அப்படி என்னதான் இருக்கு?- சாம்சங் கேலக்ஸி எம் 02 மீண்டும் விலை உயர்வு- ஆனா இப்பவும் பட்ஜெட் விலைதான்!

|

ஸ்மார்ட்போன்கள் பல்வேறு தேவைகளுக்கும் பிரதான பயன்பாடாக இருக்கிறது. குறிப்பாக கொரோனா பூட்டுதல் அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு பயன்பாடுகளுக்கும் ஸ்மார்ட்போன்கள் தேவை கட்டாயமாக இருக்கிறது. மேலும் டிஜிட்டல் இந்தியாவின் நடவடிக்கையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்து இந்த காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன்களின் தேவையை எடுத்துரைப்பதில் வியப்பில்லை. ஏராளமானோர் தற்போது ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

விலை உயர்வு பெறும் ஸ்மார்ட்போன்கள்

விலை உயர்வு பெறும் ஸ்மார்ட்போன்கள்

இந்திய சந்தையை ஆக்கிரமித்து இருக்கும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் குறித்து பார்க்கையில், அது சியோமி, சாம்சங், விவோ, ஒப்போ உள்ளிட்ட நிறுவனங்கள் ஆகும். இதில் சியோமி, ஒப்போ மற்றும் மைக்ரோமேக்ஸ் கடந்த வாரம் தங்களது ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்தின. இதைதொடர்ந்து சாம்சங் நிறுவனமும் தங்களது ஸ்மார்ட்போன்கள் விலையை உயர்த்தியுள்ளது.

விலை அதிகரிக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்கள்

விலை அதிகரிக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்கள்

சாம்சங் தொடர்ச்சியாக பல பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இதில் சில ஸ்மார்ட்போன்களின் விலை சமீப காலமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் விலை உயர்வை பெற்ற ஸ்மார்ட்போன்களில் மீண்டும் சாம்சங் கேலக்ஸி எம்02 ஒன்றாகும். சமீபத்தில் சாம்சங் கேலக்ஸி எஃப் 02 எஸ், சாம்சங் கேலக்ஸி எம் 02 எஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ12 ஆகிய சாதனங்களின் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டன. இந்த ஸ்மார்ட்போனின் விலை இரண்டாவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விலை உயர்வை குறித்து பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்02 விலை உயர்வு

சாம்சங் கேலக்ஸி எம்02 விலை உயர்வு

சாம்சங் நிறுவனம் மீண்டும் சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போனுக்கு விலை உயர்வை அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம் மற்றும் 3 ஜிபி ரேம் என்ற இரண்டு வேரியண்ட்களும் விலை உயர்வை பெற்றுள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்02 ரூ.6999 என்று விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.7999 ஆக இருக்கிறது. அதேபோல் ரூ.7499-க்கு 3 ஜிபி ரேம் வேரியண்ட் விற்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.8499 ஆக இருக்கிறது. மொத்தமாக இந்த ஸ்மார்ட்போன் ரூ.1000 வரை விலை உயர்வை பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக், ப்ளூ மற்றும் சிவப்பு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

6.5 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே

6.5 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே

சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போனானது நுழைவு நிலை சாதனமாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது சில அடிப்படை அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு இருக்கிறது. 13 எம்பி பிரதான கேமரா உட்பட 2 எம்பி இரண்டாம் நிலை கேமராக்களை கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 5 எம்பி செல்பி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் ஆதரவு

ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் ஆதரவு

இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் எம்டி6739டபிள்யூ செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது அதிகபட்சமாக 3 ஜிபி ரேம் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. இது 4ஜி வோல்ட்இ, இரட்டை சிம் ஆதரவு, வைஃபை, ப்ளூடூத் போன்ற நிலையான இணைப்பு ஆதரவுகளோடு வருகிறது. மேலும் வேகமான சார்ஜிங் ஆதரவுக்கு 5000 எம்ஏஎச் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு

ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பட்ஜெட் விலைப் பிரிவில் இருக்கும் இந்த சாதனத்துக்கு பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தொடர்ந்து விலை உயர்வை இந்த ஸ்மார்ட்போன் பெற்று வருவது பலரின் கவனத்தை ஈர்க்கிறது. ரூ.10,000 விலைப்பிரிவில் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் இது சிறந்த தேர்வாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Again Samsung Galaxy M02 Price Hike in India: Here the Price Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X