Apple பொழப்பு சிரிப்பா சிரிக்குது.. iPhone-களில் செக்யூரிட்டி ஓட்டை.. அவசரகால Update வெளியானது!
ஐபோன்கள் மற்றும் ஐபேட்களில் கடுமையான செக்யூரிட்டி பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், ஆப்பிள் (Apple) நிறுவனமானது பயன்பாட்டில் உள்ள மில்லியன் கணக்கான ஐபோன்களை உடனே அப்டேட் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது. இதற்காக ஆப்பிள் நிறுவனம் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி அவசரகால செக்யூரிட்டி அப்டேட்களை வெளியிட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
டொராண்டோ பல்கலைக்கழகத்தின் மங்க் ஸ்கூலில் உள்ள தி சிட்டிசன் ஆய்வகத்தை சேர்ந்த பில் மார்க்சாக் தான் ஆப்பிள் ஐபோன்களில் உள்ள இந்த பாதிப்பை முதலில் வெளிப்படுத்தினார். அதன் பின்னரே ஆப்பிள் நிறுவனம் இதை சரிசெய்வதற்கான அப்டேட்டை வெளியிட்டது. இதுகுறித்த விசாரணை நடந்துகொண்டே இருப்பதால், ஆப்பிள் நிறுவனம் இந்த புதிய செக்யூரிட்டி சிக்கல்களை வெளிப்படுத்தவோ அல்லது உறுதிப்படுத்தவோ இல்லை.

இருப்பினும், ஃபோர்ப்ஸின் சமீபத்திய அறிக்கையின்படி, ஆப்பிள் வெளியிட்ட அவசரகால செக்யூரிட்டி அப்டேட் ஆனது ஐஓஎஸ் 18.3.1-ன் அணுகல்தன்மையில் உள்ள குறைபாட்டை சரிசெய்கிறது. இதன் மூலம் பிஸிக்கல் அட்டாக் வழியாக, லாக்டு செய்யப்பட்ட ஒரு ஐபோனில் யூஎஸ்பி ரெஸ்டரிக்டட் மோட் (USB Restricted Mode) டிசேபிள் செய்வது தடுக்கப்படும்.
நினைவூட்டும் வண்ணம் ஆப்பிள் நிறுவனம் அதன் ரெஸ்டரிக்டட் மோட் அம்சத்தை (ஐஓஎஸ் 11.4.1 வழியாக) ஏறக்குறைய 7 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்தது. இது ஐஓஎஸ்-ன் அனைத்து பிற்கால வெர்ஷன்களிலும் சேர்க்கப்பட்டுள்ளது. இது யூஎஸ்பி-சி அல்லது லைட்னிங் போர்ட்டுடன் இணைக்கப்பட்ட எந்த ஆக்சஸெரீஸ்கள் உடனும் டேட்டா லீக் ஆகாமல் இருப்பதை உறுதி செய்யும் ஒரு பாதுகாப்பு அம்சமாகும்.
இருப்பினும், லாக்டு செய்யப்பட்ட டிவைஸில் ஒரு பிஸிக்கல் அட்டாக் வழியாக யூஎஸ்பி ரெஸ்டரிக்டட் மோட்-ஐ முடக்கலாம். கிரேஷிஃப்ட்டின் க்ரேகீ போன்ற ஹேக்கர் டூல்களை கொண்டு அந்த டிவைஸ்க்கான அணுகலை பெறலாம் என்கிற கவலைகளை தொடர்ந்தே ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன்களுக்கான அவசரகால செக்யூரிட்டி அப்டேட்களை வெளியிட்டுள்ளது.
எந்தெந்த ஐபோன்களுக்கு அப்டேட் கிடைக்கிறது?
ஐபோன் எக்ஸ்எஸ் (iPhone XS) மற்றும் அதற்கு பிறகான மாடல்கள்
ஐபேட் ப்ரோ 13-இன்ச் (iPad Pro 13-inch)
ஐபேட் ப்ரோ 12.9-இன்ச் 3வது தலைமுறை (iPad Pro 12.9-inch 3rd generation) மற்றும் அதற்கு பிறகான மாடல்கள்
ஐபேட் ப்ரோ 11-இன்ச் 1வது தலைமுறை மற்றும் அதற்கு பிறகான மாடல்கள்
ஐபேட் ஏர் 3வது தலைமுறை மற்றும் அதற்கு பிறகான மாடல்கள்
ஐபேட் 7வது தலைமுறை மற்றும் அதற்கு பிறகான மாடல்கள்
ஐபேட் மினி 5வது தலைமுறை மற்றும் அதற்கு பிறகான மாடல்கள்
சமீபத்தில் மெய்டி (MeiTy) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology) ஆனதும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான ஒரு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது ஆண்ட்ராய்டு 12 மற்றும் அதற்கு பிந்தைய சாஃப்ட்வேர் வெர்ஷன்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக குறிப்பிட்ட ஓஎஸ் வெர்ஷன்களை கொண்டுள்ள ஆண்ட்ராய்டு பயனர்கள் அதிக தீவிர சைபர் தாக்குதலை எதிர்கொள்ளக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு-ல் உள்ள இந்த பாதிப்புகளுக்கு காரணம் கட்டமைப்பில் (framework) உள்ள குறைபாடுகள் தான் என்று செர்ட்-இன் தெரிவிக்கிறது; இது சிப்செட் கூறுகளிலும் உள்ள தவறுகளாலும் நடக்கலாம் என்றும் நம்புகிறது.
செர்ட்-இன் கூற்றுப்படி, ஆண்ட்ராய்டில் பதிவாகியுள்ள இந்த பாதிப்புகள் ஹேக்கர்களுக்கு முக்கியமான தகவல்களை அணுக, பெரிய அளவிலான அணுகல்களை பெற, தன்னிச்சையான குறியீட்டை இயக்க அல்லது டார்கெட் சிஸ்டமில் டிஓஎஸ் (DoS) எனப்படும் டினையல் ஆப் சர்வீஸ்-ஐ ஏற்படுத்த வழிவகுக்கலாம். எனவே ஆண்ட்ராய்டு 12 (Android 12), ஆண்ட்ராய்டு 13 (Android 13), ஆண்ட்ராய்டு 14 (Android 14) மற்றும் ஆண்ட்ராய்டு 15 (Android 15) ஓஎஸ் பயனர்கள் தங்கள் மொபைல் போனை உடனே லேட்டஸ்ட் ஓஎஸ்-க்கு அப்டேட் செய்யுமாறு செர்ட்-இன் அறிவுறுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








