Home
News

OnePlus-ன் ருத்ர தாண்டவம்.. 8000mAh பேட்டரி, 8GB ரேம் உடன் அடுத்த அறிமுகம்.. தட்டி தூக்கும் விலை!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் அடுத்த அறிமுகத்திற்கு தயாராக உள்ளது. ஒன்பிளஸின் இரண்டாவது ஆண்ட்ராய்டு டேப்லெட் (Android Tablet) ஆன ஒன்பிளஸ் பேட் கோ (OnePlus Pad Go) வருகிற அக்டோபர் 6 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அறிமுகத்திற்கு பின்னர் ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் ஆனது அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) ஆகிய இரண்டு இ-காமர்ஸ் வலைத்தளத்திலுமே வாங்க கிடைக்கும். இவ்விரு தளங்களிலுமே ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட்டின் முக்கிய அம்சங்கள் படிப்படியாக வெளிப்படுத்தபட்டு வருகிறது.

OnePlus: 8000mAh பேட்டரி, 8GB ரேம் உடன் அடுத்த அறிமுகம்!

இதற்கிடையில் ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட்டின் சிப்செட், பேட்டரி மற்றும் கேமராக்கள் பற்றிய விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. அதென்ன விவரங்கள்? ஒன்பிளஸ் பேட் கோ வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதன் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இதோ விவரங்கள்:

முன்னதாக ட்விட்டர் (Twitetr) என்று அழைக்கப்பட்ட எக்ஸ்.காம் (X.com) வழியாக ஒன்நார்மல்யூஸர்நேம் (OneNormalUsername) என்கிற பெயரின்கீழ் உள்ள ஒரு டிப்ஸ்டரின் கூற்றுப்படி, ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் ஆனது ஹீலியோ ஜி99 சிப்செட் (Helio G99 Chipset) மூலம் இயக்கப்படும் மற்றும் 8000எம்ஏஎச் பேட்டரியை (8000mAh Battery) பேக் செய்யும்.

கேமராக்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட்டின் பின்பக்கத்தில் 8 மெகாபிக்சல் ரியர் கேமரா இருக்கும். முன்பக்கத்தை பொறுத்தவரை, 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறும். டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 2.4கே ரெசல்யூஷன் மற்றும் 7:5 ரேஷியோவை ஆதரிக்கும் 11.35-இன்ச் எல்சிடி பேனலை கொண்டிருக்கும் என்பதை ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.

இது டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவுடன் குவாட் ஸ்பீக்கர்களையும் (Quad Speakers) கொண்டிருக்கும். மேலும் ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் ஆனது ஆக்சிஜன்ஓஎஸ் 13.2 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) உடன் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட்டில் யூஎஸ்பி-சி போர்ட் இடம்பெறும், அது யூஎஸ்பி 2.0 தரநிலையை (USB 2.0 Standard) வழங்கும். மேலும் இது வைஃபை-ஒன்லி (Wi-Fi Only) மற்றும் செல்லுலார் (Cellular) என இரண்டு வெர்ஷன்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி யுஎப்எஸ் 2.2 ஸ்டோரேஜை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனும் வெளியாகும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது. இதுதவிர்த்து கூடுதல் ஸ்டோரேஜிற்காக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டையும் இது கொண்டிருக்கலாம்.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இந்தியாவில் ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் ஆனது ரூ.25999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இது ஒன்பிளஸின் முதல் டேப்லெட் ஆன ஒன்பிளஸ் பேட்-ஐ விட மிகவும் மலிவான விலைக்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நினைவூட்டும் வண்ணம், ஒன்பிளஸ் பேட் டேப்லெட் ஆனது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகமானது. 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் மாடல் ரூ.37,999 க்கும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் மாடல் ரூ.39,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

ஒன்பிளஸ் பேட் கோ அறிமுகமாகும் ஒரு நாளைக்கு முன்பாக, அதாவது அக்.5 ஆம் தேதியன்று சாம்சங்கின் புதிய டேப்லெட் ஆன கேலக்ஸி டேப் ஏ9 (Samsung Galaxy Tab A9) மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. சுவாரஸ்யமாக பேட் கோவில் உள்ளே அதே ஹீலியோ ஜி99 சிப்செட் தான் டேப் ஏ9 மாடலிலும் இடம்பெறும் என்றும், கேலக்ஸி டேப் ஏ9 மாடலானது ரூ.22990 க்கு அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Ahead October 6 Launch OnePlus Pad Go Tablet Key Specifications Leaked Check Expected Price in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X