ஜியோவுக்கு இணையான சலுகைகள் வழங்க தயாராகும் ஏர்டெல், விஐ!

|

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில் ஏஜிஆர் நிலுவைத் தொகையில் 10 சதவீதத்தையும் அடுத்த நிதியாண்டு தொடங்கி 10 தவணைகளாக மீதமுள்ள தொகையை செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் இந்தியாவில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்தித்தது என கூறப்படுகிறது.

இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்கள்

இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்கள்

உலக அளவில் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சேவைகளை வழங்கி வருகிறது. ஜியோ அறிமுகப்படுத்திய குறுகிய நாளில் பெரும் வளர்ச்சி அடைந்தது என்றே கூறலாம். பிற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நிறுவனங்கள் கடும் சவாலை சந்தித்து வருகிறது.

45 லட்சம் பயனர்களை கூடுதலாக இணைத்த ஜியோ

45 லட்சம் பயனர்களை கூடுதலாக இணைத்த ஜியோ

இந்த நிலையில் டிராய் வாடிக்கையாளர்கள் இணைப்பு, இழப்பு குறித்து தகவலை வெளியிட்டது. அதில் ஜூன் மாதத்தில் இருந்து 45 லட்சம் பயனர்களை கூடுதலாக ரிலையன்ஸ் ஜியோ சேர்த்துள்ளதாகவும் இதன்மூலம் ஜியோ தற்போது உள்நாட்டு வயர்லெஸ் தொலைத் தொடர்பு சந்தையில் சுமார் 35 சதவீதத்தைக் கட்டுப்பாட்டை கொண்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து விஐ 48.2 லட்சம் மற்றும் ஏர்டெல் 11.3 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தியேட்டர்கள் மூடும்நிலை

தியேட்டர்கள் மூடும்நிலை

கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. எப்போது திறக்கப்படும் என தெரியாத நிலையையடுத்து தயாரிப்பாளர்கள் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்து வருகின்றனர். இந்த படங்களை வாங்க நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்கள் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றன.

இலவச ஓடிடி அணுகல்

இலவச ஓடிடி அணுகல்

இதை சாதமாக பயன்படுத்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் திட்டமிட்டு வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் உடன் இலவச ஓடிடி அணுகல் அதுவாகும். ரிலையன்ஸ் ஜியோ ரூ.399 விலை போஸ்ட்பெய்ட் திட்டத்தில் நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம், ஜியோடிவி, ஜியோ சினிமா உள்ளிட்ட அணுகலை வழங்குகிறது. அதோடு இலவச டேட்டாக்கள், குரலழைப்புகள், எஸ்எம்எஸ் சேவை ஆகியவற்றையும் வழங்குகிறது.

வானில் இரண்டு நிலா: புதிய மினி நிலவு கண்டுபிடிப்பு- இதோ முழுவிவரம்!வானில் இரண்டு நிலா: புதிய மினி நிலவு கண்டுபிடிப்பு- இதோ முழுவிவரம்!

ஏர்டெல் ரூ.499 திட்டம்

ஏர்டெல் ரூ.499 திட்டம்

ஏர்டெல் ரூ.499 விலையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நெட்பிளிக்ஸ் அணுகல் வழங்காமல் அதே சலுகையை வழங்குகிறது. விஐ ரூ.399 திட்டத்திலான போஸ்ட்பெய்ட் திட்டத்தில் எந்த வித ஓடிடி பயன்பாட்டு அணுலும் இல்லாமல் 40 ஜிபி தரவை மட்டுமே வழங்குகிறது.

ஏர்டெல், விஐ ஓடிடி சலுகை

ஏர்டெல், விஐ ஓடிடி சலுகை

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒன்றோடு ஒன்று போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன. பிரதானமாக இருக்கும் ஓடிடி சேவையை கூடுதலாக வழங்கும் ஜியோவுடன் ஏர்டெல், விஐ ஈடுகொடுக்க ஏணைய ஓடிடி தளங்களுக்கான சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் வருடாந்திர செலவுகள்

கூடுதல் வருடாந்திர செலவுகள்

இதுகுறித்து ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், இத்தகைய இலவசங்களை வழங்காத நிறுவனங்கள் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடம் என்றும் இந்த சலுகைகளை ஏர்டெல், விஐ வழங்கினால் கூடுதல் வருடாந்திர செலவுகள் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
After Jio Effect: Airtel, VI Might Join Hands With Leading OTT Players!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X