ஆப்பிள் நிறுவனத்தை கலாய்க்கும் சியோமி, சாம்சங் நிறுவனங்கள்.! காரணம் இதுதான்.!

|

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் போன்களானா ஐபோன் 12 சீரிஸை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்நிறுவனம் தனது மொபைல்களுடன் சார்ஜர் அல்லது இயர்போன்களை இனிமேல் வழங்காது என்ற புதிய கொள்கையையும் அறிவித்தது.

 MagSafe எனப்படும் காந்தங்களால்

அதாவது MagSafe எனப்படும் காந்தங்களால் ஐபோனின் பின்புறம் ஒட்டி தான் செல்போனுக்கு சார்ஜ் செய்ய வேண்டும். சாம்சங் உட்பட மற்ற சில பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஆப்பிளின் இந்த முடிவை கேலி செய்து வருகின்றன.

பதிவிட்டிருந்தது

குறிப்பாக ஐபோன் 12 அறிமுகப்படுத்தப்பட்ட சிறுது நேரத்திலேயே, சாம்சங் கரீபியன் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு சாம்சங் பவர் அடாப்டரின் படத்தை வெளியிட்டு, உங்கள் கேலக்ஸி போன்களுடன் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் சாம்சங் தருகிறது. மிகவும் அடிப்படையான சார்ஜர் முதல் 120 ஹெர்ட்ஸ் திரை வரை அனைத்தையும் தருவதாக ஆப்பிளை நிறுவனத்தை கலாய்க்கும்விதமாக பதிவிட்டிருந்தது.

ஒன்பிளஸ் மாடல்களில் பேஸ்புக் சேவை இருக்காது: காரணம் இதுதான்!ஒன்பிளஸ் மாடல்களில் பேஸ்புக் சேவை இருக்காது: காரணம் இதுதான்!

ன்று பதிவிட்டுள்ளது

மேலும் சாம்சங் மட்டுமல்லாது கடந்த புதன்கிழமை சியோமி நிறுவனமும் இதேபோன்று ஆப்பிளை கலாய்த்தது. அதன்படி ஒரு ட்விட்டர்பதிவில் நிறுவனம் Mi 10T ப்ரோவுடன் எதையும் வழங்குவதை நிறுத்தவில்லை என்று பதிவிட்டுள்ளது.

டி ஸ்மார்ட்போனை அறிமுகம்

அதேபோல் கடந்த வாரம் ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அதன்பின்பு புதிய ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் உடன் 65வாட் சார்ஜர் சேர்க்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி ஆப்பிள் நிறுவனத்தை குத்திக்காட்டியுள்ளது.

ற்றுச்சூழல் காரணங்களுக்காக சார்ஜர்

முன்னதாக சுற்றுச்சூழல் காரணங்களுக்காக சார்ஜர் உள்ளிட்ட உபகரணங்கள் அகற்றப்பட்டதாக சாம்சங் நிறுவனம் விளக்கம்தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 12

அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 12 மாடலில் 6.1-இன்ச் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே வசதி இடம்பெற்றுள்ளது. அதேபோல் ஐபோன் 12 மினி மாடலில் 5.4-இன்ச் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே வசதி இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அதிக உறுதியான டிஸ்பிளே வழங்கப்பட்டு உள்ளது.

தெரிவித்துள்ளது. மேலும்

இந்த சாதனங்களில் வழங்கப்பட்டுள்ள 5ஜி தொழில்நுட்பம் ஆனது உலகின் அதிவேக செல்லுலார் இணைய வேகம் வழங்கும் திறன்கொண்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேசமயம் 5ஜி வசதி கிடைக்காத சமயங்களில் எல்டிஇ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வசதி கொண்டுள்ளது. புதிய ஐபோன் 12 மாடல் ஆனது ஆப்பிள் ஏ14 பயோனிக் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. இந்த பிராசஸர் இதுவரை வெளியான ஸ்மார்ட்போன்களில் இருப்பதை விட மிகவும் சக்திவாய்ந்தது என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இது கன்சோல்களுக்கு இணையான கேமிங் அனுபவத்தை ஐபோனில் வழங்கும் திறனை கொண்டுள்ளது.

 மற்றும் ஐபோன் 12 மாடல்கள்

ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 மாடல்கள் ஆனது கருப்பு, நீலம், பச்சை, ப்ராடெக்ட் (ரெட்) மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும். குறிப்பாக இந்த இரண்டு சாதனங்களில் உள்ள பேட்டரி ஆனது நீண்ட நேர பேக்கப் வழங்கும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொண்ட ஐபோன் 12 மினி

64ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 12 மினி சாதனத்தின் விலை 699 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.69,999)
128ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 12 மினி சாதனத்தின் விலை 749 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.74,999)
128ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 12 மினி சாதனத்தின் விலை 849 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.84,999)
64ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 12 சாதனத்தின் விலை 799 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.79,999)
128ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 12 சாதனத்தின் விலை 849 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.84,999)
256ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 12 சாதனத்தின் விலை 949 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.94,999)

Best Mobiles in India

English summary
After Samsung, Xiaomi trolls Apple for removing chargers from iPhone 12 series: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X