Home
News

பேக் டூ பேக் சிக்ஸ்ர் அடிக்கும் ஒன்பிளஸ்.. OnePlus 13T-ஐ தொடர்ந்து 7000mAh பேட்டரி உடன் இன்னொரு புது போன்!

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 13டி மாடலின் அறிமுகத்தோடு நிறுத்திக்கொள்வது போல் தெரியவில்லை. ஏனென்றால் ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 3 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என்கிற பல தகவல்களை தொடர்ந்தே, ஒன்பிளஸ் 13டி அறிமுகமாகி உள்ளது!

ஒன்பிளஸ் 13டி ஆனது இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் ஒன்பிளஸ் 13எஸ் ஆக அறிமுகம் செய்யப்படும் என்பதெல்லாம் ஒருபக்கம் இருக்க, இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அறிமுகம் செய்யப்பட இன்னும் 2 புதிய ஒன்பிளஸ் மாடல்கள் பாக்கி உள்ளன. பெரும்பாலும் இவைகள் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஏஸ்-சீரீஸின் கீழ் தான் அறிமுகமாகும் (பின்னர் நோர்ட் சீரீஸின் கீழ் இந்திய சந்தைக்கும் வரலாம்).

OnePlus 13T-ஐ தொடர்ந்து 7000mAh பேட்டரி உடன் இன்னொரு புது போன்!

முன்னதாக வெளியான சில தகவல்கள் - ஒன்பிளஸ் நிறுவனம் டைமன்சிட்டி 9400இ மற்றும் டைமன்சிட்டி 9400 பிளஸ் சிப்செட்களுடன் 2 புதிய ஸ்மார்ட்போன்களில் வேலை செய்து வருவதாகவும், அவைகள் ஒன்பிளஸ் ஏஸ் 5வி மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 5எஸ் என்று அழைக்கப்படும் என்றும் கூறின. இருப்பினும், டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் புதிய லீக்ஸ், டைமன்சிட்டி 9400இ கொண்டு இயங்கும் மாடலின் உண்மையான பெயர் - ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேசிங் எடிஷன் (OnePlus Ace 5 Racing Edition) என்று வெளிப்படுத்துகிறது.

ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- பிளாட்ட டிஸ்பிளே டிசைன்
- 6.77-இன்ச் LTPS OLED டிஸ்பிளே
- இன்னும் அறிவிக்கப்படாத டைமன்சிட்டி 9400இ சிப்செட்
- 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார்
- 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை லென்ஸ்
- ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- பெரிய 7,000mAh பேட்டரி

ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும்? ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது மே மாதத்தின் இரண்டாம் பாதியில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிற்கு இது ரீஃபிராண்டட் செய்யப்பட்ட நோர்ட் சீரீஸ் ஸ்மார்ட்போனாக வரும் என்று எதிர்பார்ப்பதில் எந்த தவறும் இல்லை; அதே சமயம் அதை உறுதியாகவும் கூறிவிட முடியாது.

முன்னரே குறிப்பிட்டபடி,சீனாவில் ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனாக அறிமுகமான மாடல் இந்தியாவில் ஒன்பிளஸ் 13எஸ் என்கிற பெயரின் கீழ் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா மட்டுமின்றி இந்த முறை அனைத்து சந்தைகளிலும் ஒன்பிளஸ்13டி ஸ்மார்ட்போன் ஆனது அதே பெயரின் கீழ் அறிமுகம் செய்யப்படாமல் போகலாம். ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை உலகளாவிய சந்தைகளில் - ஒரு புதிய எஸ்-சீரிஸின் (OnePlus New S-Series) கீழ் அறிமுகப்படுத்தலாம்.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பெயரிடும் உத்திக்கு பின்னால் உள்ள சரியான காரணம் தெளிவாக தெரியவில்லை என்றாலும், இது சைனீஸ் வேரியண்ட்-ஐ க்ளோபல் வேரியண்ட்-ல் இருந்து வேறுபடுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக இருக்கலாம். சீனாவில் ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் பேஸிக் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.39,805 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 13டி மாடலுடன் - ஒன்பிளஸ் சூப்பர்வூக் 150W பவர் பேங்க்கையும் (OnePlus SuperVOOC 150W Power Bank) அறிமுகம் செய்துள்ளது. இதுவொரு 20,000mAh பவர் பேங் ஆகும். சீனாவில் இது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.4098 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் சூப்பர்வூக் 150W பவர் பேங்க்கின் உலகளாவிய வெளியீடு கூடிய விரைவில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சரியான வெளியீட்டு விவரங்கள் இல்லை. ஒருவேளை ஒன்பிளஸ் 13எஸ் உடன் சேர்த்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
After OnePlus 13T OnePlus Will Launch OnePlus Ace 5 Racing Edition in May 2025 Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X