செவ்வாய் கிரகத்தில் கில்லி மாதிரி பறக்கும் மார்ஸ் ஹெலிகாப்டர்.. நாசாவை வியப்பில் ஆழ்த்த காரணம் என்ன?

|

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர் வாழ முடியுமா என்பதற்கான சாத்தியங்களை நாசா ஆராய்ச்சி செய்து வருகிறது. அதேபோல், செவ்வாய் கிரகத்தில் வேற்று உயிர்கள் வாழ்வதற்கான அடையாளங்கள் இருக்கிறதா என்பதையும் நாசா ஆராய்ச்சி செய்து வருகிறது. நாசாவின் இந்த முக்கிய ஆராய்ச்சியில் பெர்ஸெவேரன்ஸ் ரோவர் மற்றும் மார்ஸ் ஹெலிகாப்டர் முக்கிய பங்கை வகித்துள்ளது. நாசா ஆராய்ச்சியாளர்களை இந்த மார்ஸ் ஹெலிகாப்டர் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நாசா ஆராய்ச்சியாளர்களை மார்ஸ் ஹெலிகாப்டர் வியப்பில் ஆழ்த்திய காரணம் என்ன?

நாசா ஆராய்ச்சியாளர்களை மார்ஸ் ஹெலிகாப்டர் வியப்பில் ஆழ்த்திய காரணம் என்ன?

மார்ஸ் ஹெலிகாப்டர் நாசா ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியதற்குக் காரணம் என்ன தெரியுமா? உண்மையில் இந்த மார்ஸ் ஹெலிகாப்டர் வெறும் 5 முறை மட்டுமே பறக்கும்படி வடிவமைத்து உருவாக்கப்பட்டு செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இது கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கும் மேலாகச் செவ்வாய் கிரகத்தில் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இது உண்மையில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதற்குப் பின்னணியில் என்ன காரணங்கள் இருக்கும் என்பதை விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர்.

உயிர் மற்றும் வாழ்க்கையின் அறிகுறி அடையாளங்களைத் தேடும் மார்ஸ் ஹெலிகாப்டர்

உயிர் மற்றும் வாழ்க்கையின் அறிகுறி அடையாளங்களைத் தேடும் மார்ஸ் ஹெலிகாப்டர்

மார்ஸ் ஹெலிகாப்டர் என்று அழைக்கப்படும் நாசாவின் இன்ஜென்னுயிட்டி வெறும் 5 முறை மட்டுமே செவ்வாய் கிரகத்தில் பறக்க வேண்டியிருந்தது, இருந்தாலும், இந்த ஹெலிகாப்டர் 12 முறை வெற்றிகரமாகப் பறந்து முடித்துவிட்டது, இன்னும் செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வரத் தயாராக உள்ளது. எதிர்பார்த்ததை விட இந்த ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் கூடுதல் பணிகளைச் செய்து வருகிறது.

விண்வெளி வீரர்கள் விண்வெளியில் எப்படி குளிப்பார்கள் தெரியுமா? முழு வீடியோவை வெளியிட்ட பெண் விண்வெளி வீரர்..விண்வெளி வீரர்கள் விண்வெளியில் எப்படி குளிப்பார்கள் தெரியுமா? முழு வீடியோவை வெளியிட்ட பெண் விண்வெளி வீரர்..

செவ்வாய் கிரகத்தில் இருக்கும் அடர்த்தியான காற்று

செவ்வாய் கிரகத்தில் இருக்கும் அடர்த்தியான காற்று

திட்டமிட்ட பயணத்தை விட இரட்டிப்பு கூடுதல் பயணத்தைச் செய்துள்ள இந்த மார்ஸ் ஹெலிகாப்டர் இன்னும் ஓய்வு பெறத் தயாராக இல்லை என்பது மட்டும் தற்பொழுது விஞ்ஞானிகளுக்குத் தெளிவாகப் புரிந்துள்ளது. இதனால், நாசா இப்போது செய்து வரும் தனது பணியைக் காலவரையின்றி நீட்டித்துள்ளது. இப்போது செவ்வாய் கிரகத்தில் வாழ்க்கையின் அறிகுறிகளைத் தேடும் பெர்ஸெவேரன்ஸ் ரோவர் உடன் இது தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டரை உருவாக்கிய குழுவினரே இந்த திருப்புமுனையை எதிர்பார்க்கவில்லையா?

ஹெலிகாப்டரை உருவாக்கிய குழுவினரே இந்த திருப்புமுனையை எதிர்பார்க்கவில்லையா?

மார்ஸ் ஹெலிகாப்டர் முதன்முதலில் செவ்வாய் நோக்கி விண்வெளியில் செலுத்தப்பட்டபோது, ​​குழுவினர் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு மத்தியில் இந்த திட்டம் வெற்றி அடையுமா என்ற சந்தேகம் இருந்துள்ளது. ஏனெனில், செவ்வாய் கிரகம் பூமியின் வளிமண்டலத்தில் 1% க்கு மட்டுமே சமமான காற்று அடர்த்தியைக் கொண்டுள்ளது. இவ்வளவு மெல்லிய காற்றில் மார்ஸ் ஹெலிகாப்டர் பறப்பது சந்தேகத்திற்குரியது என்று நினைத்துள்ளனர், ஆனால், இப்போது வரை நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் யாரும் யூகித்திடாத செயல்பாடுகள் ஆகும்.

ரொம்ப கம்மி சார்., உண்மையாவா., இவ்வளவுதான் விலையா?- 4ஜி ஜியோபோன் நெக்ஸ்ட் விலை, அம்சம் லீக்!ரொம்ப கம்மி சார்., உண்மையாவா., இவ்வளவுதான் விலையா?- 4ஜி ஜியோபோன் நெக்ஸ்ட் விலை, அம்சம் லீக்!

செவ்வாய் கிரகத்தின் குளிரில் இருந்து தொடர்ந்து தப்பிக்கும் மார்ஸ் ஹெலிகாப்டர்

செவ்வாய் கிரகத்தின் குளிரில் இருந்து தொடர்ந்து தப்பிக்கும் மார்ஸ் ஹெலிகாப்டர்

மார்ஸ் ஹெலிகாப்டர் சிவப்பு கிரகத்தை அடைந்தபோது, ​​அது செவ்வாய் இரவுகளின் பனிக்கட்டி குளிரில் இருந்து தப்பிக்க வேண்டியது அவசியம். அதேபோல், பகலில் அதன் பேட்டரிகளை மாற்றும் சோலார் பேனல்களிலிருந்து வெப்பத்தை வைத்திருக்க வேண்டியது தான் இதன் ஆயுளைக் காப்பதற்கான முக்கிய செயல்பாடாகும். ஏப்ரல் 19 அன்று மற்றொரு கிரகத்தில் பறக்கும் முதல் மோட்டார் பொருத்தப்பட்ட கைவினை பொருளாக மாறியது இன்ஜென்னுயிட்டி, மட்டுமே. மனிதனால் செவ்வாய் கிரகத்தில் பறக்கவிடப்பட்ட முதல் விமானம் இது தான்.

செவ்வாய் கிரகத்தில் வழியைத் தேடுகிறதா இந்த ஹெலிகாப்டர்

செவ்வாய் கிரகத்தில் வழியைத் தேடுகிறதா இந்த ஹெலிகாப்டர்

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியதில் இருந்து ஹெலிகாப்டர் இதுவரை 39 அடி உயரம் வரை பறந்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் சுமார் 1.6 மைல் தூரத்தைக் கடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது இப்போது உயர்-ரெஸ் கலர் கேமராவுடன், பெர்ஸெவேரன்ஸ் ரோவருக்கான வழியை அறியச் செவ்வாய் கிரகத்தில் பறக்க அனுப்பப்படுகிறது. எதிர்பார்த்ததை விட கூடுதல் பயணங்களை இந்த ஹெலிகாப்டர் பெற காரணங்கள் என்ன என்பதை விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். செவ்வாயின் சூழலில் இது எப்படிச் சாத்தியமாகி இருக்கும் என்று குழு கணித்துள்ளது.

பூமி போல் செவ்வாய் கிரகத்திலும் இதே பிரச்சனையா? 5 கிமீ தூரத்திற்கு அதிக சேதம்: நாசா வெளியிட்ட வைரல் புகைப்படம்பூமி போல் செவ்வாய் கிரகத்திலும் இதே பிரச்சனையா? 5 கிமீ தூரத்திற்கு அதிக சேதம்: நாசா வெளியிட்ட வைரல் புகைப்படம்

மார்ஸ் ஹெலிகாப்டர் எப்படி இவ்வளவு காலம் செவ்வாயில் நீடித்து வாழ்ந்தது?

மார்ஸ் ஹெலிகாப்டர் எப்படி இவ்வளவு காலம் செவ்வாயில் நீடித்து வாழ்ந்தது?

மார்ஸ் ஹெலிகாப்டரின் நீண்ட ஆயுளுக்குப் பின்னணியில் நாம் எதிர்பார்த்திடாத பல காரணங்கள் இருக்கலாம் என்று நாசா தெரிவிக்கிறது. குறிப்பாக, செவ்வாய் கிரகத்தின் வெப்பநிலை, காற்று, சூரியன் சக்தி, செவ்வாய் கிரகத்தில் உள்ள தூசி மற்றும் அங்கு நிலவும் சூழல்கள் அனைத்தும் ஒரு முக்கிய காரணியாக இருக்கக் கூடும் என்று ஹெலிகாப்டரை உருவாக்கியுள்ள குழுவினர் கருதுகின்றனர். செவ்வாய் கிரகத்தில் நிலைமைகள் மிகவும் மோசமாக அமைந்திருக்கலாம் மற்றும் வரும் செவ்வாய் கிரகத்தின் குளிர்காலமும் குழுவினருக்கு மிகவும் சவாலாக அமைய வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
After Six Months On Mars NASA Tiny Helicopter Ingenuity Is Still Flying High : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X