Home
News

விசித்திரமான வேலிடிட்டி.. விலையை மீறிய நன்மைகள்.. 77 நாட்களுக்கு புகுந்து விளையாடும் Airtel கஸ்டமர்கள்!

விலை உயர்விற்கு பின்னர், பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனத்தின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களின் புதிய விலை நிர்ணயங்கள் (Prepaid Plans New Price) மற்றும் அவைகளின் வேலிடிட்டி (Validity) உங்களை குழப்பம் அடைய செய்யலாம். ஏனென்றால் 28 நாட்கள், 56 நாட்கள், 84 நாட்கள் மற்றும் 1 ஆண்டு என்கிற "வழக்கமான" வேலிடிட்டி காலத்திற்கு இடையே 77 நாட்கள் என்கிற "வித்தியாசமான" வேலிடிட்டியுடன் வரும் சில ஏர்டெல் திட்டங்களும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன.

ஒருவேளை உங்களுக்கு 77 நாட்கள் என்கிற வேலிடிட்டியை (77 Days Validity) வழங்கும் ஏர்டெல் திட்டங்களை பற்றி தெரியாதென்றால்.. 77 நாட்கள் என்பது சற்றே சுவாரசியமான செல்லுபடியாகும் காலமாக உங்களுக்கு தோன்றினால்... அதென்ன திட்டங்கள்? அவற்றின் விலை நிர்ணயம் என்ன? இந்த திட்டங்களின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

77 நாட்களுக்கு புகுந்து விளையாடும் Airtel கஸ்டமர்கள்!

அதென்ன திட்டங்கள்? ரீசார்ஜ் கட்டண திருத்தத்திற்கு பிறகு (அதாவது ஜூலை 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த விலை உயர்விற்கு பிறகு), ஏர்டெல் நிறுவனத்தின் கீழ் 77 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வரும் 2 திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. முதல் திட்டம் - ஒரு வாய்ஸ் சென்ட்ரிக் திட்டம் (Voice Centric Plan) ஆகும். இரண்டாவது திட்டம் - டெய்லி 1.5 ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டமாகும்.

77 நாட்கள் வேலிடிட்டி உடன் வரும் வாய்ஸ் சென்ட்ரிக் திட்டத்தின் விலை மற்றும் நன்மைகள்: இந்த திட்டத்தின் விலை ரூ.489 (Airtel Rs.589 Plan) ஆகும். இதை வாய்ஸ் சென்ட்ரிக் என்று குறிப்பிட காரணம் - இது மிகவும் குறைவான டேட்டா நன்மையை வழங்குகிறது. ஆனால் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களுடன் (Daily 100 Free SMS) வருகிறது.

அதாவது உங்களுக்கு அதிக அளவிலான டேட்டா தேவைகள் இருக்காது. மாறாக தினமும் போதுமான வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் கிடைத்தால் போதும் என்றால்.. இதுதான் உங்களுக்கான சீப் அன்ட் பெஸ்ட் லாங் வேலிடிட்டி ரீசார்ஜ் (Cheap and Best Long Validity Recharge) ஆக இருக்கும். இது 77 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வந்தாலும், வெறும் 6ஜிபி அளவிலான டேட்டாவை (6GB Data) மட்டுமே வழங்குகிறது.

77 நாட்கள் வேலிடிட்டி உடன் வரும் டெய்லி 1.5ஜிபி டேட்டா திட்டத்தின் விலை மற்றும் நன்மைகள்: இந்த திட்டத்தின் இல்லை ரூ.799 ஆகும். ஒரு நாளைக்கு சுமார் ரூ.10 என்கிற செலவில் அணுக கிடைக்கும் இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் டெய்லி 1.5ஜிபி டேட்டாவை (Daily 1.5GB Data) வழங்குகிறது.

1.5ஜிபி என்கிற டேட்டா லிமிட்டை (Data Limit) தாண்டிய பின்னர், இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 64 கேபிபிஎஸ் (Internet Speed 64Kbps) ஆக குறைக்கப்படும். கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, இது 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்க்கிள் (Appollo 24/7 Circle), இலவச ஹலோ ட்யூன்ஸ் (Hello Tunes) மற்றும் விங்க் ம்யூசிக் (Wynk Music) சந்தா ஆகியவைகளையும் வழங்கும்.

மேலே உள்ள இரண்டு திட்டங்களுமே ஓடிடி (OTT) மற்றும் இலவச அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மையை (Unlimited 5G Data Benefit) வழங்காத பேஸிக் திட்டங்களாகும். அதாவது இவைகளின் கீழ் ஓடிடி தளங்களுக்கான இலவச சந்தாக்கள் எதுவும் கிடைக்காது. மேலும் நீங்கள் 5ஜி ஸ்மார்ட்போனே வைத்து இருந்தாலும் கூட, உங்கள் பகுதியில் 5ஜி நெட்வொர்க் கிடைக்கிறது என்றாலும் கூட ஏர்டெல் வழங்கும் இலவச அன்லிமிடெட் 5ஜி ஆபரை (Airtel Unlimited 5G Offer) பெற முடியாது.

More from GizBot

Best Mobiles in India

English summary
After Tariff Revision Airtel Prepaid Customers Have Only Two 77 Days Validity Plans To Choose Rs 489 or Rs 799
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X