இனி பேஸ்புக்கிலும் அந்த அம்சம்: வாட்ஸ்அப்பை தொடர்ந்து அடுத்தக்கட்டம் என்ன தெரியுமா?

|

வாட்ஸ்அப் நிறுவனம் ஒருவழியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டார்க் தீம் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சேவையின் பயன்பாட்டை ஆண்ட்ராய்டு தளத்தில் மட்டும் வாட்ஸ்அப் நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ளது. புதிய டார்க் தீம் சேவையை எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டு v2.20.13 பீட்டா வெர்ஷன்

ஆண்ட்ராய்டு v2.20.13 பீட்டா வெர்ஷன்

வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த புதிய டார்க் தீம் சேவை தற்பொழுது புதுப்பிக்கப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு v2.20.13 பீட்டா வெர்ஷனில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய வாட்ஸ்அப் பீட்டா அப்டேட்டை, உங்கள் போனில் அப்டேட் செய்த பின் இந்த சேவையை உங்களால் பயன்படுத்த முடியும். கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை வெளியிட்டபின் இந்த சேவை தற்பொழுது ஆண்ட்ராய்டு பயனர்களுக்குக் கிடைத்துள்ளது.

டார்க் தீம் ஆக்டிவேட்

டார்க் தீம் ஆக்டிவேட்

வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த டார்க் தீம் சேவையை மிகவும் எளிதான முறையில் இயக்கலாம். இதற்கு வாட்ஸ்அப் பீட்டா பயனர்கள் தங்கள் பயன்பாட்டின் வலது மேல் மூலையில் உள்ள மூன்று-புள்ளி ஐகானை அழுத்தவும், அதற்குப் பின் செட்டிங்ஸ் கிளிக் செய்து > சாட்ஸ் கிளிக் செய்து > தீம் கிளிக் செய்யவும் > இங்கு வழங்கப்பட்டுள்ள மூன்று டார்க் தீம் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்துகொள்ளுங்கள்.

ஃபேஸ்புக் டார்க் மோட் விரைவில் வருவதாக தகவல்

ஃபேஸ்புக் டார்க் மோட் விரைவில் வருவதாக தகவல்

இந்த நிலையில் தற்போது அந்த வரிசையில், ஃபேஸ்புக்கின் ஆண்ட்ராய்டு செயலியில் விரைவில் டார்க் மோட் வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ஃபேஸ்புக் ஆண்ட்ராய்டு பதிப்பில் டார்க் மோட் வழங்குவது பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. தற்சமயம் ஃபேஸ்புக் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் டார்க் மோட் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

24000 கடிதங்களை வீட்டிலேயே ஒளித்து வைத்த தபால்காரர்: காரணம் கேட்டால் ஷாக் ஆவிங்க..!24000 கடிதங்களை வீட்டிலேயே ஒளித்து வைத்த தபால்காரர்: காரணம் கேட்டால் ஷாக் ஆவிங்க..!

அனிமேட்டெட் ஸ்டிக்கர்கள்

அனிமேட்டெட் ஸ்டிக்கர்கள்

அந்த வகையில் வாட்ஸ்அப் செயலியில் அனிமேட்டெட் ஸ்டிக்கர்களை வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஸ்டிக்கர் பேக் அனிமேட் ஆகும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிளே ஐகான் கொண்டு அனிமேஷன்கள் டவுன்லோடு

பிளே ஐகான் கொண்டு அனிமேஷன்கள் டவுன்லோடு

மேலும் ஸ்டிக்கர் பேக் அருகில் பிளே ஐகானும் காணப்படுகிறது. பிளே ஐகான் கொண்டு அனிமேஷன்களை டவுன்லோடு செய்யும் முன் அவற்றை பிளே செய்து பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய அப்டேட்டில் டெலீட் மெசேஜஸ் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இதில் வாட்ஸ்அப்-க்கு பிறகு பேஸ்புக்கிலும் டார்க் மோட் வசதி விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
After whatsapp facebook to soon introduce Extra Feature

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X