Home
News

ஏர்டெல் இன்னொரு ரிலையன்ஸ் ஜியோ..!? - புலம்பும் ஏர்டெல் வாசிகள்.!

ரிலையன்ஸ் ஜியோ வருகையால் பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு கடுமையான போட்டி கிளம்பியது ஒருபக்கமிருக்க இப்போது சிறந்த ஏர்டெல் நெட்வெர்க், புதிய சிக்கலில் உள்ளது.

By Muthuraj

நேற்று வரை, கால் ட்ராப் சிக்கல்களுக்காக ரிலையன்ஸ் ஜியோ தான் மிக அதிகமாக குற்றம் சாட்டப்பட்டது. அது ஒருபக்கம் இருக்க இந்தியாவின் சிறந்த நெட்வொர்க் என்று அழைக்கப்படும் மற்றும் உலகில் மூன்றாவது சிறந்த நெட்வர்க் ஆன பார்தி ஏர்டெல் பயனர்கள் கால் ட்ராப் சம்பவங்கள் பற்றிய தங்களின் புகார்களை ட்விட்டரில் குவித்த வண்ணம் உள்ளன.

ரிலையன்ஸ் ஜியோ பயனர்களை தொடர்ந்து இப்பொழுது ஏர்டெல் பயனர்கள் நிறுவனத்தின் தடைபடும் நெட்வொர்க் இணைப்பின் சோர்வில் சிக்கி தவிக்கின்றனர். இதனை தொடர்ந்து சிறந்த நெட்வொர்க் மற்றும் மிக வேகமான நெட்வர்க் போன்ற போலி வாக்குறுதிகளை ஏர்டெல் அளிக்கிறது என்ற குற்றச்சாட்டுக்குள் ஏர்டெல் சிக்கியுள்ளது.

ஏர்டெல் 4ஜி என்னாச்சு..?

ஏர்டெல் 4ஜி என்னாச்சு..?

பார்தி ஏர்டெல், சமீபத்தில் இந்தியாவை டிஜிட்டல் மையமாக்கும் நோக்கத்துடன், நாட்டின் சிறந்த 4ஜி நெட்வொர்க் என்று அதன் விளம்பரங்களை பரப்பி வந்தது. எனினும், தொலை தொடர்பு ஆப்ரேட்டரின் மேம்படுத்தப்பட்ட நெட்வொர்க் இணைப்பு மாறாக கால் ட்ராப் சிக்கல்களையே வழங்குகிறது. இதனால் பயனர்கள் நெருக்கடிகளை சந்திப்பதாக குற்றம் சாட்டிய வண்ணம் உள்ளனர்.

4ஜி சேவையில் திருப்தியா.? இல்லையா.?

4ஜி சேவையில் திருப்தியா.? இல்லையா.?

நாட்டின் சிறந்த தொலைத்தொடர்பு நிறுவனம் என்று கூறப்படும் ஏர்டெல் சமீபத்தில், குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் புது தில்லி மற்றும் என்சிஆர் பிராந்தியத்தில் தங்கள் புதிய 4ஜி நெட்வொர்க் மீதான சோதனையை தொடங்கியது. அதன்படி பார்த்தல் பயனர்கள் ஏர்டெல் 4ஜி மீதான ஏமாற்றத்தில் இருப்பது தெரிகிறது மற்றும் சமூக ஊடகம் முழுவதும் ஏர்டெல் சந்திக்கும் கால் ட்ராப் சம்பவங்கள் பற்றிய புகார்களையும் கூறியுள்ளனர்.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

3ஜி நிலை என்ன.?

3ஜி நிலை என்ன.?

சரி 4ஜி நெட்வெர்க் பயனர்கள் மட்டும் தான் கால் ட்ராப் சிக்கலில் உள்ளனரா என்றால் கிடையாது, 3ஜி பயனர்களும் இந்த பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். ஒரு சில ஏர்டெல் பயனர்களால் செய்யப்பட்ட ட்வீட் மூலம் அவர்களின் 3ஜி நெட்வெர்க்கும் கால் ட்ராப் மற்றும் மோசமான இணைய வேகம் போன்ற நெட்வெர்க் பிரச்சினைகளை எதிர்கொள்வது தெரிய வருகிறது

கொல்கத்தா மற்றும் பெங்களூர்

கொல்கத்தா மற்றும் பெங்களூர்

சரி, தில்லி மற்றும் என்.சி.ஆர் பிராந்தியங்களில் தான் ஏர்டெல் மீதான புகார்கள் வந்துள்ளன என்று பார்த்தல் கொல்கத்தா மற்றும் பெங்களூர் முழுவதும் உள்ள ஏர்டெல் பயனாளர்களும் கால் ட்ராப் போன்ற சம்பவங்களால் அவதியுற்று வருகின்றனர். ட்வீட்டரில் உள்ள கருத்தின்படி ஒரு 20 நிமிட அழைப்பு சுமார் 10 முறை கைவிடப்படுகிறது என்று கூறிப்படுகிறது.

முன்முயற்சியும் எடுக்கவில்லை

முன்முயற்சியும் எடுக்கவில்லை

நாடு முழுவதும் ஏர்டெல் பயனர்கள் அதன் வாடிக்கையாளர் சேவை வழங்குநரிடம் அடிக்கடி கால் ட்ராப் சிக்கல் ஏற்படுகிறது என்ற புகார்களை தாக்கல் செய்த வண்ணம் இருக்கிறார்கள் எனினும், இந்த பிரச்சினைகளை தீர்க்க தொலை தொடர்பு ஆப்ரேட்டர் எந்த விதமான முன்முயற்சியும் எடுக்கவில்லை என்பதே நிதர்சனம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ரிலையன்ஸ் ஜியோ மாஸ் அறிவிப்பு டிசம்பர் 28, 2016 - என்னவா இருக்கும் பாஸ்.??

Best Mobiles in India

English summary
After Reliance Jio, Airtel Users Experience Frequent Call Drops. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X