"சிங்கிள்" கேமராவுல இவ்ளோ அம்சங்களா? செம்ம கடுப்பில் OnePlus Haters!

|

ஒட்டுமொத்த ஒன்பிளஸ் ரசிகர்கள் மட்டுமின்றி, ப்ரீமியம் ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்க வேண்டும் என்கிற யோசனையில் உள்ள பலரும் - ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்காக காத்திருக்கின்றனர் என்றே கூறலாம்.

ஏனெனில் அன்று தான் OnePlus 10T 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகிறது. இதற்கிடையில் 10டி மாடல் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வண்ணம் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

ஒருவேளை நீங்களொரு 'ஒன்பிளஸ் ஹேட்டர்' என்றால் நிச்சயம் "அது" உங்களை கடுப்பாக்கும்!

அது ஒன்பிளஸ் 10டி-யின் கேமராவை பற்றியது!

அது ஒன்பிளஸ் 10டி-யின் கேமராவை பற்றியது!

ஒன்பிளஸ் நிறுவனம் அதனொரு 'கம்யூனிட்டி போஸ்ட்' ஒன்றின் வழியாக, வரவிருக்கும் ஒன்பிளஸ் 10டி 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப்பை பற்றிய தகவல்களை வெளிப்படுத்தி உள்ளது.

அதன்படி, 10டி ஆனது 50 மெகாபிக்சல் சோனி IMX766 சென்சார்-ஐ கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும்.

பாவம் POCO ரசிகர்கள்.. இன்னும் எத்தனை நாள் தான் இப்படி ஏமாறுவாங்களோ?!பாவம் POCO ரசிகர்கள்.. இன்னும் எத்தனை நாள் தான் இப்படி ஏமாறுவாங்களோ?!

அது மட்டும் இல்ல!

அது மட்டும் இல்ல!

OnePlus 10T ஆனது ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய இமேஜ் கிளாரிட்டி இன்ஜினையும் (Image Clarity Engine - ICE) ஆதரிக்கும். இது வேகமாக புகைப்படங்களை கைப்பற்றும் என்றும், சிறந்த விவரங்களை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் வரவிருக்கும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் 10-பிட் கலர் சப்போர்ட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. "அவ்வளவு தான்!" என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்!

இதன் கேமரா செட்டப்பில் இன்னும் நிறைய இருக்கிறது!

இதன் கேமரா செட்டப்பில் இன்னும் நிறைய இருக்கிறது!

அதோடு நில்லாமல், மேம்படுத்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வழங்கும் நோக்கத்தின் கீழ் இந்த ஸ்மார்ட்போனில் ஆப்டிகல் (Optical) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷனும் (Electronic image stabilisation) உட்பொதிக்கப்படும்.

மேலும் சிறந்த HDR செயல்திறனுக்காக இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸின் HDR 5.0 மற்றும் TurboRAW அல்காரிதம்களைப் பயன்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

ஒரே நாளில் 5 தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்யும் Realme; இதோ முழு லிஸ்ட்!ஒரே நாளில் 5 தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்யும் Realme; இதோ முழு லிஸ்ட்!

ட்ரிபிள் ரியர் கேமராவில் மீதமுள்ள 2 சென்சார்கள் பற்றி?

ட்ரிபிள் ரியர் கேமராவில் மீதமுள்ள 2 சென்சார்கள் பற்றி?

ஒன்பிளஸ் 10T இல் உள்ள ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் மெயின் 50-மெகாபிக்சல் கேமராவுடன் 119-டிகிரி பீல்ட் ஆப் வியூ (Field of view) அல்ட்ரா வைட் கேமரா மற்றும் ஒரு மேக்ரோ கேமராவும் இருக்கும்.

இருப்பினும் "மற்ற இரண்டு" கேமரா சென்சார்கள் தொடர்பான எந்த தொழில்நுட்ப (மெகாபிக்சல் விவரங்களையும் ஒன்பிளஸ் நிறுவனம் பகிர்ந்து கொள்ளவில்லை.

அப்போது OnePlus 10T-இல் வெறுமனே கேமராக்கள் மட்டும் தான்

அப்போது OnePlus 10T-இல் வெறுமனே கேமராக்கள் மட்டும் தான் "வெயிட்டாக" இருக்குமா?

கண்டிப்பாக இல்லை! ஏனெனில் ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் அறிமுகமாகும் நிறுவனத்தின் ப்ரீமியம் டி சீரீஸ் மாடல் ஆனது முன்னதாக அறிமுகமான எல்லா மாடல்களையும் மிஞ்சும் அளவிலான அம்சங்களையே பேக் செய்யும்.

நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 8டி-க்கு பிறகு ஒன்பிளஸ் 9டி மாடல் அறிமுகம் செய்யப்படவில்லை. இதனாலேயே கூட ஒன்பிளஸ் 10டி மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

பொசுக்குனு Redmi K50i வாங்கிட்டா.. பொறுமையா உட்காந்து வருத்தப்படனுமா!?பொசுக்குனு Redmi K50i வாங்கிட்டா.. பொறுமையா உட்காந்து வருத்தப்படனுமா!?

10T-யின் டிஸ்பிளே, ப்ராசஸர், ஸ்டோரேஜ், பேட்டரி-லாம் எப்படி இருக்கு?

10T-யின் டிஸ்பிளே, ப்ராசஸர், ஸ்டோரேஜ், பேட்டரி-லாம் எப்படி இருக்கு?

ஒன்பிளஸ் 10டி ஆனது Snapdragon 8+ Gen 1 SoC உடன் வரும் என்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அது தவிர்த்து, இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் உடனான 6.7-இன்ச் அளவிலான புல்-எச்டி+ AMOLED டிஸ்ப்ளே இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.

சார்ஜிங் டிபார்ட்மென்ட்-ஐ பொறுத்தவரை, இது 150W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,800mAh பேட்டரியை பேக் செய்யலாம்.

இது 16GB LPDDR5 ரேம் மற்றும் அதிகபட்சமாக 512GB UFS 3.1 இன்டர்னல் ஸ்டோரேஜை வழங்கலாம்.

இந்தியாவில் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்?

இந்தியாவில் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்?

வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், ஒன்பிளஸ் 10டி 5ஜி-யின் இந்திய விலை நிர்ணயத்தில் எக்கச்சக்கமான குழப்பங்கள் நிலவுகின்றன. ஏனெனில் இதுவரை வெளியான தகவல்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக உள்ளது.

முன்னதாக வெளியான லீக்ஸ் தகவல்களானது, இது ரூ.35,500 - ரூ.47,400 என்கிற விலை வரம்பின் கீழ் அறிமுகமாகும் என்கின்றன. ஆனால் சமீபத்தில் வெளியான ஒரு தகவல், இது ரூ.49,999 என்கிற விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்கிறது.

எனவே அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் வரை, விலை பற்றி எங்களால் எதையுமே உறுதியாக சொல்ல முடியாது.

Nothing நிறுவனத்திற்கு நன்றி கூறும் Samsung ரசிகர்கள்! அப்படி என்ன நடந்தது?Nothing நிறுவனத்திற்கு நன்றி கூறும் Samsung ரசிகர்கள்! அப்படி என்ன நடந்தது?

ஒன்பிளஸின் புதிய TWS இயர்பட்ஸ் ஒன்றும் வருகிறது!

ஒன்பிளஸின் புதிய TWS இயர்பட்ஸ் ஒன்றும் வருகிறது!

ஆனால், அது ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படாது. அதற்கு முன்பாகவே அறிமுகம் செய்யப்படும், அதாவது ஆகஸ்ட் 1 ஆம் தேதியே இந்திய அறிமுகத்தை சந்திக்கும்.

அது OnePlus Nord Buss CE என்று அழைக்கப்படும் மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சீரீஸின் கீழ் வரும் இரண்டாவது இயர்பட்ஸாக இருக்கும். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இது ரூ.3,000 க்கு கீழ் அறிமுகம் செய்யப்படலாம்.

முன்னதாக வெளியான OnePlus Nord Buds-இன் அம்சங்கள்!

முன்னதாக வெளியான OnePlus Nord Buds-இன் அம்சங்கள்!

நினைவூட்டும் வண்ணம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் (ஏப்ரல் மாதத்தில்) ஒன்பிளஸ் நிறுவனத்தின் நோர்ட் சீரிஸின் கீழ் முதல் TWS இயர்பட்ஸாக OnePlus Nord Buds அறிமுகமானது.

இது 12.4mm டைனமிக் டிரைவர்ஸ், 7 மணிநேரம் வரை தொடர்ச்சியான பிளே-பேக் டைம், நான்கு Noise-canceling மைக்ரோஃபோன்கள், டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸிற்கான IP55 ரேட்டிங், ப்ளூடூத் 5.2 மற்றும் லோ லேடன்சி மோட் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் போன்ற அம்சங்களை வெறும் ரூ.2,799 க்கு வழங்குகிறது.

Photo Courtesy: OnePlus

Best Mobiles in India

English summary
Ahead of August 3 Launch OnePlus 10T Camera Specifications Confirmed Nord Buds CE Launch on August 1

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X