AI கருவிகளின் வருகை இப்போது அதிகரித்துவிட்டது. AI இன் பயன்பாடு எப்படி இணைய பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்பது பற்றி பாதுகாப்பு நிபுணர்கள் ஏன் எச்சரித்து வருகின்றனர் என்பதை பற்றி இப்போது தெரிந்துகொள்ள போகிறோம் ​​AIரோபோட்கள் உண்மையிலேயே பாஸ்வோர்ட்களை எளிதாக சிதைக்க கூடிய திறன்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஹோம் செக்யூரிட்டி ஹீரோஸ் சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, அனைத்து பொதுவான பாஸ்வோர்ட்களில் கிட்டத்தட்ட 51% பாஸ்வோர்ட்களை AI ரோபோட்கள் ஒரு நிமிடத்திற்குள் கண்டறிந்துவிடுகிறது என்றும், அந்த பாஸ்வோர்டை சிதைக்க அதற்கு 1 நிமிடம் மட்டுமே தேவைப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், 65% பொதுவான பாஸ்வோர்ட்களை AI ஒரு மணி நேரத்திற்குள் சிதைத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம் 81% பாஸ்வோர்ட்களை ஒரு மாதத்திற்கும் குறைவான நேரத்தில் ஓபன் செய்ததாக கூறப்படுகிறது.

ஹோம் செக்யூரிட்டி ஹீரோஸ் கிட்டத்தட்ட 15,680,000 கணக்குகளின் பாஸ்வோர்ட்களை திறக்க PassGAN எனப்படும் AI பாஸ்வோர்ட் கிராக்கரைப் பயன்படுத்தியதாக கூறியுள்ளது. இந்த ஆய்வின் முடிவில், AI இடமிருந்து எந்த வகையான பாஸ்வோர்ட் கள் ' மிகவும் பாதுகாப்பானவை' என்ற இறுதி முடிவை ஆய்வுக்குழு வெளியிட்டுள்ளது. ஆய்வின்படி, 18 எழுத்துகளுக்கு மேல் உள்ள பாஸ்வோர்ட்கள் பொதுவாக AI பாஸ்வோர்ட் கிராக்கர்களுக்கு எதிராக பாதுகாப்பானவையாக செயல்படுகிறதாம்.

அசால்ட்டாக 1 நிமிடத்தில் பாஸ்வோர்டை திறக்கிறதா AI? எந்த Password சேஃப்

எண்கள் மட்டுமே இருக்கும் பாஸ்வோர்ட்களை சிதைக்க குறைந்தது 10 மாதங்கள் ஆகுமாம். குறியீடுகள், எண்கள், சிற்றெழுத்துகள் மற்றும் பெரிய எழுத்துகளைக் கொண்ட பாஸ்வோர்ட்களை AI உடைக்க 6 குவிண்டில்லியன் ஆண்டுகள் ஆகலாம் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. உங்கள் கடவுச்சொற்களை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது பற்றியும் சில தகவலை ஆய்வு குழு வெளியிட்டுள்ளது.

10 எழுத்துகள் கொண்ட இலக்கம் கொண்ட பாஸ்வோர்ட்களை கூட AI ரோபோட் எளிதாக ஹேக் செய்யகிறதாம். சிறிய எழுத்துக்களை மட்டுமே கொண்ட பத்து எழுத்து கடவுச்சொல்லை ஹேக் செய்ய ஒரு மணிநேரம் எடுக்குமாம். அதே சமயம் பத்து எழுத்துகளுடன் மிக்ஸ்ட்டு கேஸ் பாஸ்வோர்ட்களை திறக்க நான்கு வாரங்கள் எடுக்கும் என்று அறிக்கை குறிப்பிட்டது.

எழுத்துகள், குறியீடுகள் மற்றும் எண்களைப் பயன்படுத்தி ஒருவர் பத்து எழுத்துகள் கொண்ட வலுவான பாஸ்வோர்ட்டடைப் பயன்படுத்தினால், அது புரிந்துகொள்ள AI-க்கு ஐந்து ஆண்டுகள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. உங்கள் பாஸ்வோர்ட்டில் குறைந்தது 15 எழுத்துகள் இருப்பது பாதுகாப்பானது. பாஸ்வோர்ட்டில் குறைந்தது இரண்டு எழுத்துக்கள் (பெரிய மற்றும் சிறிய எழுத்து), எண்கள் மற்றும் குறியீடுகள் இருக்க வேண்டும்.

இதை பின்பற்றினால், உங்கள் பாஸ்வோர்ட் பாதுகாப்பானதாக இருக்கும் என்று ஆய்வின் முடிவுகள் பரிந்துரைக்கிறது. உங்கள் பாஸ்வோர்ட்டில் இந்த விஷயங்கள் இருக்கிறதா இல்லையா என்று உடனே கவனித்துக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
AI can unlock password in 1 minute What Kind of Password is Safe
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X