Home
News

இப்போ விட்டா இனி கிடைக்காது.. ரூ.1000 ரூ.2000 இல்ல.. முழுசா ரூ.40100 தள்ளுபடி.. தெறிக்கும் iPhone 14 ஆர்டர்!

இந்த 2023 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஐபோன் 15 சீரீஸ் மாடல்கள், வருகிற செப்டம்பர் 12 ஆம் தேதி நடக்கும் ஆப்பிள் வெளியீட்டு நிகழ்வின் போது அறிமுகம் செய்யப்படவுள்ளன. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 2023 ஐபோன்கள் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் உள்ளன!

ஏனென்றால் ஐபோன் 15 சீரீஸின் கீழ் வரும் 4 ஐபோன்களுமே யூஎஸ்பி டைப்-சி போர்ட் உடன் வரவுள்ளன. அதுமட்டுமின்றி ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்குமே சில பெரிய மேம்பாடுகளை பெறுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முழுசா ரூ.40100 தள்ளுபடி.. தெறிக்கும் iPhone 14 ஆர்டர்!

இதற்கிடையில், ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்ட இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் (Flipkart) வலைதளமானது ஆப்பிள் ஐபோன் 14 (iPhone 14) மாடலை பெரும் தள்ளுபடி விலையின் கீழ் விற்பனை செய்கிறது.

உடனே ரூ.1000, ரூ.2000 என்கிற அளவிலான தள்ளுபடி என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். ஐபோன் 14 மீது பிளிப்கார்ட் வழங்கும் மொத்த தள்ளுபடியின் மதிப்பு ரூ.40100 ஆகும். அதாவது எல்லா தள்ளுபடிகளையும் நீங்கள் சரியாக பயன்படுத்தினால் ஐபோன் 14-ஐ ரூ.30,000 க்கும் குறைவான விலையில் வாங்க முடியும்!

அதெப்படி? ஐபோன் 14 மாடலானது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.67,999க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது ஆப்பிளின் அதிகாரப்பூர்வ ஸ்டோரில் இருக்கும் விலையை விட ரூ.11,901 குறைவான விலைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இது தவிர, எச்டிஎஃப்சி வங்கியின் டெபிட் கார்டு இஎம்ஐ மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் ரூ.4000 தள்ளுபடி கிடைக்கும்.

இதன் மூலம் ஐபோன் 14 மாடலின் விலையை ரூ.63,999 ஆக குறைக்க முடியும். இது தவிர, பிளிப்கார்ட் வலைத்தளமானது உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு ஈடாக ரூ.36,100 வரையிலான எக்ஸ்சேன்ஜ் ஆபரையும் வழங்குகிறது. அதாவது அனைத்து வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடிகளுக்கு பிறகு, ஐபோன் 14 மீது முழுதாக ரூ.40,100 தள்ளுபடி கிடைக்கும்; ஆக இதை ரூ.27,899 க்கு வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

பிளிப்கார்ட் வழங்கும் இந்த ஆஃபரை பயன்படுத்தலாமா என்று கேட்டால்.. இன்னும் சிறிது நாட்கள் காத்திருக்கலாம். ஏனென்றால், வழக்கமாக புதிய ஐபோன்கள் அறிமுகம் ஆனதும் பழைய மாடல்களின் விலைகள் அதிகாரபூர்வமாக குறைக்கப்படும். அதாவது ஐபோஜ் 15 அறிமுகமானதும், ஐபோன் 14 மீது ஆப்பிள் ஸ்டோர்களிலேயே பெரிய அளவிலான விலைக்குறைப்பை பெறும்.

ஆப்பிள் ஸ்டோரிலேயே விலை குறையும் என்றால், பிளிப்கார்ட் வலைத்தளத்தில் இன்னும் விலை குறையலாம். எனவே இன்னும் ஒரு சில நாட்கள் ஐபோன் 14-ஐ வாங்காமல் இருப்பது நல்லது. ஆனால் எந்த அளவிலான விலை குறையும் என்று யாருக்குமே தெரியாது. எனவே நீங்கள் இப்போதே ஒரு புதிய ஆப்பிள் ஐபோனை வாங்க விரும்பினால், இது உங்களுக்கான சரியான நேரமாக இருக்கலாம்.

இதேபோன்ற சலுகைகள் ஐபோன் 13 மீது கிடைத்தால், அதை முடிந்தவரை புறக்கணித்து விடவும். ஏனென்றால் ஆப்பிள் ஐபோன் 14 ஆனது ஆப்பிள் ஐபோன் 13-ன் அதே சிப்செட் மூலம் தான் இயக்கப்படுகிறது, ஆனால் அதிக கோர்களை கொண்டுள்ளது. டிஸ்பிளேவை பொறுத்தவரை ஐபோன் 14 ஆனது 6.1 இன்ச் அளவிலான சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்பிஓளேவை கொண்டுள்ளது.

மேலும் இது ஐபோன் 13-ஐ போலவே வீடியோ அழைப்புகள் மற்றும் செல்பீக்களுக்கான 12எம்பி கேமராவை கொண்டுள்ளது. ரியர் கேமரா செட்டப்பை பொறுத்தவரை, 12எம்பி சென்சார்களை கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 14 சீரிஸில் ஐபோன் 14 தான் மிகவும் மலிவான மாடல் ஆகும்.

Best Mobiles in India

English summary
Ahead Apple Event 2023 on Sep 12th iPhone 15 Launch iPhone 14 gets Big Discount in Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X