Home
News

அயோத்திக்குள்ள சும்மா நுழைய முடியாது.. AI முதல் X-ray வரை.. அட்வான்ஸ்டு டெக்னாலஜி வச்சி அசத்தும் மோடி அரசு!

அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேகத்தை (Ayodhya Ram Temple Consecration) திருவிழாவை முன்னிட்டு உத்திரபிரதேச எல்லைகளில், பாதுகாப்பு நடவடிக்கைகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. வெறுமனே ஆயிரக்கணக்கான போலீசார்களை குவித்து வைப்பது மட்டுமன்றி ஒன்றிய அரசங்கம் சில புத்திசாலிதமான, "தொழில்நுட்பத்தனமான" வேலைகளையும் செய்துள்ளது.

பேஸ்ஃபுக் (Facebook), எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற சமூக ஊடக தளங்களில் (அதாவது சோஷியல் மீடியா பிளாட்ஃபார்ம்களில்) கண்காணிப்பு, சட்டம் மற்றும் ஒழுங்குக்கு பாதகம் விளைவிக்கும் தவறான தகவல்கள் அல்லது போலியான செய்திகள் பரவுகிறதா என்பதை சரிபார்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் அயோத்தி ராமர் கோவிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அங்கே பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதில் ஏஐ (AI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் (Artificial Intelligence) ஆதரவு உடனான 10,000 சிசிடிவி கேமராக்கள் (CCTV Cameras) மற்றும் ட்ரோன்களும் (Drones) அடக்கம்.

இதுதவிர்த்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டுவரும் பைகள் மற்றும் பெட்டிகளை திறம்பட ஸ்கேன் செய்ய எக்ஸ-ரே லக்கேஜ் ஸ்கேனர்கள் (X-ray luggage scanners) மற்றும் கார்கள் மற்றும் லாரிகளுக்கு கீழே சோதனை செய்ய உதவும் அண்டர் வெஹிக்கல் ஸ்கேனிங் சிஸ்டம் (Under Vehicle Scanning System - UVSS) போன்ற உயர் தொழில்நுட்ப கேஜெட்டுகளும் பாதுகாப்பு அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

AI முதல் X-ray வரை.. அயோத்தி ராமர் கோவிலில் அட்வான்ஸ்டு டெக்னாலஜி!

அறியாதோர்களுக்கு அண்டர் வெஹிக்கல் ஸ்கேனிங் சிஸ்டம் என்பது வாகனங்களுக்கு கீழே மறைக்கப்பட்ட வெடிபொருட்கள், ஆயுதங்கள் அல்லது அபாயகரமான பொருட்களை அடையாளம் காண உதவும் ஒரு தொழில்நுட்பமாகும்.

மறுகையில் உள்ள எக்ஸ-ரே லக்கேஜ் ஸ்கேனர்கள் என்று குறிப்பிடப்படுவது உயர்-பாதுகாப்பு சூழல்களுக்காக வடிவமைக்கப்பட்ட க்ரிட்டிஸ்கேன் 100100 எச் எக்ஸ்-ரே பேக்கேஜ் ஸ்கேனர்கள் (KritiScan 100100 H X-ray baggage Scanner) ஆகும். இது தடைசெய்யப்பட்ட பொருட்களை துல்லியமாக அடையாளம் காண நிகழ்நேர எக்ஸ்-ரே படங்களை (Real-time X-ray images) வழங்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

AI முதல் X-ray வரை.. அயோத்தி ராமர் கோவிலில் அட்வான்ஸ்டு டெக்னாலஜி!

போலீசார்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் தவிர்த்து, பல்வேறு அவசரநிலைகளை கையாள்வதில் பயிற்சி பெற்ற தேசிய பேரிடர் மீட்புப் படையின் ( National Disaster Response Force - NDRF) குழுக்களும் கூட அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தன்பங்கிற்கு உத்தரபிரதேச காவல்துறையும் சில விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. சிவப்பு மண்டலம், மஞ்சள் மண்டலம் மற்றும் அயோத்தி மாவட்டம் முழுவதும் உள்ள ஒவ்வொரு சாலைக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான பக்தர்கள் வருகை தரும் தரம் பாதை (Dharam Path) மற்றும் ராம் பாதையில் (Ram Path) போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளன.

மேலும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பல மொழித் திறன் கொண்ட போலீஸார் சாதாரண உடையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், என்டிஆர்எப் (NDRF) மற்றும் எஸ்டிஆர்எப் (SDRF) குழுக்களும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கை பராமரிக்க டெல்லி போலீஸ் குழுக்கள் கோவில்களின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கடுமையான கண்காணிப்பிலும் ஈடுபடுவார்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
AI based CCTV Camera X ray Luggage Scanner Advanced Technologies in Ayodhya Ram Temple Consecration
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X