கூகுள் அறிமுகம் செய்த விவசாய ரோபோக்கள்: நிலங்களை கண்காணிக்கும் அம்சம்!

|

விவசாய நிலத்தின் விளைச்சலை மேம்படுத்தும் வகையில் பயிர்களை கண்காணிக்கும்படியான மாதிரி ரோபோக்களை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி விவசாய முன்னேற்றம்

அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி விவசாய முன்னேற்றம்

உலகளவில் சமூக பொருளாதாரத்தின் விளைவாக இருப்பது விவசாயம். விவசாயம் முன்னேற்றம் என்பது மனித நாகரிகத்தில் பெரும் பங்காற்றி வருகிறது. மக்கள் தொகை அதிகரிப்பதற்கு ஏற்ப உணவு உற்பத்தியின் தேவையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

விளை நிலத்தில் பயிர்கள் எவ்வாறு வளர்கின்றன

விளை நிலத்தில் பயிர்கள் எவ்வாறு வளர்கின்றன

விவசாய செலவுகள் ஆண்டுக்காண்டு 8 சதவீதம் வளர்ந்து வருவதாக வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் விளை நிலத்தில் பயிர்கள் எவ்வாறு வளர்கின்றன என்பதை கண்காணிக்கும் வகையிலான மாதிரி ரோபோக்களை கூகுளின் துணை நிறுவனமான ஆல்ஃபபெட் அறிமுகப்படுத்தியுள்ளது.

உற்பத்தியில் நிலையான முன்னேற்றம்

உற்பத்தியில் நிலையான முன்னேற்றம்

உணவை உற்பத்தி செய்வதற்கு நிலையான முன்னேற்றம் வேண்டும் என்ற நோக்கில் கூகுள் துணை நிறுவனமான ஆல்ஃபபெட் விளைநிலத்தின் விளைச்சலை சேதப்படுத்தாத அளவில் நிலத்துக்குள் நகர்ந்து சென்று ஆராயும் வகையான ரோபோக்களை அறிமுகம் செய்துள்ளது.

ஆல்ஃபபெட் நிறுவனத்தின் பிராஜெக்ட் மினரெல்

ஆல்ஃபபெட் நிறுவனத்தின் பிராஜெக்ட் மினரெல்

இதுகுறித்து ஆல்ஃபபெட் நிறுவனத்தின் பிராஜெக்ட் மினரெல் தலைமையாளர் எலியோட் கிராண்ட் கூறிய கருத்துகளை பார்க்கலாம். தற்போதைய விவசாய முறை விவசாயிகளுக்கு போதுமான தகவல்களை வழங்குவதில்லை என கூறினார்.

ரூ.5,999-க்கு ஸ்மார்ட்டிவிகள் வாங்க சரியான வாய்ப்பு: குறுகிய காலத்திற்கு மட்டுமே!ரூ.5,999-க்கு ஸ்மார்ட்டிவிகள் வாங்க சரியான வாய்ப்பு: குறுகிய காலத்திற்கு மட்டுமே!

செடியின் உயரம், இலை துளிர்க்கும் பகுதிகள்

செடியின் உயரம், இலை துளிர்க்கும் பகுதிகள்

ஒரு செடி ஒவ்வொரு சுற்றுச்சூழலிலும் எவ்வாறு வளர்கிறது, மண் மற்றும் காலநிலை குறித்த தகவல்கள், செடியின் உயரம், இலை துளிர்க்கும் பகுதிகள் மற்றும் பழத்தின் அளவு ஆகியவற்றை கண்டறிய இந்த ரோபோக்கள் உதவும் என தெரிவிக்கப்படுகிறது.

ரோபோக்கள் பரிசோதனை

அதேபோல் கலிபோர்னியாவின் ஸ்ட்ராபெரி நிலங்கள் மற்றும் சோயாபீன் நிலங்களில் கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற ரோபோக்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் செடிகளை பிரித்து ஆராய்ந்து உயர்தர புகைப்படங்களை இந்தவகை ரோபோக்கள் அளித்ததாக கூறப்படுகிறது.

விவசாயிகளுக்கு பயனுள்ள வடிவத்தில் அளிக்கும்

விவசாயிகளுக்கு பயனுள்ள வடிவத்தில் அளிக்கும்

சேகரிக்கப்படும் தரவுகள் அனைத்தும் இணைக்கப்பட்டு விவசாயிகளுக்கு பயனுள்ள வடிவத்தில் அளிக்கிறது. இதன்மூலம் விவசாயிகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் உதவுகிறது. விவசாய நிலங்களை கண்காணிக்க ரோபோக்கள் பயன்படுத்துவது என்பது சிறந்த முடிவும் என்றும் பயிர் நடவு சரியான நேரத்தில் நடக்கிறது பூச்சிகள் தொந்தரவு இருக்கிறதா போன்ற பல்வேறு விஷயங்களுக்கு இது உதவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தரவுகள் திருட்டுப்போகாமல் இருப்பதில் கவனம் தேவை

தரவுகள் திருட்டுப்போகாமல் இருப்பதில் கவனம் தேவை

அதேசமயத்தில் விவசாயிகளை பொருத்தவரையில் பயிர் நடவு, களை அறுப்பு போன்ற பல்வேறு பணிக்கு மத்தியில் இதை கவனிப்பது என்பது சிரமம் எனவும் இதுபோன்ற தொழில்நுட்பம் பெரிதளவும் உதவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக தரவுகள் பாதுகாப்பு என்பது அவசியம், தங்களின் நிலத்தின் தன்மை மற்றும் பயிர்கள் குறித்த தரவுகள் திருட்டுப்போகாமல் இருக்க கவனமாக செயல்பட வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

File Images

Source: bbc.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
Agriculture-related robots introduced by Google with Monitor Farmland feature

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X