Home
News

அம்பானி கொளுத்தி போட்ட வெடி.. Vodafone திட்டங்களின் விலையும் அதிகரிப்பு.. ரூ.600 அதிகம்.. கஸ்டமர்கள் கதறல்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு பிரிவுகளில் உள்ள அனைத்து மொபைல் திட்டங்களுக்கான விலைகளையும் 12% முதல் 25% வரை அதிகரித்தது. இதை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் தனது திட்டங்களின் விலைகளை 10% முதல் 21% வரை உயர்த்துவதாக அறிவித்தது. இவ்விரு நிறுவனங்களுமே தங்களுடைய ரீசார்ஜ் திட்டங்களுக்கான புதிய விலைகளை 2024 ஜூலை 3 ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டுவரவுள்ளன. இதற்கிடையில் வோடாபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமும் தனது ரீசார்ஜ் கட்டணங்களின் விலைகளை உயர்த்தியுள்ளது.

வோடபோன் ஐடியா லிமிடெட் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, அதன் சேவையின் கீழ் கிடைக்கும் 13 ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் 4 போஸ்ட்பெய்ட் திட்டங்கள் என மொத்தம் 17 திட்டங்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. ஜியோ மற்றும் ஏர்டெல்லை போலவே வோடாபோனின் புதிய ரீசார்ஜ் கட்டண உயர்வும் கூட ஜூலை 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Vodafone திட்டங்களின் விலையும் அதிகரிப்பு!

என்னென்ன ப்ரீபெய்ட் திட்டங்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது? வோடாபோன் ஐடியாவின் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் திட்டங்கள் (Unlimited Voice Calling Plans) தொகுப்பின்கீழ், ரூ.179 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் ரூ.199 ஆகவும், ரூ.459 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் ரூ.599 ஆகவும், ரூ.1799 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் ரூ.1999 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல் வோடாபோன் ஐடியாவின் டெய்லி டேட்டா பிளான்கள் (Daily Data Plans) தொகுப்பின்கீழ், ரூ.269 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் ரூ.299 ஆகவும், ரூ.299 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் ரூ.349 ஆகவும், ரூ.319 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் ரூ.379 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Vodafone திட்டங்களின் விலையும் அதிகரிப்பு!

மேலும் ரூ.479 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் ரூ.579 ஆகவும், ரூ.539 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் ரூ.649 ஆகவும், ரூ.719 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் ரூ.859 ஆகவும், ரூ.839 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் ரூ.979 ஆகவும், ரூ.2899 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் ரூ.3499 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

கடைசியாக வோடாபோன் ஐடியாவின் டேட்டா ஆட்-ஆன் பிளான்கள் (Daily Data Plans) தொகுப்பின்கீழ், ரூ.19 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் ரூ.22 ஆகவும், ரூ.39 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் ரூ.48 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது வோடபோன் ஐடியா அதன் ப்ரீபெயிட் தொகுப்பில் குறைந்தபட்சம் ரூ.3 முதல், அதிகபட்சம் ரூ.600 வரை விலை உயர்த்தியுள்ளது.

Vodafone திட்டங்களின் விலையும் அதிகரிப்பு!

என்னென்ன போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது? விஐ போஸ்ட்பெயிட் தொகுப்பின்கீழ், ரூ.401 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் ரூ.451 ஆகவும், ரூ.501 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் ரூ.551 ஆகவும், ரூ.601 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த பேமிலி திட்டம் ரூ.710 ஆகவும், ரூ.1001 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த பேமிலி திட்டம் ரூ.1201 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஏர்டெல் திட்டங்கள் மீதான விலை உயர்வை பொறுத்தவரை ரூ.265 ரீசார்ஜ் ரூ.299 ஆகவும், ரூ.299 ரீசார்ஜ் ரூ.349 ஆகவும், ரூ.359 ரீசார்ஜ் ரூ.409 ஆகவும், ரூ.399 ரீசார்ஜ் ரூ.449 ஆகவும், ரூ.265 ரீசார்ஜ் ரூ.299 ஆகவும், ரூ.299 ரீசார்ஜ் ரூ.349 ஆகவும், ரூ.359 ரீசார்ஜ் ரூ.409 ஆகவும், ரூ.399 ரீசார்ஜ்ரூ.449 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதுதவிர்த்து ரூ.479 ரீசார்ஜ் ரூ.579 ஆகவும், ரூ.549 ரீசார்ஜ் ரூ.649 ஆகவும், ரூ.719 ரீசார்ஜ் ரூ.859 ஆகவும், ரூ.839 ரீசார்ஜ் ரூ.979 ஆகவும், ரூ.2999 ரீசார்ஜ் ரூ.3599 ஆகவும், ரூ.19 ரீசார்ஜ் ரூ.22 ஆகவும், ரூ.29 ரீசார்ஜ் ரூ.33 ஆகவும், கடைசியாக ரூ.65 ரீசார்ஜ் ரூ.77 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
After Jio Airtel Vodafone Announced Tariff Hike On 13 Prepaid 4 Postpaid Plans Effect From July 3
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X