இதுக்குதான் "கூகுள்" வேணும்: விரைவில் வரும் ப்ராஜெக்ட் ஸ்டார்லைன்- 3D வீடியோகால்.,நேரில் பேசுறமாதிரி இருக்கும்

|

ஐ/ஓ நிகழ்வில் கூகுள் சமீபத்திய வீடியோ கான்பரன்சிங் தொழில்நுட்பமான ப்ராஜெக்ட் ஸ்டார்லைனை வெளியிட்டது. பேசும் எதிர்தரப்பு நபருடன் நேருக்கு நேர் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பை உருவாக்குவதே இதன் குறிக்கோள் ஆகும். கண்முன் தோன்றும் காட்சிக்கு முன்னால் நபர் தத்ரூபமாக நேரில் இருப்பது போல் தோன்றினால் இருக்கும் நிகழ்வை கற்பனை செய்து பாருங்கள். மேலும் நீங்கள் நேரடியாக பேசலாம் மற்றும் தொடர்பு கொள்ளலாம் என்று கூகுள் வலைப்பதிவு இந்த ப்ராஜெக்ட் குறித்து மேலும் விளக்குகிறது. இது முற்றிலும் வியக்கத்தக்க தொழில்நுட்பமாகும். சிலருக்கு இது பெரிய ஆசிர்வாதம் ஆகும், கூகுளின் இந்த புதிய தொழில்நுட்பம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஸ்டார்லைன் திட்டம் என்றால் என்ன

ஸ்டார்லைன் திட்டம் என்றால் என்ன

ஸ்டார்லைன் திட்டம் என்றால் என்ன என்பது குறித்து முதலில் பார்க்கலாம். ப்ராஜெக்ட் ஸ்டார்லைன் முன்மாதிரி வீடியோ சாட் பயன்பாடாகும். இது எதிர்புற நபருடன் ஒரு அறையில் உண்மையில் அமர்ந்திருப்பது போன்ற சூழ்நிலையை உருவாக்க மேம்பட்ட 3டி மேப்பிங் மற்றும் திட்டத்தை பயன்படுத்துகிறது. அதாவது நீங்கள் மற்றொரு நபரை நேரடியாக பார்க்கும் அனுபவத்தை வழங்குகிறது.

"ஹைப்பர்-டெலிப்ரெசன்ஸ்"

கூகுள் இந்த தொழில்நுட்பத்தை "ஹைப்பர்-டெலிப்ரெசன்ஸ்" என அழைக்கிறது. ப்ராஜெக்ட் ஸ்டார்லைன் அம்சமானது தங்களை ஹாலோகிராமாக மாற்றுவதன் மூலமாக வீடியோ கான்பரன்சிங்கில் மேம்பட்ட அம்சத்தை வழங்குவதை கூகுள் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இந்த தொழில்நுட்பத்தை முழுவதுமாக செயல்படுத்த கணினி வியூ, இயந்திர கற்றல், இடம்சார்ந்த ஆடியோ மற்றும் நேரடி வியூ அனுபவத்திற்கு கூகுள் ஆராய்ச்சி செய்து வருகிறது. இதற்கு கூகுள் லைட் ஃபீல்ட் டிஸ்ப்ளே சிஸ்டத்தில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.

கூடுதல் டிஸ்ப்ளே, ஹெட்செட் உதவியின்றி அம்சம்

இந்த தொழில்நுட்பமானது கூடுதல் டிஸ்ப்ளே, ஹெட்செட்களின் உதவியின்றி சிறந்த ஒலி மற்றும் சூழலை உருவாக்குகிறது. இது தங்களை சுற்றி ஒரு உண்மையான சூழலை உருவாக்குகிறது. அதேபோல் இந்த தொழில்நுட்பம் ஒருவரிடம் பேசும்போது நேரடியாக பேசும் உணர்வை உருவாக்க அனுமதிக்கிறது.

உயர்நிலை சாதனங்கள்

உயர்நிலை சாதனங்கள்

ஸ்டார்லைன் பயன்பாடானது ஒருசில கூகுள் ஆஃபிஸ்களில் மட்டுமே கிடைக்கிறது. இது தனிப்பயனாக்கப்பட்ட வன்பொருள் மற்றும் உயர்நிலை சாதனங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. சோதனை நடவடிக்கையாக நியூயார்க், சியாட் போன்ற பகுதிகளில் முன்னதாகவே கூகுள் ஊழியர்களை இதை பயன்படுத்த அனுமதித்தது. கூகுள் இந்த புதிய தொழில்நுட்பத்தை சுகாதார மற்றும் ஊடகங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவன கூட்டாளர்கள் முன்னிலையில் வெளியிட்டது. அதேபோல் ப்ராஜெக்ட் ஸ்டார்லைன் சோதனை ஏற்பாடுகள் இந்தாண்டு பிற்பகுதியில் தொடங்கும் என கூகுள் தெரிவித்துள்ளது.

3டி படங்கள் உருவாக்க தெளிவுத்திறன்

3டி படங்கள் உருவாக்க தெளிவுத்திறன்

கூகுள் ஸ்டார்லைன் திட்டம் ஆனது நீங்கள் பார்க்கும் மற்றும் பேசும் அனுபவத்தை யதார்த்தமாக மாற்றுகிறது. ஸ்டார்லைன் திட்டம் ஒரு நபரின் 3டி படங்களை உருவாக்க உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள் மற்றும் ஆழ சென்சார்களை பயன்படுத்துகிறது. கேமராக்கள், சென்சார்கள் மற்றும் மைக்ரோஃபோன்கள் உள்ளிட்ட முக்கிய வன்பொருள் ஸ்டார்லைன் அம்சத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹாலோகிராம் பயன்பாட்டு அம்சம்

ஹாலோகிராம் பயன்பாட்டு அம்சம்

ஹாலோகிராம் பயன்பாட்டைத் தவிர முதன்மை டெவலப்பர் மாநாட்டில் கூகுள் ஸ்பெக்ட்ரம் தயாரிப்புகள் உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டது. அதேபோல் ஆக்டிவ் ஆண்ட்ராய்டு பயனர்கள் தற்போது 3 பில்லியனை எட்டியுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டது. கூகுள் ஹைப்பர் டெலிப்ரெசன்ஸ் என இதை அழைக்கிறது, ப்ராஜெக்ட் ஸ்டார்லைன் முன்மாதிரி வீடியோ சாட் பயன்பாடாகும். இது பயனர்களை 3டி ஹாலோகிராமாக மாற்றுகிறது.

3டி பயன்பாட்டு அம்சம்

3டி பயன்பாட்டு அம்சம்

பல கோணங்களில் நபரை பதிவு செய்ய பயன்படும் சிறப்பு கருவிகளான கேமராக்கள் மற்றும் ஆழ சென்சார்கள், ஸ்ட்ரீமிங் வழிமுறைகள் உள்ளிட்ட தனிப்பயன் மென்பொருளான கணினி அறிவியல் முன்னேற்றங்கள், 3டி முறையில் ஒருவரின் யதார்த்த பிரதிநிதித்துவத்தை வழங்கும் ஒளிபுலக் காட்சி அம்சம் உள்ளிட்டவைகள் இதில் பயன்படுத்தப்படுகிறது.

Best Mobiles in India

English summary
AI 3D Feel Video Call Technology: Google's New Project Starline

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X