Home
News

தூக்குங்க சார்.. வேலைய விட்டு தூக்குங்க.. பகீர் கிளப்பும் Elon Musk.. உனக்கென்னப்பா நீ கோடீஸ்வரன்!

ட்விட்டர் (Twitter) மற்றும் டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் உரிமையாளர் ஆன எலான் மஸ்க் (Elon Musk), உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு "பகீர்" பரிந்துரை (Suggestion) ஒன்றை வழங்கியுள்ளார். அதென்ன பரிந்துரை? பகீர் என்று குறிப்பிடும் அளவிற்கு அதில் அப்படி என்ன இருக்கிறது? இதோ விவரங்கள்:

வேலையின் மதிப்பு (value of work) மற்றும் உற்பத்தி திறனை (productivity) அதிகரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களானது ஆட்குறைப்பில் (Layoffs) ஈடுபட வேண்டுமமென்று எலான் மஸ்க் பரிந்துரைத்துள்ளார். ஏனென்றால் ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்திய பின்னர் நிகழ்த்தப்பட்ட ஆட்குறைப்பிற்கு பின்னர், அந்நிறுவனத்தின் உற்பத்தித்திறன் அதிகரித்துள்ளதாம்.

தூக்குங்க சார்.. வேலைய விட்டு தூக்குங்க.. பகீர் கிளப்பும் Elon Musk!

வோல் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அளித்த பேட்டியின் போது, ​​ட்விட்டரின்பழைய நிலைமையை குறிப்பிட்டு இருந்தார். "பெரும்பாலான நிறுவனங்களில், விஷயங்களை முன்னோக்கி நகர்த்த உதவும் தொழிலாளர்களும், உற்பத்தித்திறனை பாழாக்கும் தடைகளை உடைக்கும் பணியாளர்களும் இருப்பார்கள். இருப்பினும் ட்விட்டரில், பத்தில் ஒன்பது பேர் தங்கள் உற்பத்தித்திறனை குறைத்திருந்தனர்" என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபரில் ட்விட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக அவர் பொறுப்பேற்ற பிறகு, ட்விட்டர் நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டது. அதாவது 7500 ல் இருந்து சுமார் 3500 ஆக குறைக்கப்பட்டது. அவர் பொறுப்பேறற்ற அடுத்தடுத்த மாதங்களில் அதிகமான தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்

இன்னும் சிலர் எலான் மஸ்க்கின் "ஹார்ட்கோர்" வேலை கலாச்சாரம் (Hardcore work culture) காரணமாக தானாகேவ முன்வந்து தத்தம் பொறுப்புகளில் இருந்து வெளியேறினர். இப்படியாக தற்போதைய நிலவரப்படி, ட்விட்டர் நிறுவனத்தின் கீழ் தற்போது உலகளவில் வெறும் 1500 தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.

அதே நேர்காணலின் போது, ​​ சிலிக்கான் வேலியில் உள்ள நிறுவனங்களானது தாங்கள் செய்யும் பணிக்கு மதிப்பு சேர்க்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். "நிறைய பேர் மதிப்பு இல்லாத விஷயங்களை செய்கிறார்கள், சிலிக்கான் வேலியில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களுக்கு இது பொருந்தும். அது ட்விட்டரில் இருந்த அளவிற்கு இல்லை என்றாலும், அது இருக்கத்தான் செய்கிறது" என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.

ஆட்குறைப்பு நடவடிக்கைகள் ஆனது ட்விட்டர் செயலிழப்புகளுக்கு வழிவகுத்ததா என்று கேட்கப்பட்டதற்கு, சைட் பிரேக்டவுன்கள் நடக்கின்றன தான் என்று மஸ்க் பதிலளித்தார். இதுபற்றி மேலும் பேசுகையில், "ஆப் செயலிழப்புகள் அசாதாரணமானது அல்ல, எடுத்துக்காட்டாக இன்ஸ்டாகிராம் கூட சமீபத்தில் செயலிழந்தது, அதுமட்டுமல்ல அதுபற்றி புகாரளிக்க பயனர்கள் ட்விட்டருக்கு தான் வந்தன" என்றும் மஸ்க் கேலி செய்துள்ளார்.

இப்படியெல்லாம் எலான் மஸ்க் பேசுவது ஒன்றும் முதல் முறையல்ல. உற்பத்தித்திறன் அடிப்படையில் ட்விட்டரில் உள்ள நிலைமை குறித்து எலான் மஸ்க் பலமுறை பேசியுள்ளார். மேலும் முந்தைய நிர்வாகம் ட்விட்டரை ஒரு இலாப நோக்கற்ற நிறுவனம் போல நடத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

வெகுஜன பணிநீக்கத்தின் (Mass layoff) போது, ​​அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி ஆன பராக் அகர்வால் (Parag Agrawal) உட்பட உயர்மட்ட நிர்வாகத்தையும் எலான் மஸ்க் பணிநீக்கம் செய்து இருந்தார். சமீபத்தில், வீட்டில் இருந்து வேலை செய்வது (Work From Home) தார்மீக ரீதியாக தவறானது என்றும் எலான் மஸ்க் கூறி இருந்தார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
After Job Cuts Twitter Productivity Increased So Elon Musk Suggests Tech Companies To Do LayOffs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X