Home
News

போச்சு.. Jio, Airtel-ஐ தொடர்ந்து Vodafone Idea-வின் பேஸிக் ரீசார்ஜிலும் மாற்றம்.. மறைமுக கட்டண உயர்வு அமல்!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல் ஆகிய 2 நிறுவனங்களுமே தத்தம் பேஸிக் ரீசார்ஜ் திட்டங்களை நீக்கியுள்ள நிலைப்பாட்டில், வோடாபோன் ஐடியாவும் (Vodafone Idea) அதன் பேஸிக் திட்டமொன்றில் "கை வைத்துள்ளது".

தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் சில கூடுதல் நன்மைகளை வழங்கிய ஜியோவின் பேஸிக் ரீசார்ஜ் ஆன ரூ.249 பிளான் நீக்கப்பட்ட வேகத்தில், ஏர்டெல் நிறுவனமும் அதன் மலிவு விலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ஆன ரூ.249 பிளானை நிறுத்தி உள்ளது.

Vodafone Idea-வின் பேஸிக் ரீசார்ஜிலும் மாற்றம்.. மறைமுக கட்டண உயர்வு!

ஏர்டெல்லின் என்ட்ரி லெவல் அல்லது பேஸிக் ரீசார்ஜ் ஆக கருதப்படும் ரூ.249 திட்டம் ஆனது, அன் லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களுடன், தினசரி 1 ஜிபி டேட்டாவை வழங்கியது. இதன் நன்மைகளில் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களும் அடங்கும் மற்றும் இந்த திட்டம் 24 நாட்கள் வேலிடிட்டி உடன் வந்தது.

இதற்கிடையில் ஜியோ மற்றும் ஏர்டெல்லை தொடர்ந்து இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா லிமிடெட், ஒரு பயனருக்க்கான சராசரி வருவாயை (Average revenue per user - ARPU) அதிகரிக்கும் நோக்கத்தின் கீழ் முக்கிய ஒரு நடவடிக்காய்யை மேற்கொண்டுள்ளது.

டெலிகாம்டால்க் (TelecomTalk) வழியாக வெளியான ஒரு சமீபத்திய அறிக்கையானது - வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் அடிப்படை திட்டமான ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்திலிருந்து 5ஜி நன்மையை நீக்கியுள்ளது. இந்த திட்டம் இந்தியா முழுவதும் கிடைக்கிறது. தொடக்கத்தில், இந்த மாற்றம் மும்பையில் நிகழ்ந்தது; மேலும் பிற வட்டங்களுக்கும் இது தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வோடபோன் ஐடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன அக்ஷயா மூந்த்ரா (2025 ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை மும்பையில் அணுக கிடைத்த) அறிமுக 5ஜி சலுகையை திரும்ப பெறுவதாக கூறியுள்ளார். இதன் பொருள் ரூ.299 திட்டம் இனிமேல் 5ஜி நன்மையை வழங்காது.

ஆக 5ஜி நெட்வொர்க் தேவைப்படும் விஐ பயனர்கள் இப்போது ரூ.340 திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும். இனிமேல் இதுதான் 5ஜி நன்மையுடன் வரும்வோடாபோன் ஐடியாவின் பேஸிக் ரீசார்ஜ் ஆகும். விஐ நிறுவனத்தின் இந்த நடவடிக்கை (ஜியோ மற்றும் ஏர்டெல்லின் நடவடிக்கைகளை போலவே) நிறுவனத்தின் ஏஆர்பியு-வை அதிகரிக்க அனுமதிக்கும்.

ஜியோ சேவையின் கீழ் நீக்கப்பட்டுள்ள ரூ.249 திட்டமானது, தினமும் 1ஜிபி டேட்டாவை வழங்கிய ஒரே ஒரு ப்ரீபெய்ட் திட்டமாக இருந்தது. இனிமேல் இது ரீசார்ஜ் செய்ய கிடைக்காது. இருப்பினும் ஜியோவின் ரூ.249 திட்டத்தை விட மலிவான திட்டங்கள் இன்னமும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன.

அதாவது ரூ.189, ரூ.198 மற்றும் ரூ.239 ஆகிய திட்டங்கள் இன்னமும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. ஆனால் இந்த திட்டங்கள் ரூ.249 திட்டத்தை விட கணிசமாக குறைவான வேலிடிட்டியை வழங்குகின்றன. இந்த நடவடிக்கையை தொடர்ந்து ஜியோ நிறுவனம் 1ஜிபி தினசரி டேட்டாவுடன் வரும் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

நினைவூட்டும் வண்ணம் ரூ.249 திட்டத்தின் கீழ் பயனர்கள் தினசரி 1 ஜிபி டேட்டாவை பெற்றனர், அதனுடன் இது மொத்தம் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி (28 Days Validity) உடன் வந்தது. முன்னதாக, ரூ.249 திட்டம் 1.5 ஜிபி தினசரி டேட்டாவுடன் வந்தது. பின்னர் இந்த திட்டத்தின்டேட்டா நன்மை டெய்லி 1ஜிபி ஆக குறைக்கப்பட்டது என்பதும், இப்போது மொத்தமாக நீக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்து

இதற்கிடையில் தான் ஏர்டெல் நிறுவனம் அதன் டெய்லி 1ஜிபி டேட்டாவை வழங்கும் ரூ.249 திட்டத்தை நீக்கியுள்ளது. ஆக ஒட்டுமொத்த தனியார் டெலிகாம் நிறுவனங்களுமே தத்தம் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்துவதற்கு பதிலாக தங்களுடைய பேஸிக் திட்டங்களை நீக்கி (நன்மைகளை நீக்கி), பயனர்களின் மீது மறைமுகமான விலை உயர்வை திணித்துள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
After Jio Airtel Removed Basic Rs 249 Plan Vodafone Idea Removes 5G From Its Basic Rs 299 Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X