Home
News

இனி என்னலாம் நடக்குமோ? மனதில் நினைப்பதை எழுதிகாட்டும் AI.. எக்குத்தப்பா நினைக்காதீங்க?

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் பிறர் மனதில் நினைப்பதை அறிந்து கொள்ளும் சக்தியை பெற்றதுபோல், ஒரு படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். ஒருவர் எப்படி மனதில் ஒன்று வைத்துக் கொண்டு, வெளியே வேறொன்று பேசுகிறார் என்பதை அந்த படம் நமக்கு விளக்கிக்காட்டி இருக்கும்.

இதுபோன்று மாயமோ, மந்திரமோ இல்லாமல் ஏஐ (AI) மூலம் மற்றவர்கள் மனதில் நினைப்பதை தெரிந்து கொள்ள முடியும் என்று டெக்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது. அதுகுறித்த விவரம் இதோ. 21ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்ப வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் வருகை மிகப்பெரும் மாற்றங்களுக்கு தொடக்கமாக அமைந்துள்ளது.

மனதில் நினைப்பதை எழுதிகாட்டும் AI.. எக்குத்தப்பா நினைக்காதீங்க.?

இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அடுத்த சில ஆண்டுகளில் ஒவ்வொரின் வீட்டிலும் ஏஐ அசிஸ்டென்டாக இருந்தால கூட ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. சிக்கலான கம்ப்யூட்டர் புரோகிராமிங் ( Computer Programming ) முதல் பள்ளி மாணவர்களின் வீட்டுப்பாடங்கள் வரை செயற்கை நுண்ணறிவு சாட்போட்கள் ( ChatBots ) எழுத தொடங்கிவிட்டன.

இப்போது மனித மூளையையும் படித்து எழுத்துப்பூர்வமாக நமக்க கொடுக்க காத்திருக்கின்றன. ஏற்கனவே, நமது மூளையில் சிந்திக்கும் காட்சிகளை புரிந்துகொண்டு அதை விளக்கிக்கூறும் அல்கோரிதம்களை உருவாக்க பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. எலான் மஸ்க்கின் நியூராலிங்க் (Neuralink) நிறுவனம் முதல் மார்க் ஜூக்கர்பெர்க்கின் ஃபேஸ்புக் ( Facebook) நிறுவனம் வரை மனித மூளையை படிப்பதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த சூழலில் வெறும் எஃப்எம்ஆர்ஐ ஸ்கேன் ((f-MRI) Scans) டேட்டாகளை மட்டுமே பயன்படுத்தி மனதில் நினைப்பதை செயற்கை நுண்ணறிவு உதவியுடன் எழுத்துகளாக மாற்ற முடியும் என்று அமெரிக்காவின் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைகழக ஆராய்ச்சி குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த குழுவில் மொத்தம் உள்ள 4 பேரில் ஒருவர் இந்திய மாணவராவார்.

இதுகுறித்து டெக்சாஸ் பல்கலைகழகத்தின் நரம்பியல் மற்றும் கணக்கீட்டு அறிவியல் துறையின் உதவி பேராசிரியரும், ஆராய்ச்சிக்கு குழுவின் தலைவருமான அலெக்சாண்டர் ஹத் கூறுகையில், "எஃப்எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் மனித மூளையில் நினைக்கும் எண்ணங்களை எழுத்துகளாக கொண்டுவரும் ஆராய்ச்சியில் 15 ஆண்டுகளாக இருந்து வருகிறேன். இந்த ஆராய்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.

எஃப்எம்ஆர்ஐ ஸ்கேனில் வைக்கப்பட்டவர்கள் மனதில் நினைத்ததை கிட்டத்தட்ட சரியாக ஏஐ டிகோடிங் செய்துள்ளது. சொல்லப்போனால், பக்கவாதம், மோட்டார் நியூரான் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு பேச்சு வராது. இவர்களை எஃப்எம்ஆர்ஐ ஸ்கேனில் வைத்து அவர்கள் நினைப்பதை தெரிந்துகொள்ளவே இந்த ஆராய்ச்சி தொடங்கப்பட்டது.

இப்போது தன்னார்வலர்களும் எஃப்எம்ஆர்ஐ ஸ்கேனில் இருந்து மனதில் நினைப்பதை ஏஐ எவ்வாறு டிகோட்டிங் செய்கிறது என்பதையும் கவனித்து வருகிறோம். அப்படியொரு தன்னார்வலர் எஃப்எம்ஆர்ஐ ஸ்கேனில் இருந்தபோது, அவரிடம் வெளியே இருந்த ஒருவர், "என்னிடம் வாகன ஓட்டுநர் உரிமம் இல்லை" என்று கூறியுள்ளார்.

இதற்கு உள்ளே இருந்தவர் பதில் சொல்லமால் மனதில் எதையோ நினைத்து கொண்டார். இதை டிகோட்டிங் செய்த ஏஐ, " அவர் இன்னும் வாகனம் ஓட்டக் கற்றுக் கொள்ளவில்லை" என்று எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளது. இதுகிட்டத்தட்ட பதில் அளிப்பதற்கு சமமாக உள்ளது. இதேபோல பலர் மனதில் நினைப்பதை டீகோடிங் செய்து வருகிறோம். இது மனித மூளையை படிப்பதற்கான தொடக்கமாக அமையும்" எனத் தெரிவித்தார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
AI can do Mind-Reading by Turning Thoughts into Text University of Texas Research Findings
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X