Home
News

நாங்க இருக்கோம்.. ரூ.140 போதும்.. BSNL-க்கு ஜம்ப் அடிக்கும் Jio, Airtel கஸ்டமர்கள்.. டேட்டா, வாய்ஸ், SMS!

ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) நிறுவனங்கள் தத்தம் பேஸிக் ரீசார்ஜ் திட்டங்களை நீக்கியதன் விளைவாக மறைமுகமான ரீசார்ஜ் கட்டண விலை உயர்வை அமல்படுத்தி உள்ளன. ஜியோ ரூ.249 திட்டம் நீக்கப்பட்டு ரூ.299 திட்டமானது புதிய பேஸிக் பிளான் ஆக உருமாறியுள்ளது. ஆக ஜியோ ரூ.50 மறைமுகமான ரீசார்ஜ் கட்டண விலை உயர்வை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

இதேபோல ஏர்டெல்லும் ரூ.249 திட்டத்தை நீக்கிவிட்டதால், ரூ.349 திட்டமானது ஏர்டெல் கஸ்டமர்களுக்கான புதிய பேஸிக் பிளான் ஆக உருமாறியுள்ளது. ஆக ஏர்டெல் ரூ.100 மறைமுகமான ரீசார்ஜ் கட்டண விலை உயர்வை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்த இடத்தில் தான் "நாங்க இருக்கோம்.. அப்போவும் சரி.. இப்போவும் சரி.. நாங்க விலையை அதிகரிக்கவில்லை" என்று ஆபத்பாண்டவனாய் நிற்கிறது பிஎஸ்என்எல் (BSNL)!

ரூ.140 போதும்.. BSNL-க்கு ஜம்ப் அடிக்கும் Jio, Airtel கஸ்டமர்கள்!

பிஎஸ்என்எல் நிறுவனமானது தொடர்ந்து மலிவு விலை ரீசார்ஜ்களை தக்கவைத்து கொள்வதன் மூலம், ஏற்கனவே இருக்கும் பழைய வாடிக்கையாளர்களையும் தக்கவைத்து கொள்கிறது; கூடவே புதிய வாடிக்கையாளர்களையும் ஈர்க்கிறது. குறிப்பாக ரூ.140 பட்ஜெட்டில், இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ரூ.150 க்குள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் கீழ்வரும் பிஎஸ்என்எல் திட்டம்!

அது பிஎஸ்என்எல் ரூ.141 ரீசார்ஜ் திட்டம் (BSNL Rs 141 Plan) ஆகும். இது 30 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. நன்மைகளை பொறுத்தவரை இது டெய்லி 1.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்கள் மற்றும் 200 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

இருப்பினும், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வரையறுக்கப்பட்ட 4ஜி கவரேஜ் மற்றும் போட்டித்தன்மை இல்லாத நெட்வொர்க் தரம் ஆகிய காரணங்களால் பெரும்பாலான நகர்ப்புற பயனர்கள் ரூ.141-ஐ கருத்தில் கொள்வதில்லை. ஆனால் ஜியோ மற்றும் ஏர்டெல்லிடம் ரூ.100 வரை அதிகம் செலுத்துவதற்கு (ரூ.141 உடன் ஒப்பிடும் போது ரூ.208 வரை அதிகம் செலுத்துவதற்கு), உங்கள் மொபைல் நம்பரை ஆக்டிவ் ஆக வைத்திருக்க பிஎஸ்என்எல்-ன் ரூ.141 எவ்வளவோ மேல்!

இனி ரிலையன்ஸ் ஜியோவின் பேஸிக் ரீசார்ஜ் என்னது? அது ரூ.299 ப்ரீபெய்ட் திட்டமாககும். இது டெய்லி 1.5 ஜிபி அளவிலான டேட்டாவுடன் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. அதாவது இனிமேல் ஜியோ சேவையின் கீழ் டெய்லி 1ஜிபி டேட்டாவை வழங்கும் எந்த திட்டமும் இல்லை. இதற்கு அடுத்தபடியாக ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது. இது டெய்லி 2ஜிபி டேட்டாவை 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது.

இனி ஏர்டெல்லின் பேஸிக் ரீசார்ஜ் எது? அது ரூ.349 ப்ரீபெய்ட் திட்டமாகும். இது டெய்லி 1.5 ஜிபி அளவிலான டேட்டாவுடன் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. ஜியோவை போலவே இனி ஏர்டெல்லின் கீழும் டெய்லி 1ஜிபி டேட்டாவை வழங்கும் எந்த திட்டமும் இருக்காது. இதற்கு அடுத்தபடியாக ரூ.361 ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது. இது மொத்தம் 50ஜிபி டேட்டாவை 30 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது.

வோடபோன் ஐடியாவின் பேஸிக் திட்டங்கள் (மாற்றம் இல்லை): அது ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆகும். இது டெய்லி 1 ஜிபி அளவிலான டேட்டாவுடன் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. இதற்கு அடுத்தபடியாக வோடாபோன் ஐடியாவிடம் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது. இது டெய்லி 1.5 ஜிபி டேட்டாவை 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது. கடைசியாக ரூ.408 ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது. இது டெய்லி 2 ஜிபி டேட்டாவை 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
After Jio Airtel Basic Recharge Changes Customers Looking Into BSNL Rs 141 Plan 30 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X