Home
News

ChatGPT பயன்படுத்த தடை.. Samsung நிறுவனத்திற்குள் தொடர்ச்சியாக நடந்த 3 சம்பவங்கள்.. இது வெறும் ஆரம்பம் தான்!

சாம்சங் (Samsung) நிறுவனமானது, சாட்ஜிபிடி (ChatGPT), கூகுள் பார்ட் (Google Bard) மற்றும் பிங் ஏஐ சாட்போட் (Bing AI Chatbot) போன்ற ஜெனரேட்டிவ் ஏஐ டூல்களை (Generative AI Tools) தனது ஊழியர்கள் பயன்படுத்த கூடாது என்று அறிவித்துள்ளது; மீறுபவர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.

சாம்சங்கின் இந்த திடீர் ஏஐ டூல்ஸ் தடைக்கு பின்னால் உள்ள காரணம் என்ன? சாம்சங் நிறுவனமானது அதன் செமிகண்டக்டர் பிரிவில் (Semiconductor Division) உள்ள பொறியாளர்களை, சோர்ஸ் கோடில் (Source Code) உள்ள சிக்கல்களை சரிசெய்ய சாட்ஜிபிடி-ஐ பயன்படுத்த அனுமதித்து இருந்தது.

ChatGPT பயன்படுத்த தடை.. Samsung திடீர் அறிவிப்பு.. ஏன்?

ஆனால் சாம்சங்கின் ஊழியர்களோ, புதிய ப்ரோகிராமிற்கான சோர்ஸ் கோட் (Source Code for a New Program) மற்றும் ஹார்ட்வேர் தொடர்பான இன்டர்னல் மீட்டிங் நோட்ஸ் (Internal Meeting Notes) போன்ற டாப்-சீக்ரெட் டேட்டாவை (Top-secret Data) தவறுதலாக உள்ளிட்டுள்ளனர். ஒரு மாத கால இடைவெளியில் இதுபோன்ற 3 சம்பவங்கள் நடந்துள்ளன.

சாம்சங் நிறுவனத்தின் பொறியாளர்கள், தற்செயலாக சாட்ஜிபிடி வழியாக முக்கியமான தரவுகளை கசியவிட்டதின் விளைவாக ஏஐ டூல்களை பயன்படுத்துவதற்கான தடையை சாம்சங் அறிவிதுள்ளது. இதுபோன்ற தளங்களில் பயன்படுத்தப்படும் தரவுகள், எக்ஸ்டர்னல் சர்வர்களில் (External servers) சேமிக்கப்பட்டு தவறான கைகளுக்கு போய் சேரக்கூடும் என்று சாம்சங் அஞ்சுகிறது.

இதுகுறித்து சாம்சங் தனது ஊழியர்களுக்கு மெமோ ஒன்றையும் அனுப்பியுள்ளது. அதில் "சாட்ஜிபிடி போன்ற ஜெனரேட்டிவ் ஏஐ தளங்களின் மீதான ஆர்வம், நிறுவனத்திற்கு உள்ளேயும், வெளியேவும் வளர்ந்து வருகிறது. இந்த ஆர்வம் ஏஐ டூல்களின் நன்மைகள் மற்றும் செயல்திறனில் கவனம் செலுத்தும் அதே வேளையில், சில பாதுகாப்பு அபாயங்கள் பற்றிய கவலைகளையும் எழுப்புகிறது" என்று சாம்சங் கூறியுள்ளது.

மேலும் "பணியாளர்களின் உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் ஏஐ டூல்களை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கான சூழலை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை (Security Measures) தலைமையகம் மதிப்பாய்வு செய்கிறது. அந்த நடவடிக்கைகள் தயாரிக்கப்படும் வரை, ஜெனெரேட்டிவ் ஏஐ டூல்களின் பயன்பாட்டை நாங்கள் தற்காலிகமாக கட்டுப்படுத்துகிறோம்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏஐ தொடர்பான ஆபத்துகளை பற்றி சுதந்திரமாக பேச வேண்டும் என்கிற நோக்கத்தின் கீழ்.. ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸின் காட்ஃபாதர் (Godfather of AI) என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன் (Geoffrey Hinton) கூகுள் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய சலசலப்பே இன்னும் ஓயாத நிலைப்பாட்டில், சாம்சங்கின் இந்த திடீர் நடவடிக்கை ஏஐ பயன்பாடு தொடர்பான குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது.

"ஏஐ சொந்தமாக கோடிங் எழுதி, அதை ரன் செய்ய தொடங்கும் போது, ​அது மனிதர்களுக்கான வேலைகளை நீக்கிவிடும்" மற்றும் "இதெல்லாம் நடக்க இன்னும் நிறைய காலம் ஆகுமென்று நான் நினைத்தேன். ஆனால் இப்போது நான் அப்படி நினைக்கவில்லை" என்றெல்லாம் கூறி ஏஐ ஆதீத வளர்ச்சி மற்றும் பயன்பாடு குறித்த தனது கவலைகளை வெளிப்படுத்தி உளளார் ஜெஃப்ரி ஹிண்டன்!

More from GizBot

Best Mobiles in India

English summary
After Top Secret Data Leak Samsung Banned The Use Of AI Tools Like ChatGPT and Google Bard
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X