1 இல்ல.. 2 குட் நியூஸ்.. Tata Play யூசர்களுக்கு அடிச்ச அதிர்ஷ்டம்.. அதுவும் FREE-ஆ.. எக்ஸ்டரா கட்டணம் இல்லாம!
இந்தியாவின் முக்கியமான டிடிஎச் (DTH) ஆப்ரேட்டர்களில் ஒன்றான டாடா பிளே (Tata Play) நிறுவனம், அதன் ஓடிடி சேவையான டாடா பிளே பிங்-ஐ (Tata Play Binge) அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும் நோக்கத்தின் கீழ், அதன் தளத்தில் 2 புதிய ஓடிடி தளங்களை (OTT Platforms) இணைத்துள்ளது.
டாடா பிளேவின் கீழ் புதிதாக இணைந்துள்ளது - விஆர்ஓடிடி (VROTT) மற்றும் ஆஹா (Aha) ஓடிடி தளங்களே ஆகும். இந்த 2 புதிய வருகைகளின் மூலம் டாடா பிளே சேவையின் கீழ் கிடைக்கும் மொத்த ஓடிடி பிளாட்ஃபார்ம்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

நினைவூட்டும் வண்ணம், விஆர்ஓடிடி என்பது, கடந்த ஆண்டு விஆர் ஃபிலிம்ஸ் (VR Flims) அறிமுகப்படுத்திய புதிய ஸ்ட்ரீமிங் சேவை (Streaming Service) ஆகும். இதன்கீழ் தமிழ் (Tamil), இந்தி (Hindi) மற்றும் தெலுங்கு (Telugu) போன்ற உள்ளூர் மொழிகளில் 'டப்பிங்' செய்யப்பட்ட பிரத்யேக இன்டர்நேஷனல் கன்டென்ட் (International Contents) அணுக கிடைக்கும்.
மறுகையில் உள்ள ஆஹா ஓடிடி தளத்தை பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம். இது தமிழ் மற்றும் தெலுங்கு மொழி கன்டென்ட்களை வழங்கும் ஸ்ட்ரீமிங் சேவையாகும். இந்த 2 ஓடிடி தளங்களும் மொபைல் ப்ரோ (Mobile Pro), சூப்பர் (Super) மற்றும் மெகா (Mega) உள்ளிட்ட அனைத்து டாடா பிளே பிங் திட்டங்களிலும், விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் சேர்க்கப்பட்டுள்ளன.
அதாவது அனைத்து டாடா பிளே பிங் சந்தாதாரர்களுமே, இந்த சேவைகளை எந்தவிதமான கூடுதல் கட்டணமும் இல்லாமல் அணுக முடியுமென்று அர்த்தம். இந்த 2 புதிய ஓடிடி இயங்குதளங்களின் சேர்க்கையானது டாடா பிளே பிங் சந்தாதாரர்களின் பொழுதுபோக்கு அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
ஒருவேளை நீங்கள் இனிமேல் தான் டாடா பிளே பிங் சேவைக்குள் இணைய போகிறீர்கள் என்றால், நீங்கள் டாடா பிளே பிங்கின் அதிகாரப்பூர்வ இணையதளம் (Website) அல்லது மொபைல் ஆப்பிற்கு (Mobile App) செல்லலாம். பிங் ஆப் ஆனது ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ்-இல் (iOS) ஆகிய இரண்டிலுமே அணுக கிடைக்கிறது.
முன்னதாக, டாடா பிளே பிங் சந்தாவை வாங்குவதற்கு நீங்கள் டாடா பிளே பிங் பிளஸ் (Tata Play Binge+) செட்-டாப் பாக்ஸ் (Set-Top Box - STB) வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. ஆனால் இப்போது அந்த விதி இல்லை. இன்டர்நெட் கனெக்ஷன் உள்ள எவரும் பிங் சந்தாவை டாடா பிளேவின் இணையதளம் அல்லது மொபைல் ஆப் வழியாக வாங்கலாம்.


Click it and Unblock the Notifications